புதன், 31 டிசம்பர், 2014

ஏகாந்த வெளி...!! [ ஹைக்கூ ]

N.G. THURAIVAN'S HAIKU. 
*
யாருமற்ற சூன்ய வெளி
அமைதி நிரம்பிய
துணிச்சலானப் பறவைகள்
*
ஏகாந்த வெளியில்
கவனிப்பாரற்ற
ஏராளமான புல்பூண்டுகள்
*
குக்கூ, பொய்க்கூ, போலிக்கூ
எல்லாமே இன்று
மெய்க்கூ ஹைக்கூ கவிதைகள்.
*

நல்வாழ்த்துக்கள்...!!

*
WISH YOU A HAPPY NEW YEAR.
அன்பு நண்பர்கள்
அனைவருக்கும்
ஆங்கிலப் புத்தாண்டு
இனிய நல்வாழ்த்துக்கள்
காலை வணக்கம்
வாழ்க வளமுடன்.

*

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

அழிப்புகள்...[ சென்ரியு ]

*
N.G.THURAIVN'S SENRYU>
*
ஆதித் தமிழ்நாட்டு வளம்
அழித்தவர்கள் செழித்தார்கள்
கிராமங்கள் மலைகள் அழிப்பு.
*
ஆறுகள் நதிகள் அழித்தான்
விவசாயம் அழிந்தான்
இயற்கையின் எதிரி மனிதன்

*

அழிப்புகள்...!! [ சென்ரியு ]

*
N.G.THURAIVAN'S SENRYU.
*
ஆதித் தமிழ்நாட்டு வளம்
அழித்தவர்கள் செழித்தார்கள்
கிராமங்கள் மலைகள் அழிப்பு.
*
ஆறுகள் நதிகள் அழித்தான்
விவசாயம் அழிந்தான்
இயற்கையின் எதிரி மனிதன்


சனி, 27 டிசம்பர், 2014

சாத்வீகம்...!! [ சென்ரியு ]

வீட்டிலே ஆத்திகன்
வெளியிலே நாத்திகன்
பேசுவதோ முற்போக்கு
சாத்வீகம்.
*
இருளின் அணைப்பில்
இரகசியப் பேச்சு
கேட்டு சிரிக்கிறது பல்லி.
*























திங்கள், 22 டிசம்பர், 2014

உருமாற்றம்...!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU.
*
உருமாற்றம் பெறுகின்றன
காய்கறிகள்
மாற்று மரபணுப் பயிர்கள்.

கீரை அலசிய தண்ணீரில்
துடித்து தவிக்கின்றன
சின்னச் சின்னப் புழுக்கள்.
*
இன்னும் பல் துலக்குகிறார்கள்
உமிக் கரியால் பகட்டில்லாமல்
கிராமத்து மனுசர்கள்

*

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

தும்பிகள்...!! ஹைக்கூ ]

*
N,G. THURAIVAN'S HAIKU.
தும்பைப் பூவின் மீது
அமைந்து எதையோ?
ஆராய்கிறது தும்பிகள்.
*
வரலாற்று சின்னமாய்
பாஷோவின்
தவளை குதித்த குளம்.
*
துவங்கிய இடத்திலேயே
முடிந்தது
ஓட்டப் பந்தயம்.
*

வெள்ளி, 5 டிசம்பர், 2014

அணுக்கதிர்கள்....!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU.
*
அணுக்கதிர் அழுக்கு நீரில்
நீந்தி விளையாடுகின்றன
கடல் மீன்கள்.
*
கடல் மீன்கள் வயிற்றில்
கலந்திருக்கின்றது
அணுக்கதிர் வீச்சுகள்.
*
அணுநீரை மீன்கள் குடிக்கின்றன
மீன்களை மனிதன் உண்கின்றான்
மனிதனை உண்கிறது மண்.
*
அன்னிய நாடுகள் அணுக்கழிவுகள்
அள்ளி வந்துக் கொட்டும்
குப்பைத் தொட்டி இந்தியா.
*
அன்னியநாடுகள் மூடுகின்றன
இந்தியா திறக்கின்றது
அணுஉலைக் கூடங்கள்.
*

உயிர்ஜோதி...!! [ ஹைக்கூ ]


*
அணுவுக்குள் அணுவாய்
எங்கே தொடங்கியது?
இன்றும் அணையாத ஜோதி்
*
இரத்தமாய் எண்ணெய்
திரி நரம்பில்
பிரகாசிக்கின்றது தீபம்.
*
உயர் மலையில் சுடர்கிறது
எல்லோரும் தரிசிக்கின்றனர்
எனக்குள் ஒரு ஜீவஜோதி.
*
ஜோதிக்குள் ஜோதியாய்
ஜோதியுள் ஐக்கியமாகிறது
மானுடத்தின் உயிர்ஜோதி.
*
உணர்த்துவது என்ன?
உயிர்த் தத்துவமாய்…
ஒளிர்கின்றது கார்த்திகை தீபம்.
*

செவ்வாய், 2 டிசம்பர், 2014

பாதுகாப்பு...!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU. 
வானில் பிரகாசிக்கின்றன
எங்கே என்று கண்டுபடிப்பது?
கார்த்திகை நட்சத்திரப் பெண்கள்
*
.மழை வெள்ளப் பெருக்கு
மண்ணே தெரியவில்லை
வெடித்து கிடந்த வயற்காடு.
*
சுதந்திரமாய் பாயும் தண்ணீர்
பாதுகாப்பு வளையத்திற்குள்
முல்லை பெரியார் அணை.
*