திங்கள், 8 ஜூலை, 2019

காக்கைகள்

காக்கைகள் 1. தூக்கி சென்றது காக்கை எங்கோ வைத்து படித்து மகிழ எனது ஒரு ஹைக்கூ. 2. கிழவிகளை ஏமாற்றுவதில்லை கொஞ்சம் விவேகமானது வடை திருடும் காக்கைகள். 3. பொல்லாத காக்கைகள் அதுகள் எதையும் மறைத்திட முடியாது அடுத்த வீட்டில் போட்டது எலும்புதுண்டு. 4. கூட்டமாய் சேர்ந்து ஒருமணி நேரம் நதிக் கரையில் பிரார்த்தனை மழை வேண்டி காகங்கள். 5. புத்திசாலித்தனமாக செயல் கண்டபடி நிற்பதில்லை சில வீடுகள் தான் போகிறது தன்மானக் காக்கைகள். 6. அங்கேதான் நீரருந்தும் தினம் காக்கைகள் மட்டுமே அறியும் மண்மூடி புதைக்கப்பட்டக் குளம். 7. நாளை என்னை சந்திக்க வரும் பாராட்டவோ, திட்டவோ கூட்டமாய் காக்கைகள். 8. நீரற்று வறண்டு பலவருடங்கள் கழிந்தும் குளம் மௌனமாய். 9. இளம் வாலிபர்களுக்கு இப்பொழுது வாலிபால் மைதானம் வறண்ட குளம். 10. காற்று வெளியில் எங்கும் நிஜம் தேடும் பறவைகள் கற்பனையில் கரைகிறது வாழ்க்கை. 11. மனம் லேசானது சூழலுக்கேற்ப உதிர்ந்தது நகைச்சுவைப் பேச்சு. 12. தற்செயலாய் பகிர்ந்தனர் கிண்டல் பேச்சு புன்னகையோடு உடைந்தது போனது அவன்மனம். ந க துறைவன். ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக