சனி, 30 டிசம்பர், 2017

போய் வா...!!

2017 - ஆண்டு

மறப்பதற்கும்
மறக்காமல்
இருப்பதற்குமான
ஏராளமான செய்திகள்
நம்மிடையே
விட்டுச் செல்கிறது
விடை கொடுப்போம்.

பை...பை...

ந க துறைவன்.


விடை தருவோம்.


புதன், 20 டிசம்பர், 2017

பலூன்...!!

ஹைக்கூ

காற்றடைத்தப் பலூன்
வானில் மிதக்கிறது, என்
மூச்சுக் காற்று உள்ளே வெளியே.

ந க துறைவன்.


காற்றில் பறக்கும் பலூன்


செவ்வாய், 19 டிசம்பர், 2017

அரூப புத்தன்...!!

ஹைக்கூ

போதி சுள்ளிகள் தீமூட்டம்
எரிகிறான் அரூப புத்தன்
குளிர் காய்கிறார்கள் கூட்டமாய்...

ந க துறைவன்.


மார்கழி குளிர்...


சனி, 16 டிசம்பர், 2017

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு இழந்து
கூடை நிறைய பூக்கள்
உள்ளே நெளிகிறது ஓர்புழு.

ந க துறைவன்.


பூக்கள் பற்றிய கவிதை


லிங்கப்பனி...


மார்கழி கவிதை.


வெள்ளி, 15 டிசம்பர், 2017

மார்கழி

மார்கழி

விடியல் பனிப் பொழிவு
நீராடும் குருவிகள்
வீதியில் திருப்பாவை ஓசை.

ந க துறைவன்.


மார்கழி பனி மாதம்


செவ்வாய், 5 டிசம்பர், 2017

நுரைப்பூ...

Haiku - Tamil / English

சிறுவன் ஊதினான்
விண்ணில் பறந்தது
நுரைப் பூக்கள்.

He flew in the sky
Boy blew
foam flowers.

N G Thuraivan.


விண்ணோக்கி...


சனி, 25 நவம்பர், 2017

இடைவெளி

இடைவெளி.

எங்குமொரு
இடைவெளி இருக்கிறது
இடைவெளியில்லாமல்
நிகழ்கால இடைவெளி...

ந க துறைவன்.  Posted 0n 25/11/2017.


இடைவெளி


வியாழன், 16 நவம்பர், 2017

பலூன்...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.

விண்ணை தொடும் ஆசை
வேடிக்கை பார்க்கும் பறவைகள்.
பலூன்கள் பறக்க விடும் குழந்தைகள்.

The desire to touch the sky
Funny birds watching.
Children who fly balloons.


N G T huraivan,

திங்கள், 13 நவம்பர், 2017

அடிவாரம்...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.

மலை அருகில் நிலா
அடிவாரத்தில் கீழ்
நானும் நிழலும்…

The mountain near the moon
Under the foot
I shadows ...

N G Thuraivan. 

சனி, 11 நவம்பர், 2017

முடிவு அல்ல...!

ஹைக்கூ

பாதையற்ற பாதையில்
சலிக்காத எறும்புகளின்
தொடர் பயணம் முடிவல்ல...

ந க துறைவன்.
*


தொடர் பயணம்...


செவ்வாய், 31 அக்டோபர், 2017

வெறுமை...!! ( ஹைக்கூ )



எல்லாமே வெறும் சொற்கள்
கவிதையில் ஒன்றுமில்லை
உள் மௌனம்.

Everything is just words
There is nothing in the poem
Inner silence.


N G Thuraivan.

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

அகவெளி...!! ( ஹைக்கூ )


Haiku / ஹைக்கூ.

ஹைக்கூ கவிதை அல்ல
செயலற்ற இருப்பின்
அகவெளி.

The Haiku poetry Is not
the intellect of the
Inactive existence.


N G Thuraivan.

சனி, 28 அக்டோபர், 2017

புதன், 25 அக்டோபர், 2017

வியாழன், 19 அக்டோபர், 2017

எறும்புகள் / Ants... ( கவிதை )



1.
எது பாதையென்று தெரியாது
எப்படியோ வளைந்து நெளிந்து
பயணிக்கின்றன எறும்புகள்?

You do not know what is the path
Somehow bent
Traveling ants?
2.
க்யூ வரிசை அமைப்பு
எறும்புகளிடம் இருந்து
கற்றானா மனிதன்.
Que Line layout
From ants
Learned man.
*
3.
முதல் உணவு தானிய
சேமி்ப்பு கிடங்கு.
எறும்புகள் கற்றுக் கொடுத்த
அறிவு தானோ?
First grain cereal
Savings Warehouse.
Ants taught
Do you have knowledge?
*
4.
விரைந்து போகும்
எறும்பினை பிடிக்க
முயற்சிக்கிறது குழந்தை.
Hurry up
Catch an ant
Trying the baby.
*
5.
சர்க்கரை நோய் இல்லை
இனிப்பு கண்டவுடன்
மொய்க்கும் எறும்புகளுக்கு…!!
Diabetes does not exist
Seeing the sweetness
For the ant
*
6.
எந்த ரூபத்திலும்
எந்த கணத்திலும் நேரும்
எறும்புகளுக்கு மரணம்.
In any form
In any moment
The death of the ants.
N.G. Thuraivan.

*

செவ்வாய், 17 அக்டோபர், 2017

வெள்ளி, 13 அக்டோபர், 2017

கொஞ்சம் வெட்கப்படு...!!




புதிய ஹைக்கூ நூல் அறிமுகம்.

தலைப்பு : கொஞ்சம் வெட்கப்படு
           அவள் அதிகாரம் – 1.

ஆசிரியர் : டுவிட்டூ பாண்டூ

வெளியீடு ; கந்தகப்பூக்கள்.
           120, குட்டியணைஞ்சான் தெரு,
           சிவகாசி – 626 123. தமிழ்நாடு.
           இந்தியா.
           செல் : + 91 98435 77110.

பக்கம் : 64

விலை     ரூ.50/-

“ காதலையும் காமத்தையும் கொண்டாடும் சிறு முயற்சியே இந்த அவள் அதிகாரம். அதன் முதல் பகுதியாக “ கொஞ்சம் வெட்கப்படு ” எனும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது ” என்று இந்நூலாசிரியர் கூறுகிறார். அதன்படி, திருக்குறள் காமத்துப்பால் குறளை எடுத்துக் கொண்டு, அதற்குரியதான பொருளில் ஹைக்கூ படைத்துள்ளார் என்பது கூடுதலான தகவல். இம்முயற்சி தமிழ் ஹைக்கூவிற்கு புதிய வரவு என்றே கொள்ளலாம். மேலும், ஜப்பானிய ஹைக்கூக்களில் காமம் சார்ந்த படைப்புக்கள். பல வெளிவந்துள்ளன. அதற்கு நிர்வாண ஹைக்கூ கவிதைகள் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இந்நூலில் வாசிப்பிற்கு வசீகரித்தச் சில ஹைக்கூ கவிதைகள்.

1
கலவி இன்பம் சிறிது!
அவள் பார்வையுடன்
கலக்குமின்பம் பெரிது!.
*
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
அதிகாரம் 110:1092
2.
அவள் அல்ல அது!
காதல் பயிர் வளர
அவள் பாய்ச்சும் நீர்!
*
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
அதிகாரம் ; 110. 1093.
3.
பிடித்தவர்போல் பேசுவதும்
பிடிக்காதவர்போல் பார்ப்பதும்
அரங்கேறுகிறது காதல்.
*
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
அதிகாரம் ; 110. 1097.

4.
விலகினால் சுடும்
நெருங்கினால் குளிரும்
காதல் நெருப்பு அவள்?
*
நீங்கின் தெறுஉம் குறுகும்கால் தண்என்னும்
தீயாண்டு பெற்றாள் இவள்?
அதிகாரம் 111. 1104.
*
5.
சண்டையிடு!
சமாதானமாகு
கூடட்டும் காதல்!
*
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
அதிகாரம். 111. 1109.
*
காதல் கொண்டாடுங்கள். காமம் உணர்வுகளை வெல்லட்டும்.
மனிதம் விழிப்புணர்வு பெற்று எழுச்சி பெறட்டும்.

நண்பர். டுவிட்டூ பாண்டூ அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

நன்றி.
                                    
ந.க. துறைவன். வேலூர் – 632 009.
செல் ; 9442234822 / 8903905822.  

தேதி ; 13-10-2017. 

வியாழன், 12 அக்டோபர், 2017

பெயர் தெரியாப் பூ...!!



புதிய ஹைக்கூ நூல் அறிமுகம்.

தலைப்பு : பெயர் தெரியாப் பூ.

ஆசிரியர் : கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி

வெளியீடு ; கந்தகப்பூக்கள்.
           120, குட்டியணைஞ்சான் தெரு,
           சிவகாசி – 626 123. தமிழ்நாடு.
           இந்தியா.
           செல் : + 91 98435 77110.

பக்கம் : 48.

விலை     ரூ.40/-

ஹைக்கூ நூற்றாண்டு விழா முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இச்சிறு  நூலில், மகாகவி பாரதியாரின் “ ஜப்பானிய கவிதை ”  16-10-1916 – ல் வெளிவந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது சிறப்பு அம்சம். தன்னைச் சுற்றி நிகழும் சமகாலச் சம்பவங்களைப் பார்த்து அனுபவித்ததை ஹைக்கூவாக்கி காட்டியுள்ளார் ஸ்ரீபதி.
  

1.
எப்போதும் களவாடப்படுகிறது
கரைக்குள் முடங்கியோடும்
நதி.
2.
மினரல் வாட்டர் பாட்டிகளுடன்
தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டது
நதிநீர்ப் பங்கீடு.
3.
லாரி ஏறி
செத்தது
நதி.
*
அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நதிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு எந்தவொரு அரசும் முனைப்புக் காட்டவில்லை. பேசியே காலந்தாழ்த்தி வருகிறரா்கள். இங்கே நதிகள் பாழ்பட்டு வருகின்றன. இந்நிலையினைச் சுட்டிகிறது
மேற்கண்ட நதிகள் ஹைக்கூ கவிதைகள்.

நண்பர். கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

நன்றி.
                                    
ந.க. துறைவன். வேலூர் – 632 009.
செல் ; 9442234822 / 8903905822.  
தேதி ; 13-10-2017.

.

வெளிச்சப் பறவைகள்...!!



புதிய ஹைக்கூ நூல் அறிமுகம்.

தலைப்பு : வெளிச்சப் பறவைகள்.

ஆசிரியர் : நீலநிலா செண்பகராஜன்.

வெளியீடு ; கந்தகப்பூக்கள்.
           120, குட்டியணைஞ்சான் தெரு,
           சிவகாசி – 626 123. தமிழ்நாடு.
           இந்தியா.
           செல் : + 91 98435 77110.

பக்கம் : 48.

விலை     ரூ.40/-

ஹைக்கூ நூற்றாண்டு முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இச்சிறு  தொகுப்பு. நூல் சமூக பிரச்னைகள் அலசும் மிக எளிமையான ஹைக்கூ கவிதைகளைக் கொண்டுள்ளது.
1.
குளத்தில் குளிக்கும் இளம்பெண்
மேனியை கைகளால் மூடினாள்
எட்டிப் பார்க்கும் நிலா.
2.
காமம் அழகான கவிதை
கவிதை
புரியாத காமம்.
3.
ஊருக்கெல்லாம்
வாட்ஸ்அப்பில் செய்தி
தபால்காரனின் மரணம்.

இவ்வாறான சில கவிதைகள் சட்டென வாசிப்பிற்கு வசப்படுகின்றன.

நண்பர். நீலநிலா சண்பகராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

நன்றி.

ந.க. துறைவன். வேலூர் – 632 009.
செல் ; 9442234822 / 8903905822.  

*

செவ்வாய், 3 அக்டோபர், 2017

நச்சரிப்பு.

மனமெல்லாம் எங்கோ?
கையில் செல்போன்
தோழியின் நச்சரிப்பு.

ந க துறைவன்.


வெள்ளி, 15 செப்டம்பர், 2017

பிரதிபலிப்பு...!!

நீருக்குள் நிழல்
பிரதிபலிப்பதை உணருமா?
அழகான மரங்கள்.

ந க துறைவன்.


செவ்வாய், 12 செப்டம்பர், 2017

சிரிப்பொலி...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.

வயல் வெளியில் சிரிப்பொலி
இரை தேடும் கொக்குகள்
எழுப்பும் இசை நாதம்.
*
Smile on the field outside
Cranes looking for prey
Wake up

N.G. Thuraivan.

புதன், 6 செப்டம்பர், 2017

நூல் அறிமுகம்.






புதிய ஹைக்கூ நூல் அறிமுகம்.

தலைப்பு     : ஹைக்கூ உலகம்

தொகுப்பாசிரியர் : முனைவர் ம. ரமேஷ்

பங்கு பெற்ற கவிஞர்கள் ; 11 பேர்.
மொத்த ஹைக்கூ கவிதைகள் : 660.

வெளியீடு ; ஒவியா பதிப்பகம்
            17 - 13 – 11, ஸ்ரீராம் காம்ப்ளஸ்க்,
            காந்தி நகர் மெயின் ரோடு,
            வத்தலகுண்டு – 624 202.
            திண்டுக்கல் மாவட்டம்
            தமிழ்நாடு.
            செல் ; 766 755 7114.

விலை     ரூ.120/-

     முகப்பு அட்டையில், கதவின் அருகே இருட்டில் ஏக்கமாய் நின்றிருக்கும் சிறுமியின் கண்கள் எதிர்கால வெளிச்சத்தை நோக்கி ஊடுருவிப் பாய்கின்றன. இதனையொரு குறியீடாகவே காண்கிறேன். 11 கவிஞர்களின் 660 ஹைக்கூக்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் வாசகர்கள் படித்து நுகர்ந்தது அனுபவிக்க வேண்டும்.

கவிதைகளைத் தொகுத்தத் தம்பி ம. ரமேஷ், மற்றும்
வெளியிட்ட நண்பர் வதிலைபிரபா இருவருக்கும், பங்கு
பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நல்வாழ்த்துக்கள்.

ந.க. துறைவன்.   


புதன், 16 ஆகஸ்ட், 2017

வளையம்..!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.

வண்டுகள் பார்க்கவில்லை
மலர்ந்த பூக்கள் அழகு
காற்றின் பாதுகாப்பு வளையம்.
*
Beetles are not seen
Flowers bloom
Wind safety ring.
N.G.Thuraian.


சனி, 12 ஆகஸ்ட், 2017

தேவி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.

மீண்டும் ஆரம்பமாகிறது தேவி
அற்புதமாக ரசிக்கிறாய் ரசி
சிவனின் ஆலிங்க நடனம்.                       

Devi starts again
Excellently admired
Shiva's hymn dance

N.G.Thuraivan.

சனி, 29 ஜூலை, 2017

சாரல்...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.

காற்றின் பேரோசை
மழைத்துளிகள் சத்தம்
அருவியின் சாரல் அழகு.

Air eruption
Rainy noise
Beauty of the Falls

N.G.Thuraivan.

வெள்ளி, 28 ஜூலை, 2017

பகல் நிலா...!! ( சென்ரியு )



Haiku – Tamil / English.

சூட்டில் மரங்கள்
காதல் கனவுகள்
பகலில் தெரிந்த நிலா.

Trees in the heat
Love dreams
Moon know in the day.
N.G,Thuraivan.

*

ஆனந்த பைரவி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.

அடர்ந்த காட்டில்
காற்றின் மெல்லிசை
ஆனந்த பைரவி.
*
In the thick forest
The melody of the air       
Ananda Bhairavi.

N.G.Thuraivan.

வெள்ளி, 21 ஜூலை, 2017

வெளிச்சம்...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.

இருட்டறையில்  யாருமில்லை.
தனிமையில் உடைந்த நாற்காலிகள்
ஜன்னல் வழியே வெளிச்சம்..

There is no one in the dark.
Broken chairs alone
The light through the window.

N.G.Thuraivan. 

புதன், 19 ஜூலை, 2017

மொழி எதுவோ? ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.


பேரழகியின் மொழி எதுவோ?
ஒலிக்கிறது இசை உதட்டில்
முத்தமிடாத புல்லாங்குழல்.

What is the language of the mourning?
Sounds music lip
Unguarded flute.
N.G. Thurauvan.


புதன், 12 ஜூலை, 2017

ஹைக்கூ.

பிரபஞ்ச பெருவெளி.
எங்கும் நிறைந்திருக்கிறது
இந்நீர்த் துளிகள்.

ந.க.துறைவன். 

திங்கள், 10 ஜூலை, 2017

நூல் அறிமுகம்.




நூலின் பெயர் :  தனிமையில் வாடும் பொம்மை.
நூலாசிரியர்   :  க. இராமஜெயம்.
நூலின் வகை :  ஹைக்கூ / சென்ரியு.
வெளியீடு     :  அன்ளை ராஜேஸ்வரி பதிப்பகம்
 :               41, கல்யாணசுந்தரம் தெரு
                பெரம்பூர் சென்னை – 600 011.
விலை        : ரூ. 50/-

*
இயற்கை, மெய்யியல், மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகயை உள்ளடக்கி கருத்து செறிவு கொண்டதாகக் கவிஞரின் ஹைக்கூக்கள் அடையாளம் காண முடிகிறது.


பிற சூழ்நிலைகளை இழித்துப் பேசும் தன்மை, கருத்தியல் நேர்த்திகளோடு பொதுவுடைமை அரசியலை எதிர்நோக்கும் பார்வை, வெளிப்படையான விமர்சனங்களை உள்ளடக்கிய கருத்துக்களை உள்ளடக்கிய சென்ரியுக்கள் சிறப்பாக அமைந்தள்ளன.
         நூலின் அணிந்துரையில் முனைவர். ம. இரமேஷ் அவர்களின் – இந்த வழிமொழிதலோடு படைப்பாளி முனைவர்
க. இராமஜெயம் அவர்களை மனமாற வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.
நன்றி
ந.க. துறைவன். வேலூர் – 632 009.
செல் ; 9442234832.

*

சனி, 1 ஜூலை, 2017

புதன், 7 ஜூன், 2017

.இடைவெளி... ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.
*
வாசிப்பு தருணம்
சொற்களின் இடைவெளி
நிகழ்கிறது மௌனம்
*
Reading time
The gap between words
It's silence

N.G. Thuraivan.

ஞாயிறு, 21 மே, 2017

கண்கள்...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.
*
நுங்கு மூன்று கண்கள்
தேங்காய் மூன்று கண்கள்
சிவன் நெற்றியில் ஞானக் கண்.
*
Three eyes of nicotine
Coconut three eyes
Shiva's eye on the forehead

N.G.Thuraivan.

ஞாயிறு, 7 மே, 2017

இயங்குதல்...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.

ஓய்வில்லாமல் இயங்குகின்றது
நூற்றாண்டுகாலமாய் தோய்வின்றி
ஜென் ஹைக்கூ
*
It works without rest
Without a century
Zen Haiku

N.G.Thuraivan.

கோடை...!!


செவ்வாய், 28 மார்ச், 2017

சிறகு...!! ( ஹைக்கூ )


Haiku – Tamil / English.
*
சிறகை உதிர்த்து போகிறது
அடையாளத்திற்காக
இணைத் தேடும் பறவை.
*
Going to shake its wings
Identity
Co-looking bird.

N.G.Thuraivan.

வெள்ளி, 24 மார்ச், 2017

மாம்பழம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
மாம்பழம் கையில் வைத்து
பால் குடிக்கிறது
அழுகின்ற குழந்தை.
*
Put the mango in hand
Milk drinks
Crying baby.

N.G.Thuraivan.

வியாழன், 23 மார்ச், 2017

நூல் விமர்சனம்.



மகாகவி – பிப்ரவரி – 2017 ஹைக்கூ நூற்றாண்டு சிறப்பிதழில்
“ மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை “ ( ஹைக்கூத் தொகுப்பு – தமிழ் – ஆங்கிலம் ) நூலுக்கு ந.க. துறைவன் எழுதிய -  “ ஆறு ஓவியங்களும் ஆறு ஹைக்கூ கவிதைகளும் “ என்ற தலைப்பிலான  விமர்சனக் கட்டுரை வெளிவந்துள்ளது. மகாகவி – க்கும், நண்பர்.வதிலைக்கும் மிக்க நன்றி.
ந.க.துறைவன்.
*

ஆறு ஓவியங்களும் ஆறு ஹைக்கூ கவிதைளும் …!!
                                           நூல் விமர்சனம். :
மனிதர்கள் மனிதர்களை நேசிப்பதை வி்ட, தனக்கு பிரியமான பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிடம் அதிகமான பிரியம் காட்டி வளர்கின்றார்கள். அவற்றில் நாய், பூனை, புறா, கிளிகள் ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவைகள் மனிதர்களின் நேசிப்பிற்குரியனவாகத் திகழ்வதற்கான காரணங்கள் அனேகம் உள்ளன. இவைகள் பெரும்பாலும் மனிதர்களின் செயல்பாடுகளோடு மிகவும் ஒத்துப் போகின்றத் தன்மை வாய்ந்தனவாக இருக்கின்றன. எதிர்ப்புத் தன்மை என்பது இவைகளில் குறைந்துக் காணப்படுவதும், இதற்கான முக்கியக் காரணமாகத் தென்படுகின்றன. அதனோடு தாம் எப்படியெல்லாம் பிரியம் காட்டி செல்லம் கொஞ்ச முடியுமோ? அவ்வாறெல்லாம் பழகி உறவுக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவைகளும் தன்னுடைய ஆளுமைப் பண்புகளை வெளிப்படு்த்தி அன்பினைப் பெற்று நேசிப்பிற்குரிய பிரியமானவைகளாக நடந்துக் கொள்கின்றன.
அவற்றுள் பூனைகள்  பெரும்பான்மையான வீடுகளில் செல்லப்பிராணி அனேகம் பேர் வளர்க்கின்றார்கள். பூனையை ஏன் வளர்க்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கான பதில் எனிமையாகவே இருக்கும். “ ஏதோவொன்றிடம் அன்புக் காட்ட வேண்டும் என்பதற்காகவே, ஏதோவொரு விருப்பமான பிராணியை வளர்க்கின்றோம் ” என்றே பதில் கூறுவார்கள். பூனைகள் வளர்ப்பதற்கு மிக எளிமையான பிராணி. அதுமட்டுமல்ல, அதன் சாந்தமான குணம், மெல்லியகுரல் வளம், அதிர்ந்து நடக்காதத் தன்மை, பாதுகாப்பு உணர்வு, எதிரிகளை விரட்டும் வேகம், பயம் கொள்ளாமல் அருகில் வந்து அமர்ந்து காட்டும் பாசம், இரைதேடும் லாவகம், என பல்வேறு குண இயல்புகளைக் கொண்டது எனலாம்   

பூனைகள் குறித்து,  சிறுவர் பாடல்கள், சிறுவர்கதைகள், சித்திரக்கதைகள், நாட்டுப்பாடல்கள், பழமொழிகள், என அனேகப் படைப்புகளில் இடம் பெற்று வருகின்றன. ஹைக்கூ கவிஞர்கள் பலரும் ஹைக்கூ படைத்தளித்துள்ளனர். சமீபத்தில் வெளிந்துள்ள வதிலைபிரபாவின் ” மெல்ல பதுங்கும் சாம்பல் நிறப்பூனை ” தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆறு ஓவியங்களும் ஆறு ஹைக்கூ கவிதைகளும் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
1.
விடியல்பொழுதின் வெண்மையான பனிப்டலம் மிக அழகானது. அந்நேரப் பனிக்குளிர் மனதுக்கும் உடலுக்கும் இதமானது என்பார்கள். அந்தேரம் தான் பறவைகளும் விலங்குகளும் உற்சாகமாக எழுந்து குரல் எழுப்பி மற்ற உயிரினங்களை எழுப்பி விடுகின்றன. எங்கேனும் ஒரு வீட்டிலிருந்துக் கொண்டோ அல்லது வெளியிலிருந்துக் கொண்டோ பூனைகள் பலவும் குரல் எழுப்புகின்றன. அதனை    
பூனையின் அலறலுக்கப்பால்
கம்பளிப் போர்வையாய்ப் படருமிருள்
மெல்ல அவிழும் விடியல்.
Beyond shrick of a tom cat
Dark as a woolen spread –
Brightening dawn.  – பக்கம் – 30 –  அந்தப் பூனையின் அலறல் ஒலிக்கேட்டு, கம்பளிப் போர்வையாய் படர்ந்திருக்கும் இருள் விலகி மெல்ல மெல்ல வெளிச்சம் பரவி அவிழ்கின்றன விடியல் என்று மிக அழகான ஹைக்கூ கவிதையாக்கி படைத்துள்ளார் வதிலைபிரபா.
2.
பருவகாலம் தொடங்கியதும்  மழையின் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருப்பது மக்களின் இயல்பான குணம். அம்மழைதான்  மக்களின் வாழ்வாதாரத்திற்கான உயிர்த்துளிகள். மழையை நம்பித்தான் விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் காத்திருக்கின்றன. குடிநீர்ப் பிரச்சினைத் தீர்ப்பதற்கும் மழையின் எதிர்ப்பார்ப்பு மிக அத்தியாவசமாக இருக்கின்றது. புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் மழை மாதங்களாகும். வடமேற்கு பருவமழை தொடங்கியது. வானம் மேகமூட்டமாகவே தெரிகின்றன. தீடீரென வெளியில்,  
பெருமழை பெய்கிறது
மேஜையில் சூடான தேனீரும் ரொட்டியும்….
“ மியாவ்.” பூனை.”
Down sleet –
With tea – cup, hot & bread served
The cat”s “ mew “! – பக்கம் – 30  - மழைகுளிருக்கு அடக்கமாய் வீட்டின் உள்ளே அறைக்குள் வீட்டார்களோ அல்லது உறவினர்களுடனோ மேஜையில் சூடான தேனீரும் ரொட்டியும் காத்திருக்கின்றன. உரையாடல் நிகழ்கின்றதா என்றும் உணர முடியாத நிலை. ஆனாலும், அம்மேஜையின் கீழே அமர்ந்திருக்கும் பூனையின்  “ மியாவ் ”…என்ற மெல்லிய குரல் அதன் பசியினை உணர்த்துகின்றது இந்த ஹைக்கூ. ஜப்பானில் தேனீர் கலாச்சாரம் என்பது இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வரும் பண்பாடாகக் கருதப்படுகின்றது ஜென்னில் தேனீர் ஒரு தியான நிலையாகவே போற்றப்பட்டு வருகிறது. ஜென் ஹைக்கூக்கு இணையாக இந்த ஹைக்கூ படைக்கபட்டுள்ளது என்றே கூறலாம்.
.3.
பூனையின் உருவவமைப்பு, அதன் கம்பீர்மான மீசை, நடை, மியாவ் என்ற மென்மையான குரல்வளம், உணவு தேடும் செயல்கள், வளர்க்கப்படும் மனிதர்களோடு கொள்ளும் ஆழ்ந்த நட்புணர்வு ஆகிய செயல்பாடுகள் அனைத்தும் மனித இனத்திற்கான குறியீடுகளாகத் திகழ்கின்றன. இப்பூனைகளின் மீதான உள்தாக்கத்தைத் தன் ஒவியப் படைப்புகளில் பல உருவமைப்புகளில் வரைந்துக் காட்டியுள்ளார் ஒவியர் பாஸ்கரன். அந்த ஒவியங்கள் மனிதஇனத்திற்கு ஏதோவொன்றைச் சுட்டி உணர்த்துகின்றன. இயற்கைக்கும் விலங்குகளுக்குமான உறவு என்பதும் நெருக்கமானவையாகவே தெரிகின்றன. சூரியனின் வெப்பக்கதிர்கள் உயிர்வாழ்வினங்களுக்கான ஆதாரசக்தியாகும். அவன் எப்படி மணித்துளிகள் தவறாமல் நகர்ந்து கடக்கின்றான் என்பதை,

பூனையாய் பதுங்கி
அந்திக்கப்பால் நகர்கிறது
கறுப்பு இருட்டு.
Lurking as a cat –
Beyond dusk moves
Stark darkness!. –  பக்கம் – 53. - சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பரப்பி மெல்ல மெல்ல நகர்ந்து மாலைவேளையில் மேற்குவானில் தன் செந்நிறக் கதிர்களை வீசி கருநிறமாகிய இருட்டினைப் போர்த்திக் கொண்டு பூனையாய்ப் பதுங்கி பதுங்கிச் செல்வதுப் போன்று அந்திக்கப்பால் கவிழ்கின்றான். என்று மிக அற்புதமான மாலைக் காட்சியினைப் படம் பிடித்துக் காட்டி ரசிக்க வைக்கின்றார்.. அந்திவேளை என்பது ஹைக்கூ கவிதைளில் முக்கிய படிமங்களில் ஒன்றாகும்.
4.
வீடுகளில் வளரும் பூனைகள் சற்று சாதுவாகக் காணப்பட்டாலும், வெளியில் தன்னிச்சையாக வளரும் பூனைகளின் அட்டகாசம் சற்று கூடுதலாகவும் சுதந்திரமானவையாகவும் காணப்படுகின்றன. அவைகள் இரைதேடி வீடுகளில் பால் தயிர் உணவுகளைத் திருடித் தின்பவையாகப் பெரும்பாலும் இருக்கின்றன. சிலநேரங்களில் வீடுகளில் எலியின் தொல்லைகள் மிகுந்துக் காணப்படும். அப்பொழுது பூனைகள் அவற்றைப் பதுங்கிப் பதுங்கிப் பாய்ந்து லாவகமாகப் பிடிக்கும். சில வீடுகளில் எலிப்பபொறி வைத்தும் எலிகளைப் பிடிப்பார்கள். பூனையின் வருகையை உணர்ந்த எலிகள் மெல்ல பதுங்கத் துவங்கும். அச்செயலினைப்
பதுங்கும் எலி
மதில் மேல் பூனை
எலிப்பொறி.
Luurking rat…
Cat on the mid wall…
The rat – trap!. – பக்கம்.- 82. – பூனையின் மறுஉருவச் சாயலே புலிகள் என்று கூறுவார்கள். பூனை, புலி, எலி இவை மூன்றும் பதுங்கிப் பாய்ந்திடும் குணம் படைத்தவைகளாகும். மேலும், பூனைகள் குறித்தப் பழமொழிகள் பலவுண்டு. மனிதன் ஒரு செயலினை அப்படியும் இல்லாமல், இப்படியும் இல்லாமல்  சரியான முடிவினை எடுக்காதப் பட்சத்தில் அவரின் குழப்பநிலையினை மதில் மேல் பூனைப் போன்று தடுமாறுகிறாயே? என்று சுட்டிக்காட்டுவார்கள். இப்படி பூனையின் பதுங்குதல், தடுமாற்றம், பொறிவலையில் சிக்கல்  என மூன்று மனநிலைக் காரணிகளை முன்வைத்தும், சமூகத்தில் மனிதனின் செயல்பாட்டோடும் இந்த ஹைக்கூவை ஒப்புநோக்கிப் பார்க்கலாம்.
5.
மனிதர்களிடையே புழுங்கும் ஏராளமான மூடப்பழக்க வழக்கங்களில் சகுனம் பார்த்தல் என்பதும் ஒன்றாகும். எதற்குத் தான் சகுனம் பார்ப்பது என்கின்ற வரைமுறையில்லாமல் வரம்புமீறி செயல்பாட்டில் இருக்கின்றது. பசு, சுமங்கலி, தயிர்க்காரி ஆகியோர் எதிரில் வந்தால் நல்ல சகுனம். விதவை, கைராசியில்லாதவள், வாழாவெட்டிகள் ஆகியோர் எதிரே வந்தால் அபசகுனம். அதே போன்று பூனைக் குறுக்கே வந்தால் அபசகுனம் என்பார்கள். அவன் தொழில் நிமித்தமாக வெளியே புறப்படுவதற்கு சைக்கிளை எடுத்து தெருமுனையினைக் கடக்கும்போது, பூனை குறுக்கே திடீரென பாய்ந்து வருகின்றது. அப்பொழுது, அவன் என்னடாயிது அபசகுனம் என நினைக்கிறான்? சற்றுநேரம் நின்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் புறப்பட யத்தனிக்கிறான் என்கின்ற காட்சினை,
பழைய சைக்கிளில்
தெருமுனை கடந்தவனின் குறுக்கே
வருமவன் செல்லப்பூனை.
Before his old cycle,
Passed the street corner,
Crossing  of his pet – cat!. – பக்கம் – 92. – மக்கள் நல்ல செயல்கள், கெட்ட செயல்கள் அனைத்திற்கும் நேரம் காலம் சகுனம் பார்த்துத் தான் செய்து வருகின்றார்கள். இதைப் பார்ப்பதில் பணக்காரன் ஏழை என்று எந்த பாகுபாடுமில்லை. அனைவருமே இதில் சிக்குண்டு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறார்கள். இம்மூடச்செயல்களை எதிர்த்தும பல்வேறு இயக்கங்கள் செயல்பட்டு வந்தாலும், இது தொடரவே செய்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகாலமாகச் சடங்கு சம்பிரதாயங்கள், இம்மக்கள் மனங்களிலே ஊறிப்போய் இருக்கின்றன. இதிலிருந்து இன்னும் விடுதலைப் பெற இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ? தெரியவில்லை
இங்கு ‘ பழைய சைக்கிள் ‘ என்பது பழைமையான பண்பாட்டையும்,     கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் குறிப்பனவாகும். ’ குறுக்கே ‘ என்ற வார்த்தை மூடத்தனமானச் சகுனங்களைக் குறிப்பனவாகவும் எடுத்துக் கொள்ளலாம். மனிதர்கள் சகுனம் பார்த்தல் என்கின்ற செயல்களைச் சைக்கிளின்  இரு சக்கரங்கள் போன்று சுழன்றுக் கொண்டே இருக்கின்றன என்று மிக யதார்த்தமாக, இந்த ஹைக்கூ வரிகளில் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார் வதிலைபிரபா. .
6.
இரவுக்கும் பூனைகளுக்கும் ஏதோவொரு வகையில் நெருங்கிய உறவு இருக்க வேண்டும்.. பூனைகளுக்கு பகலி்ல் கண் தெரியாது இரவில் தான் கண் தெரியும் என்று கூறுகிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மையென்பது தெரியவில்லை. ஆனால், அவைகள் பகலை விட இரவில் தான் அதிகமாக உலாவி திரிகின்றன. இரைதேடுகின்றன. உறவைத் தேடியலைகின்றன. அப்பொழுது அந்த இரவின் ஒளியில் மெல்லப் பதுங்கி பதுங்கி பாய்ந்து தன் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்கின்றன. பூனைகளில் அவ்விரவுக் காட்சியினை,                                                        
ஒளிரும் இரவு
மெல்லப் பதுங்கும்
சாம்பல் நிறப்பூனை.
Silvery moon –
At vicinity slinks
An ash – hued cat!.  – பக்கம் – 118. – இ்ந்த ஹைக்கூ கவிதையில், ஒளிரும் இரவில் மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப்பூனை என்கின்றார். ஏன் மற்ற பூனைகள் இரவு நேரங்களில்  பதுங்கி தன் வேட்கையினைப் பூர்த்திச் செய்துக் கொள்வதில்லையா? இருக்கலாம். ஆயினும், இச்சாம்பல் நிறப்பூனை ஏதோவொன்றின் குறியீட்டு படிமமாகவே திகழ்கின்றது அது என்ன? மகாகவி பாரதியார் தன் பாப்பாப் பாட்டில்,
“ வெள்ளை நிறத்தொரு பூனை
 வீட்டில் வளர்வது கண்டீர்;
 பிள்ளைகள் பெற்றதப் பூனை; - அவை
 பேருக் கொருநிற மாகும்.
 சாம்பல் நிறமொரு குட்டி – கருஞ்
 சாந்து நிறமொரு குட்டி,
 பாம்பு நிறமொரு குட்டி, - வெள்ளைப்
 பாலின் நிறமொரு குட்டி.
 எந்த நிறமிருந்தாலும் – அவை
யாவும் ஓரே தர மன்றோ? ” – மகாகவி பாரதியார் கவிதைகள் – நூல் – பக்கம் – 233.  .  
பல்வேறு நிறங்களிலானப் பூனைகளைக் காட்டி, இச்சமூகத்தில் நிலவும் நிறபேதங்களைச் சுட்டி, ,இவையாவும் ஒரே தரமென்கின்றார். சமூகத்தில் வாழும் மனிதனின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரே வகையானவைகள் அல்ல. வெவ்வேறானவைகள். பாரதியார் சமூகநிலைப்பாட்டினைக் கூறுக்கின்றார். ஆனால், ஹைக்கூ கவிதைகள் மனிதர்களுடைய மனவுணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடியது. நிறங்களுக்கும் மனித உணர்வுகளுக்கும் தொடர்புள்ளன என்று கூறுகின்றது வண்ணமருத்துவ ( color therapy ) முறை.  அவ்வகையில் பார்க்கும்போது, இச்சாம்பல் நிறப்பூனை, கலவி உணர்வின்,. படிமமாக  இருக்கலாமோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது?
7
எது கவிதை? என்ற கேள்வி சங்கக் காலத்திலிருந்து இக் காலம் வரை விவாதப் பொருளாகவே பார்க்கப்பட்டு வருகின்றது.. அதற்கான காரணம் விவேகிகளுக்கே வெளிச்சம்.. தமிழில் புதுக்கவிதை தோன்றியபோதும் இதே நிலைதான். அது இன்றுவரையும் தொடர்கின்றது. அதன்பின்னர் ஹைக்கூ கவிதை எழுதத் தொடங்கிய காலம் தொட்டு எது சரியான ஹைக்கூ? என்ற கேள்வி தொடர்ந்துக் கொண்டேயிருக்கின்றது.. எந்தவொரு படைப்பின் உள்மையச் சரடைப் புரிந்தக் கொள்ளாமல் படைக்கப்பட்டால் இக்கேள்வி எழத்தான் செய்கின்றது. இயற்கையின் ரகசியம், அறிவின் நுட்பம், வாழ்வின் சூட்சுமம், புரிதல், தேடல்,  தத்துவம் என்ற வார்த்தைகளின் பின்னணியில், படைப்பின் ஆளுமைப் பண்புகள் தொடர்கின்றது. அப்படியென்றால், இங்கே,
எதுதான் ஹைக்கூ?
சலிப்புடன் அமர்ந்திருக்கிறான்
கோழி கூவுகிறது.
What”s a haiku, then?
Sullen he”s seated – there!
The cock”s creech.  – பக்கம் – 29. – என்கிறார். எந்தவொரு கூட்டமென்றாலும், படைப்பாளிகள் சந்திப்பென்றாலும் இலக்கிய விவாதம் நிச்சியம் உண்டு எனலாம். அப்படிப்பட்ட நிகழ்வொன்றில் தான் ஹைக்கூ விவாதம் தொடங்கியதோ என்னவோ? விடியவிடிய பேசிப்பேசி சலிப்புற்ற பின்னரும் தொடர்கின்ற விவாதம் முற்றுபெறாமல் கோழி கூவுகின்றது. பொழுதும் விடிகின்றது. இங்கொரு ஹைக்கூவும் பிறக்கின்றது. ஹைக்கூ என்பதே இயற்கைச் சார்ந்தவொரு படைப்பாகும். பொழுது விடிவதும் பொழுது சாய்வதும் இயற்கையின் அன்றாடச் செயல்பாடாகும் இஃதொரு உலகியல் சுழற்சி நெறியாகும். அதே போன்றதுதான் எல்லா படைப்பும் என்பதை உணர்த்துகின்றது..
*
“ மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப்பூனை ” யின் படைப்பாளியான நண்பர் வதிலைபிரபா, கடந்த இருபதாண்டுகளாக ஹைக்கூ சார்ந்து எழுதி வரும் படைப்பாளி ஆவார்.. அவரின் ஹைக்கூ கவிதைகள்   பெரும்பாலும் தனித்துவ மிக்கவையாகவே இருப்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. ஹைக்கூவின் கட்டமைப்பு வரம்புக்குள்ளேயே இயங்குவதற்கு மெனக்கெடுபவர் என்பதையும் அறிவேன். அவரே தன் சுயத்தை வெளிப்படுத்துகிறார்.
“ நானும் ஹைக்கூவோடு பயணித்துக் கொண்டுதானிருக்கிறேன். ஒரு புள்ளியை நோக்கிய பயணமாய் இருந்தது. அந்தப் புள்ளி முடிவற்ற புள்ளியாய் இருக்கிறது. பிரபஞ்சம் இணைகிற அல்லது பிரபஞ்சம் தாண்டிய ஒரு இலக்காய் கூட இருக்கலாம்.”  – பக்கம் – 20. -  இந்தக் குரல் தான் ஹைக்கூ படைப்பாளியான வதிலைபிரபாவின் நேர்மையான தொனி. மிகுந்த தரமான அச்சுவடிவமைப்பில் வெளி வந்துள்ள, இத்தொகுப்பு நூல் ஹைக்கூ அரங்கில் பேசப்படும். கவனத்தைப் பெறும். பொழுது விடியும்போது கூட எங்கிருந்தேனுமொரு “ மியாவ் ”என்ற பூனையின் இனிமையானக் குரல் கேட்கலாம்.  
நல்வாழ்த்துக்களுடன்…
ந.க.துறைவன். வேலூர். 632 009.
செல் ; 944 22 34 822.
தேதி ; 15-11-2016.
*