சனி, 1 மார்ச், 2014

பிறந்த மண்.

*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

*
இருட்டில் பாதை தெரியவில்லை
டார்ச் அடித்து வரும்
மின்மினிப் பூச்சிகள்.
*
கடலை உருண்டை காட்பரீஸ்
இனிப்பிலும்
வர்க்க பேதம்.
*
கண்ணாடி நீருக்குள்
விடுதலைக்குப் போராடும்
பொன்னிற மீன்கள்.
*
அழகான வீடு கட்டிய பின்
அடிவயிற்றைக் கலக்கியது
வாங்கிய கடன்.
*
வீதியில் முடவன் வரைந்த
ஏசு ஓவியம் நெஞ்சின் மீது
நிறையச் சில்லறைகள்.
*
என்ன தவறு செய்ததற்காக
இநத தணடணை? மரக் கிளையில்
தலைகீழாய் வௌவால்
*
இறந்தநாள் இருபதாம் தேதி
சம்பளம் வா.ங்க சந்தோஷமாய்
உயிர்த் தெழுந்தான் முதல் தேதி.
*
உன்வாழ்விற்கு ஓளி விளக்கேற்று
பிறந்த நாள் விழாவில் ஏன்?
இருட்டாக்க அணைக்கிறாய் மெழுகுவர்த்தி.
*
வன்முறைக்கும்
மூன்று காந்திகள் பலி
அகிம்சை நெறி பிறந்த மண்.
*
கண்ணாடிக் கூண்டில் நின்று
கொடியேற்றிப் பேசினார் பிரதமர்

சுதந்திரத் தின விழா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக