வெள்ளி, 4 மார்ச், 2016

ஹைக்கூ என்றால் என்ன?

ஹைக்கூ என்றால் என்ன?
*
பிளித், ஹைக்கூ பற்றிக் கூறியிருப்பது, நம் கவனத்திற்குரியது. “ ஹைக்கூ செய்யுள் அல்ல. இலக்கியமல்ல. அது நம்மைத் தட்டி அழைக்கும் கை. பாதி திறந்திருக்கும் கதவு. சுத்தமாகத் துடைக்கப்ட்ட கண்ணாடி. இயற்கையின்பால் நம் கவனத்தை ஈர்க்கும் இலக்கிய வடிவம். குளிர்கால மழையையும் மாலைப் பறவையையும் உஷ்மான பகலையும் நீண்ட இரவையும் நம் முன் உயிர் பெறச் செய்யும் உத்தி. பேசாமல் பேசி, நம் மனிதாபிமானத்தில் பங்கு கொள்ளும் இலக்கியச் சாதனம்.
இலக்கிய வடிவங்களில் ஹைக்கூ எளிய, ஆனால் நுண்ணிய உணர்வுகள் கொண்டது. கபடமற்ற எளிய தன்மை அதன் சிறப்பம்சம். கலைப் படைப்பா அவ்லது இயற்கையின் படைப்பா என்று மயங்க வைக்கும் தன்மையுடையது.
ஆதாரம் ” ஜென் கதைகள் – கவிதைகள் – நூல் பக்கம் 46.
தகவல். ” ந.க.துறைவன்.
*  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக