சனி, 1 மார்ச், 2014

நமட்டுச் சிரிப்பு

ந.க.துறைவனின்
குழந்தைகள் சார்ந்த ஹைக்கூ கவிதைகள்
*
யார் கண் பட்டதோ?
பாட்டி திருஷ்டி சுற்றுவதைப்
பார்த்துச் சிரிக்கும் குழந்தை
*
எம்பி எழுந்து விழுந்து எம்பி
கைக்கால்கள் தூக்கித்
தவழ்ந்திட முயலும் குழந்தை
*
முக்கி முணகிக் கைகள் ஊன்றி
முயற்சி செய்கிறது
கவிழ்ந்து படுக்க குழந்தை
*
அழுது பால் குடிக்கும்
அழகாய் தூங்கும்; இன்னும்
சிரிக்கத் தெரியாத குழந்தை
*
நரிமிரட்டும் கனவு
நமட்டுச் சிரிப்பு உதட்டில்

தூளியில் தூங்கும் குழந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக