வியாழன், 11 ஜூலை, 2019

நாகப் பழம்.

நாகப் பழம் 1. நான் எப்பொழுதும் நானே நான் என்பதற்குள் இருப்பாக இருக்கிறேன் நான். 2. எத்தனை வன்குணம்? உடைத்து நொறுக்கியவர் யார்? சிதைந்த புத்தர் சிலை. 3. சிலையின் பெயர் சிவன் வடித்த சிற்பி யார்? பொறிக்கப்படவில்லை பெயர். 4. ஒரு நதி என்னை அழைக்கிறது புனித நீராடுவதற்கு. 5. குருவைத் தேடுவது போன்றது நல்ல புத்தகம் தேடுவது. 6. ஆதியில் கல்வி அறிவற்ற ஆதிவாசிகள் ஆழ்ந்து படித்த புத்தகம் இயற்கை ஒன்றே. 7. பறந்து சென்று பின்னும் பட்டாம்பூச்சியின் நுண்துகள் என் விரல்களில் இன்னும்... 8. தரையெலாம் நீலவண்ணம் சிறுவன் மண் ஊதி ருசித்து தின்றான் நாகப் பழம். 9. கூடை நிறைய நாகப் பழம் டம்ளரில் அளந்து விற்கிறாள் வயது முதிர்ந்த கிழவி. 10. நாகமரத்தில் முனி வாசம் ஊர்மக்கள் நெருங்க பயம் துணிந்து இரவு உறங்கும் பறவைகள். 11. கோயிலில் குடியிருப்பது அசலா? போலியா? மக்கள் வணங்கும் மூலவர்கள் 12. பொறி தின்றவாறு என்னிடம் பேசின குருவிகள் பூங்காவின் ரகசியங்கள். ந க துறைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக