ஞாயிறு, 8 ஜனவரி, 2017

நீர்த்துளிகள் முத்தாட...!! ( ஹைபுன் )



பனிநீரில் இலையாட, குருவிகள் சிலிர்த்தாட. காற்றில் மலராட, நீர்த்துளிகள் முத்தாட, பசுக்கள் நடைபோட, கன்றுகள் பின் துள்ளாட, நடுங்கும் குளிரில் விடியற்காலை வெள்ளென வெளுக்கும் பொழுதில் விழித்தெழுந்தாயே மார்கழியே, உனை ஆண்டாள் துதிபாட, பக்தர்கள் பின்பாட, பனிசூழ்ந்த வெளியெங்கும் சூரியன் ஒளி பரப்ப, பறவைகள் படபடத்து எழுந்து பறக்க, பால்கறக்கும் பசுக்கள் நின்று புல்தின்று பால்சுரக்க, மாடுகள் வயலில் உழுது மணியசைக்க, உழவன் வயல் உழுது மனம்சலிக்க, பகல்போது துவங்கியது. கிராமம் தன்பணிகள் நிறைவேற்றிடவே விழிப்புற்று விழித்தெழுந்ததுவோ!!                            

குடிசைகளை நேசிக்கும்
கருணை உள்ளம் படைத்தவைகள்
மார்கழியில் மலரும் பூசணிகள்.

1 கருத்து: