திங்கள், 3 மார்ச், 2014

ஞான மொழி

*திரு.நா.விச்வநாதன் ஹைக்கூ கவிதைகள்

*
என்ன பனி
பேச ஆளில்லை
காத்திருக்கும் புத்தஞானம்.
*
பரதேசி நடைப் பயணம்
எல்லாம் விட்ட பின்னும்
இருக்கிறது புத்தன் சாயல்.
*
தனிமை பற்றிக்
கேட்டுப் பயனில்லை
புத்தன் கூர்விழி.
*
சாய்ந்து விழப் பேரச்சம்
வான் தாங்கும் கொஞ்சம்                   
மீதி செங்கடலில்.
*
தாத்தாவின் கைத்தடி
பயணக் கதை கூற
கோழை நின் காலடிகள்.
*
தீவிரப் போர்
மனித முகங்களையே
கூர்ந்துப் பார்க்கும் புல்.

நன்றி:-மின்மினி-ஹைக்கூ இதழ்

எண்:- 21-22 நாகப்பட்டினம் சிறப்பிதழ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக