ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

எது வாழ்க்கை...,?


*        
பாஷோ எழுதினார் :
வாழ்க்கை என்பதாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமே. அது என்ன?
ஒர் பனிக்காலச் சூறைக்காற்று
மூங்கில்களுக்கிடையில் மறைந்து
அமைதியில் ஒடுங்குகிறது.
ஒரு சிறிய நாடகமே. சிறிது நேர விளையாட்டே.அது.  பிறகு நீ மறைந்து விடுகிறாய். நாம் வாழ்க்கை என்று கருதுவது மிகவும் நிலையற்றது. அதனால் பற்றுக் கொள்வதென்பதே கூடாது. அதன் ஒரே செயல் – சரியான ஒரே செயல் – நித்யத்துவத்தைக் கண்டு உணர்வதே. ஒவ்வொரு கணத்திலும் நித்யத்துவம் ஔிர்ந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உங்கள் பேரறிவின் ஆழத்திற்குள் ஒருபோதும் செல்லாமலேயே மேலோட்டமாகவே. நீங்கள் சென்று விடக்கூடும். அலைகளைப் போலவே ஆயிரமாயிரம் பிறவிகளிலும் நீங்கள் மேலோட்டமாகவே இருந்துவிட்டுப் போய் விடுவீர்கள். அது உங்களின் சுயத்தன்மையை, உங்களின் படைப்புத் திறனை, உங்களின் அழகை, உங்களின் உற்சாகத்தை இவையனைத்தையும் திறக்கக் கூடிய  அளவற்ற விழிப்புணர்வை உருவாக்காமலேயே வீணாக்கி விடுகிறது. ஆனால் ஒவ்வொரு கணமும் அற்புதமான நடனமாகும். நற்கணங்களாகவே இருக்கின்றது.
ஆதாரம் : ஓஷோவின் பிரபஞ்ச ரகசியம் – ஸென் ஹைக்கூ நூல் – பக்கம் – 31.

தகவல் : ந.க.துறைவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக