வியாழன், 30 ஜூன், 2016

கச்சேரி...!! ( சென்ரியு )



பொம்மை கல்யாணம்
கலை கட்டியது
ஊமத்தம்பூ நாதஸ்சுர கச்சேரி.

*

கிரகங்கள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
பார்க்காமலிருக்க முடியாது?
பார்த்தாலும் யாருக்கும் தெரியாது?
விண்ணில் கிரகங்கள்.

Can not to?
Who do you look for?
Planets in the sky.
*

திங்கள், 27 ஜூன், 2016

தூண்டில்...!! ( ஹைக்கூ

Haiku – Tamil / English.
*
மீனின் இதயத்தை
குத்தி  கொல்கின்றது
தூண்டில்  கொக்கியின் நுனி.
*
Fish's heart
Kills stabbed
The tip of the hook bait.

*

வியாழன், 23 ஜூன், 2016

இரகசியம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
விண்ணில் மண்ணில் தேடினும் 
எளிதில் கிடைக்குமா?
வாழ்க்கை இரகசியம். .
*
Searching the skies in the soil
Easily available?
Secret life. .
*

புதன், 22 ஜூன், 2016

மனோசக்தி...!! ( ஹைபுன் )



இக்கணத்தில் நிகழும் சம்பவங்களும் உண்மைகளும் மனதில் நினைவு கொள்ளாமல், எப்பொழுதோ நடந்த சம்பவங்களை மறக்க முடியாமல் அசைப்போட்டு மனம் கலங்குகின்றது. அத்தவறுகளிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவிக்கிறது. கொஞ்ச காலம் கழித்து அதிலிருந்து விடுபடும்  யுத்தியை மனமே உருவாக்கி தருகிறது  அதுவே மீண்டும் வழக்கம்போல இயல்பாக செயல்படத் துவங்குகின்றது. இதைத் தான் மனோசக்தி என்று சொல்கிறார்கள்.
திசை தெரியாமல் தவித்தது
மீண்டு திரும்பியது இருப்பிடம்
கடல் கடந்து சென்ற பறவை
*

செவ்வாய், 21 ஜூன், 2016

சிலைகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
நூற்றாண்டு காலம் பழமையானது
குளத்தில் கிடைத்தன
கடவுள் சிலைகள்.
*
A century old
Were in the pool
God statues.

*

புதன், 15 ஜூன், 2016

முயற்சி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
சொல்வதற்கு முயற்சிக்கிறார்
கேட்பவர்க்கும் புரியவில்லை
நிதானமாய் சிந்திக்கிறது மனம்.
*
Trying to say
The listener does not understand
Slow-thinking mind.

*

ஞாயிறு, 12 ஜூன், 2016

மலை...!! ( ஹைக்கூ )



*Haiku – Tamil / English;
*
தொலைவில் தெரிந்தது
அருகில் போய் பார்க்க ஆசை
அது எந்த ஊர் மலை?.
*
It was far away
Near the desire to go and see
Any place that hill ?.
*

கொடி...!! ( லிமரைக்கூ )



உயர்ந்த அகத்திக்கீரை செடி
சுற்றிச் சுற்றி படர்ந்திருக்கிறது
வெற்றிலைக் கொடி.

*

வெள்ளி, 10 ஜூன், 2016

பயிற்சி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
காலை வேளையில் புல்தரையில்
யோகா பயிற்சி செய்கின்றன
கூட்டமாய் பறவைகள்.
*
On the lawn in the morning
Yoga practice is
The mass of birds.

*

வியாழன், 9 ஜூன், 2016

பருவ மழை...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
பருவநிலை மாற்றம்
முன்கூட்டியே தொடங்கியது
தென்மேற்கு பருவமழை.
*
Climate Change
Started early
South West Monsoon.

*

புதன், 8 ஜூன், 2016

குறி...!! ( சென்ரியு )



பார்த்து குறி சொல்வாளா?
அம்மனுக்கு பூசைப் படையல்
கொழுக்கட்டை.யில் விரல்ரேகை.


*

ஞாயிறு, 5 ஜூன், 2016

பறவை...! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;.
*
உலகை சுற்றி வருகிறது
எந்த நாடு என்று தெரியாமல்?
கடல் கடந்து பறவை
*
Around the world
No country, not knowing that?
Shore bird

*

வெள்ளி, 3 ஜூன், 2016

ஆணவம்....!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
ஆணவம் மிகும் மனம்
பொறுமை கொள்கின்றன
முதிர்ந்த அனுபவங்கள்.
*
Heavy arrogant Mind
Are suffering
Mature experiences.
N.G.Thuraivan.

*