சனி, 31 மே, 2014

எல்லாமே ஒரே நிறம்...!! [ கவிதை ].

*
Na.Ga. Thuraivan's Haiku.
*

அச்சுறுத்துகிறது அச்சம்
விடுதலைப் பெற துடிக்கிறது
சாதுர்யமாய் மனம்.
*
வேண்டுவது வேண்டாமென
பொய்யாய் உரைக்கிறது
சஞ்சலமாய் சபலம்.
*
பார்ப்பதெல்லாம் நிறமல்ல
நிறம் பலவாயினும்
எல்லாமே ஒரே நிறம்.
*

   

வியாழன், 29 மே, 2014

காற்றை நேசித்து...!! { ஹைக்கூ }.

*
Na.Ga.Thuraivan's Haiku.
*
*

காற்றை நேசித்து
உறவு கொள்கின்றன
பசுமையான மரங்கள்.
*
சுற்றுச் சூழல் மாசு
மாநாட்டில் விவாதித்தன
சிட்டுக் குருவிகள்.
*
பெட்ரோல், டீசல் கக்கும்
நச்சுப் புகை எதிர்த்து
போராடுகின்றன காற்று.
*
தடுமாறி திரிகின்றன
வழி தவறிவிட்டு
தவிக்கும் பறவைகள்.
*
அடர்வனத்தில் தேடல்
துப்பாக்கிச் சூட்டில்
புள்ளிமான்கன் மரணம்.
*



செவ்வாய், 27 மே, 2014

நாய்க் குட்டி....!! { சென்ரியு ].

*
Na.Ga. Thuraivan's Senryu.
*
தாய்ப்பால் நினைவோடு
அம்மன் சிலையைப் பார்த்து
அழுகை நிறுத்தியது குழந்தை.
*
தாய்ப்பால் கேட்டு
அழுவதில்லை
பால்காரியின் குழந்தை.
*
கன்று பால் குடிப்பதை
அருகில் நின்று பார்க்கிறது
நாய்க் குட்டி.  


ஞாயிறு, 25 மே, 2014

நீரில் அலையும் மீன்கள்...!! { ஹைக்கூ }.

*
Na.Ga. Thuraivan's Haiku,
*
*
நேரம் தவறாமல் தினமும்
வணங்குகிறது சூரியனை
சூரிய காந்திப் பூ.
*
தன் நிழலை நீரில் }ஸ}
தானே பார்க்fகிறது
தாமரைப் பூ.

*
வண்ணங்களால் அழகு செய்து
பெண்களை ஈர்க்கிறது
மருதாணி.

*
நீரைத் தூய்மை செய்கிறது
அழுக்கைத் தின்று
நீரில் அலையும் மீன்கள்.

*
திருமண மேடையை பளிச்சென
அழகு செய்கிறது
காகிதப் பூக்கள்.
*
   



வெள்ளி, 23 மே, 2014

குசும்பு பேச்சு...!! { ஹைக்கூ }

*
Na.Ga.Thuraivan's Haiku,
*
நிர்மலமான பரந்த ஆகாயம்
எண்ணங்கள் கடந்த மனம்
வார்த்தைகளற்ற மௌனம்.
*
விசும்பை எட்டும்
குசும்புப் பேச்சு
கலக மொழி.
*
யார் வெறுத்தாலும் சரி
என்னைக் கவரும் அழகு நிறம்
காக்கையின் கருமை.
*
சொல்லடி படுவான் மனிதன்
கல்லடி படுவான்
கனி தரும் மாமரம்.
*
குறைந்தால் குறைபடுவார்கள்
மிகுந்தால் சபிப்பார்கள்
மண்ணில் இறங்கும் மழை.
*


புகழ்ந்து பேசினால் மனைவி...!! { சென்ரியு }

*
Na.Ga. Thuraivan's Senryu.
*
பூனை நாய்க்கு நுழைய
அனுமதியில்லை
வீட்டின் பூசை அறைக்குள்.
*
சமையல் அறையில் எப்பொழுதும்
காவலிருக்கிறது
கருப்புப் பூனைக் குட்டி.
*
தாத்தா பாட்டி அறைக்குள்
யாரும் செல்லக் கூடாது
தடையை மீறும் பேரன்.
*
ஜவுளிக் கடையிலிருந்து
வெளிவரவே மனசில்லை
வண்ணத்துப் பூச்சிகளுக்கு.
*
மனைவியின் சமையலைப் பாராட்டினான்
ஒட்டல் சாப்பாட்டைப்
புகழ்ந்துப் பேசினால் மனைவி.

* .

புதன், 21 மே, 2014

வற்றிய அணையில்...!! [ ஹைக்கூ ].

*
கோபுரமும் சிலைகளும்
அழகாய் இருந்தன
வற்றிய அணையில்..
*
புரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும்
கேட்கத் தூண்டும்
பறவைகளில் கிசுகிசுப்பு.
*
பேரூந்து இரைச்சலிலும்
கேட்கத் தூண்டும்
குருடனின் குழலிசை.
*
ஆதாரம்;- கவிஞர். நா.வே. குமாரின்
“ நீ காதலாய்.. நான் கவிதையாய…. என்ற நூல்.ள

*

செவ்வாய், 20 மே, 2014

நிழலைத்தேடி....!! [சென்ரியு }.

*
Na.Ga. Thuraivan's Senryu.
*
துளி மழையில்லை
மின் விளக்கில்லை
வெறுப்பில் தெரு நாய்கள்.
*
வெயில் புழுக்கம் அனல்
நிழலைத் தேடி வெளியில் வந்தன
பயமுறுத்தும் பூரான்கள்.
*
தென்னம் பிஞ்சுகளைத் தொட்டு
விளையாடி ஓலை நிழலில்
திரிகின்றன அணில்கள்.
*


திங்கள், 19 மே, 2014

கிராமத்து வாடை...!! [ லிமரைக்கூ ].

*
Na.Ga. Thuraivan's Limaraiku.
*
கருமலையோ மிக உயரம்
அழகுப்படுத்துகிறது நெட்டையான
ஒற்றை பனைமரம்.
*
பேச்சில் கிராமத்து வாடை
வியாபாரம் செய்ய வந்தவள்
தலையில் தயிர் கூடை.
·          
யாரோ ஏற்படுத்திய சினம்
பொறுத்தக் கொண்டான். எப்படியோ?
அமைதியடைந்தது மனம்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு ரகம்
ருசியாய் விரும்பிக் கடித்துச் சிலர்
சாப்பிடுவதோ விரல் நகம்.
*
நடப்பதற்கு ஏனிந்தச் சிக்கல்
காலை உறுத்தியது
காலணிக்குள் சிக்கிய சிறுகல்.

*

சிரித்தார் நந்தி...!! { ஹைக்கூ }.

*
காதில் குசுகுசு வென்று
பிரார்த்தனையைச் சொன்னார்கள்
மௌனமாய் சிரித்தார் நந்தி.
*
புற்றில் பால் முட்டை ஊற்றி
பூசை செய்தார்கள்
குடிச்சிருக்குமோ பாம்புகள்.
*
பக்திப் பிரார்த்தனையோடு
இடுப்பில் குழந்தை
தலையில் பால்குடம்.

*

ஐ -க்கூ மின் இதழ் அறிமுகம்.

*
ஐக்கூ மின் இதழ் அறிமுகம்.
*
“ கவிச் சூரியன் ” – ஐக்கூ மின் இதழ்
மே – 16-31 – 2014.
*
இவ்விதழில், சர்வ தேச தினங்களான
1. உலகப் புகையிலை எதிர்ப்பு தினம்.
2. உலகத் தொலைத்தொடர்பு தினம்.
3. உலகத் தொழுநோயாளர் தினம்.
4. வன்முறை எதிர்ப்பு தினம்.
*
ஆகியவற்றைச் சார்ந்த ஐக்கூ கவிதைகள், கவிஞர்களின் கண்ணோட்டத்தில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அரசியல் மாற்றத்தினை வரவேற்று, தனது கருத்தினை நம்பிக்கையோடு முன் வைத்துள்ளார் ஆசிரியர்.
கவிவேந்தர். வேழவேந்தன், நூல் அறிமுகம், சுவடுகள், எண்ணக்கதிர்கள் பகுதிகள் சிறப்பாகவிருக்கின்றன. “ கவிச் சூரியன் ” –16-31- மே- 2014 ஐக்கூ மின் இதழ் தயாரிப்புப் பணி மிக மிக நேர்த்தியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.  
*
பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்.. 
*
நன்றியுடன்,
ந.க. துறைவன், வேலூர் – 632 009.
செல் : 9442234822 / 8903905822.
*


வியாழன், 15 மே, 2014

ஆலமரத்தடியில்...!! { சென்ரியு }.

*
Na.Ga. Thuraivan's Senryu.
ஆலமரத்தடியில்
வெயிலுக்கு காற்றோட்டமாய்
விளையாடுகிறார்கள் தாயம்.
*
சுற்றுலா பயணிகளை
வேடிக்கைப் பார்க்கின்றன
ஊட்டி மலர்கள்.
*
தொப்பியை எடுத்துவிட்டார்
வழுக்கைத் தலை
முழுக்க வியர்வை.
*
அனல் புழுக்கம் தாங்காமல்
செடியின் புதருக்குள்
தூங்குகிறது முயல்.
*
கோடை மழைக் காற்றுக்கு
முறிந்து விழுந்தது
முருங்கை மரம்.

*

புதன், 14 மே, 2014

அலைகிறான் கருடன்...‘‘ { ஹைக்கூ }.

*
எவற்றோடும் எவரிடமும்
தொடர்பு கொள்கிறேன்
டெலிபதியில் நினைத்த போது….!
*
அங்கு வாழ்கின்ற பல்லி
வௌவால்களுக்குத் தெரியம்?
கோயிலின் நூற்றாண்டு ரகசியம்.
*
அடியும் முடியும் இன்னும்
காணாமல் தேடித் தேடி
அலைகிறான் கருடன்.
*
தேவர்களுக்கு மனக் கலக்கம்
என்ன நிகழுமோ வென்ற பயம்?
நாரதன் வருகை அறியும் போதே….!.

*

திங்கள், 12 மே, 2014

பூவரசம் காய் பம்பரம்...!! { ஹைக்கூ },

*
ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

*
Aó£ñˆ¶„ CÁõ˜èœ
àŸê£èñ£Œ M¬÷ò£´Aø£˜èœ
Ìõóê‹ è£Œ ð‹ðó‹

Üðê°ùñ£Œ G¬ùˆîù˜
²ðGè›M¡ «ð£¶
ܬí‰î¶ °ˆ¶ M÷‚°,

ñóíñ¬ì‰îõ˜ ܼA™
æ¶õ£˜ ð£®ù£˜
ñù‹ à¼èˆ «îõ£ó‹,

è÷õ£®Š «ð£Aø£˜èœ
ñí™ ªè£œ¬÷ò˜èœ
Üöèöè£ù Ãö£ƒèŸèœ,

°ö‰¬îè¬÷„ ²ñ‚Aø¶
Môƒ° ªð£‹¬ñèœ
ªðKò °¬ì 󣆮ù‹,

G¬ùõ£Œ ¬õˆF¼‚Aø£˜èœ
óèCòñ£ ޡ‹

è™ò£íŠ ðK²Š ªð£¼œ,

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

*
Aó£ñˆ¶„ CÁõ˜èœ
àŸê£èñ£Œ M¬÷ò£´Aø£˜èœ
Ìõóê‹ è£Œ ð‹ðó‹
Üðê°ùñ£Œ G¬ùˆîù˜
²ðGè›M¡ «ð£¶
ܬí‰î¶ °ˆ¶ M÷‚°,
ñóíñ¬ì‰îõ˜ ܼA™
æ¶õ£˜ ð£®ù£˜
ñù‹ à¼èˆ «îõ£ó‹,
è÷õ£®Š «ð£Aø£˜èœ
ñí™ ªè£œ¬÷ò˜èœ
Üöèöè£ù Ãö£ƒèŸèœ,
*
°ö‰¬îè¬÷„ ²ñ‚Aø¶
Môƒ° ªð£‹¬ñèœ
ªðKò °¬ì 󣆮ù‹,
G¬ùõ£Œ ¬õˆF¼‚Aø£˜èœ
óèCòñ£ ޡ‹

è™ò£íŠ ðK²Š ªð£¼œ,
*

வியாழன், 8 மே, 2014

விடைப் பெற்றது உயிர் { ஹைக்கூ }.


(
உள்ளே வந்த மூச்சு
வெளியேறி
விடை பெற்றது உயிர்.
*
காற்றுக்கு என்றுமே
உயிரிழப்பில்லை
மரங்களுக்குப் பொறாமை.
*
இருப்பது எல்லாமே
இழப்பது தான் கொடுமை
உயிரிழப்பு பேரிழப்பு.
*
சீற்றம் எதுவென்றாலும்
சிறகை இழப்பதென்னவோ?
உயிர்ப் பறவைகளே…!.
*
உயிரிழந்த மக்கள்
நினைவுகளைச் சுமந்து
அழுகிறது பேரூலகம்.



செவ்வாய், 6 மே, 2014

உறவு...!! { iஹைபுன் }

Na.Ga, Thuraivan's Haibun,
*
வீடு, பூட்டியிருந்தது. “ எங்கே போயிருக்கிறார்கள் ” என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தரார். “ தெரியலேயே சார், எங்கே போறேன்னு யாரிடம் சொல்லிட்டுப் போறாங்க ” என்று கொஞ்சம் கடுப்பாகவே பதில் சொன்னார். அவருக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ‘ நன்றி சார் ‘ என்று சொல்லிவிட்டு நகர்ந்தவர், பக்கத்திலிருந்த மரத்தடியின் அடியில் ஒதுங்கி நின்றார்.
*
பக்கத்து வீட்டுக்காரன் பகை
எதிர் வீட்டுக்காரன் நண்பன்
உறவுக்கு கைகொடுக்கிறது மரங்கள்.

*  

நன்றி சொல்லுங்கள்...!! [ஹைக்கூ }.


*
சூரியனை சிறைப் பிடிக்க
தாமரையின் முயற்சி
முழ்கித் தவிக்கும் மரம்.
*
மௌனத்தில் கசியும்
ஆரவாரமற்ற நெஞ்சு
இயலாமையற்று சோகம்.
*
பிளவுப்பட்டது
ஒன்றுபட்ட வீடு
தடை மீறும் குருவிகள்.
*
மலர்ந்தும் மௌனம்
இறந்தும் கவனம்
நிரந்தரமற்ற உயிர்ப்பு.
*
நன்றி சொல்லுங்கள்
உங்களுக்காய் தவம்
பேரூந்து நிழற்குடை.
***
ஆதாரம் : jதிரு. செல்லம்மாள் கண்ணனின்“
“ காலச் சிறகு ” – என்ற கவிதை நூல்.
***


திங்கள், 5 மே, 2014

அணில்கள்...!! { ஹைக்கூ }.



Na.Ga. Thuraivan’s haiku.
*
பசிக்கு அழுகிறது குழந்தை
கொய்யா மரத்தில்
பழம் தின்னும் அணில்.

*
கோபுர சிலையின்
அழகை ரசிக்கின்றன
வெண்புறாக்கள்.
*
எலிகளின் நடமாட்டம்
கண்காணிக்கின்றன
தூங்கும் பாவனையில் பூனை.

***

சனி, 3 மே, 2014

அச்சமே...!! { லிமரைக்கூ }.


Na.Ga. Thuraivan’s Limaraiku.
*
குரு நீச்சம் சனி உச்சம்
ஜோதிடர் கணித்துச் சொன்னதைக்
கேட்டவனுக்குப் பெரும் அச்சம்.
*
அருள் பாலிப்பாள் என்ற நம்பிக்கை
பெண்கள் வழிபடுவதோ
ஆயுதம் தாங்கிய துர்க்கை.  
*
வணங்கும் பக்தனோ நிராயுதபாணி
உலா வருகிறார் தேரில்
அலங்காரமாய் தணடாயுதபாணி.

*

வெள்ளி, 2 மே, 2014

கோடை கவிதைகள்...!! { சென்ரியு }


*
Na.Ga.THURAIVAN'S SENRYU.
*
சித்திரைப் பௌர்ணமி
சொக்கன் சொக்கி கல்யாணம்
தரிசனம் செய்தாள் கன்னிப்பெண்.
*
குடிநீர் பற்றாக்குறைப் போக்கும்
அவசர ஆலோசனைக் கூட்டத்தில்
கலந்துக் கொண்டன யானைகள்.  
*
உடல் ஆரோக்கியக்கிய முகாம்
கோடை உணவு குறிப்புகள்
வாசித்துச் சிரித்தன பறவைகள்.
*
மின்வெட்டுப் பிரச்சினைக்குத்
தீர்வுக்கான அறிக்கை சமர்ப்பித்தது
மின்மினிப் பூச்சிகள்.
*
சின்னச் சின்னதாய் சிவந்து
வெயில் கட்டிகள்
துடித்து அழுகிறது குழந்தை.
***