ஞாயிறு, 2 மார்ச், 2014

பலாச் சுளை

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

*
பயணக் களைப்பு கவலை
நிழலில் உட்கார்ந்தான் சோம்பி
அனுதாபப்பட்டது மரம்.

*
வயல்வெளியில் ஓரே சத்தம்
மழை பெய்த இரவு
தூங்கவில்லை தவளைகள்.
.
*
மனிதர் எவரும் காணவில்லை
பாறையின் மேல் இருக்கிறது.
கம்பளித் துப்பட்டா.



*
மெல்ல விசிறிக் கொண்டிருந்தான்
ஈக்கள் மொய்க்கா திருக்கப்
பலாச் சுளை விற்பவன்.



*
திருமண விருந்தில்
தீடீரென மின் தடை
ஓளி சிந்தும் செல்போன்கள்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக