திங்கள், 3 மார்ச், 2014

ஞானி

ந.க துறைவன் ஹைபுன் கவிதை
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இறந்த செய்தி
மன அதிர்ச்சியைத் தந்தது. அவர் ஆற்ற வேண்டிய
பணிகள் குவிந்துக் கிடைக்கும் போது, அவரின் திடீர்
மரணம் இயற்கைச் சுற்றுச் சூழல் இயக்கத்திற்குப்
பேரிழப்பாகும். மரம்,செடிகள் மனமிரங்கி அழுதன.
வரப்பில் வரும்போதே வயல்களில் நிற்கும் நெற்
பயிர்கள் தலைத் தாழ்த்தி வணங்கும். அவைகள்
இன்று தலை குனிந்து அஞ்சலி செய்தன. மண்ணை
நஞ்சாக்கும். செயற்கை உரங்களை எதிர்த்துப்
போராடியதற்காக, வளமான விவசாய நிலங்கள்
விம்மி அழுது நன்றி சொல்லின. அவரைப் பார்த்து
புன்னகைக்கும் பூக்களெல்லாம், அவரின் மென்மையான
உடலில் படர்ந்துப் போர்த்தி அஞ்சலி செய்தன.

மரணிக்க வில்லை
மண்ணின் நெஞ்சில் வாழ்கிறார்
மண்ணை நேசித்த {விஞ்} ஞானி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக