சனி, 12 செப்டம்பர், 2015

தும்பி...!! [ ஹைபுன் }

ஸென் குரு ஒரு ஹைக்கூ எழுதினார் :
*
தும்பியொன்று
பாறையின் மீது
நண்பகற் கனவுகள்.
ஹைக்கூக்கள் சாதாரண கவிதார்த்தத்துடன் கூடிய கவிதைகள் அல்ல. அவை கவித்துவம் நிறைந்தவை. அவை கண்களில் படரும் காட்சிகள். எனவே கண்ணுறுங்கள். ஒரு தும்பி பாறை மீதமர்ந்து பகற்கனவுகள் காணுகிறது. சுயப்பிரக்ஞை இல்லாத ஒவ்வொரு மனிதனின் நிலையும் இதுதான். தும்பி மட்டுமல்ல, நீயம் கூடக் கனவுகளிலேயே வாழ்கிறாய். விழிப்புணர்வின் தூண் ஒன்று உனக்குள் உருவாகாத வரை, நீ கனவுகளிலும், பயங்கர மனக்கிலேசங்களிலும் தான் வாழ்ந்துக் கொண்டு இருப்பாய். உன் வாழ்வே வீணாகி விடும். அது நிறைவடையாமலே, பூரணமாகாமலே, பிரபஞ்ச லயத்துடன் லயித்து ஒர் ஆழ்ந்த இரண்டறக் கலந்த அனுபவப் பூர்த்தி ஏற்படாமலே சென்று விடும். அது ஒன்றுதான் [ அனுபவத்தின் சுகந்தம் ] அனுபவிக்கத் தகுந்த சுகந்தம். ,இதைக் காட்டிலும் விஞ்சியதொன்றுமில்லை.
.ஆதாரம் : ஓஷோவின் “ பிரபஞ்ச ரகசியம் ” ஸென் ஹைக்கூ – பக்கம் 20 -21.
தகவல் : ந.க.துறைவன்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக