வெள்ளி, 18 அக்டோபர், 2019

ஊரில் திருவிழா...!! { கவிதை }.

*
ஊரில் திருவிழா…!! { கவிதை }
*
உங்க ஊரு
திருவிழாவுக்கு
அழைத்துப் போ
தம்பி !.
*
தீமிதி வைபவத்தை
கிட்ட நின்னுப் பார்க்கணும்
திரௌபதி கூந்தல்
முடித்து அக்னி
மடியேந்தும் காட்சியை
அருகிருந்துப் பார்க்கணும்
எனைக் கரம்பிடித்து
அழைத்துச் சென்று
அத்தனையும் காட்டு தம்பி.!.
*
வாணவேடிக்கை
கொஞ்சம்
தொலைவிலிருந்துக் 
காட்டு தம்பி !.
*
வெப்பம், புழுக்கம்
போக்கிடவே
சில்லுன்னுக்
கோலி சோடா ஒண்ணு
வாங்கி கொடு தம்பி !.
*
பஞ்சு மிட்டாய் பொரிகடலை
சவ்வு மிட்டாய் கரும்பு சாறு
வாங்கி கொடு தம்பி !.
*
பாம்புத் தலைப்
பெண் அழகைப் பார்க்கணும்
எங்கிருக்கோ அங்கே
அழைத்துப் போ தம்பி !.
*
ரங்கராட்டினம் ஏறி
குதிரையிலே
சவாரிப் போகணும்
ஏற்றிவிடு தம்பி !
*
இராத்திரிக்குக்
கரகாட்டம் மயிலாட்டம்
பார்ப்பதற்குத்
துணையிருப்பாய் தம்பி !.
*
திரௌபதி சபதம்
முடிச்ச கடைசித்
தெருக்கூத்துப்
பார்த்துக் களிக்கணும்
பாட்டைக் கேட்டு
ரசி்க்கணும் தம்பி.
கட்டியங்காரன்
நகைச்சுவையைக்
கேட்டு சிரிக்கணும்
தம்பி.!..
*
ஆகா, விடிய விடிய
கூத்துப் பார்த்து
அசந்துத் தூங்கிட்டேன்
ஊருக்குப் போவதற்கு
எத்தனை மணிக்கு
பஸ் தம்பி !.
*
- { தம்பி கவியருவி. ம. இரமேசுக்கு.}

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக