வியாழன், 4 ஜூலை, 2019

பூக்கள்

பூக்கள் 1. எது புதிய பூ, எது பழைய பூ? இனம் அறிய இயலவில்லை கலப்படமாய் பூக்குவியல். 2. குப்பைகள் நிறைந்த தரை பூக்கடையில் மலர்கள் வாசம் மருக்கொழுந்து தவனம் எனை ஈர்த்தது கவனம். 3. பூக்கடைக்காரரிடம் இல்லை பூப்போல மனசு. 4. அழகிய காந்த கவர்ச்சி வீதியில் கொட்டினர் விற்காது தேங்கிய பூக்கள். 5. கூடை நிறைய பூக்கள் மனசு நிறைய வியாபாரம் கல்லாவில் பணத்தாள்கள். 6. பூ பொக்கை கொடுத்து பூ பொக்கை வாங்கினர் அசைந்தன இருவர் உதடுகள். 7. அழகாய் அணிந்த காட்சி சிலைகள் உணருமோ? பூக்களின் நறுமணம். 8. நாரில் அடர்ப் பூக்கள் விரோதமின்றி கூட்டணி வண்ணமலர் மாலைகள். 9. பூக்காரியின் வறுமை பேருதவி புரிகிறது நாளும் பூ வியாபாரம். 10. பறித்து எடுத்தபோது பதட்டமின்றி வீழ்ந்தது பூவின் ஆன்மா. 11. பறந்து திரிந்து வேவு பார்க்கும் வண்ணத்துப்பூச்சிகள் அறியுமோ? பூக்கள் கலவி ரகசியம். 12. பூக்களுக்கு ஏனோ இல்லை வண்ணத்துப்பூச்சிகளைத் தூரத்தி விரட்டும் துணிவு. 13. பூக்காரி மரணம் உடலைப் போர்த்தியது அஞ்சலி மலர் மாலைகள். 14. விடியல் பொழுதில் எந்த சாமத்தில் பூக்கள் இதழ் விரித்து மலர்கிறது பிரபஞ்ச வெளியில். 15. பார்க்கும் வெளியெங்கும் பூர்ண தரிசனம் எங்கெங்கும் புத்தம் பூக்கள். 16. எது? தும்பை பூக்களை விட சிறிய பூ. 17. என்றேனும் ஒருநாள் பார்க்க இயலுமோ? அழகான அத்திப் பூக்கள். 28. தும்பை பூவின் நுனியில் சுற்றி வந்து எதைத் தேடுகிறது? அந்த ஒற்றை சிற்றெறும்பு. ந க துறைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக