திங்கள், 31 மார்ச், 2014

" முட்டாள்கள் தினம் {சென்ரியு }


*
முட்டாள்கள் தினம்
கொண்டாடி மகிழ்ந்தன
நன்றியுடன் நரிகள்.
*
பிரியாணி சமைப்பதற்கு
பறவைகளைச் சுட்டார்கள்
ஆட்டங் காட்டியது காக்கைகள்.
*
கூட்டம் கூட்டமோ கூட்டம்
ஒரு நைட்டி வாங்கினால்
இன்னொரு நைட்டி இலவசம்.
*
சேமித்தப் பணத்திற்குச்
செய்கூலி சேதாரம் இல்லாமல்
வாங்கினார்கள் நகைகள்.
*
கோடிக் கணக்கில் சுருட்டிக் கொண்டு
தலைமறைவாகி விட்டார்கள்
முதலீட்டாளர்கள் கவலை வேதனை.
 

ஞாயிறு, 30 மார்ச், 2014

மூடுபனி {ஹைக்கூ }

சத்தியம்,சிவம், சுந்தரம்
நெற்றியில் மூன்று
ஹைக்கூ வரிகள்.
*
*
கடுமையான வெயில்
புங்க மரத்தின் நிழலில்
 ஓய்வெடுக்கும் பசு.
*
ஜன்னலைத் திறந்தேன.
வெளியில் எதுவும் தெரியவில்லை
புகையாய் மூடுபனி.
*
கர்மா தீருமென
காசிக்குப் போய் வந்தார்கள்
மீண்டும் பின் தொடர்ந்தது கர்மா.
*
அழகாக இருந்தது
குழந்தையின் புன்சிரிப்பு
ஈ….ஈ…ஈ….!
*
பெண்களுக்குள் வாய்ச் சண்டை
வேடிக்கைப் பார்க்கும் பாதசாரிகள்
விலக்கியது திடீரென மழைத் தூறல்கள்.



யுகாதி நல்வாழ்த்துக்கள்

*
யுகாதி நல்வாழ்த்துக்கள்
*
இணைய உறவுகள்  அனைவருக்கும்
இனிய தெலுங்குப் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
*
அருளுரை:
“ ஆன்மீகம் என்பது அறிவற்கான ஒரு கேள்வியல்ல.
அது வாழப்பட வேண்டிய ஒன்று. ஆன்மீகம் என்பது
வாழ்க்கை. நீ அதை வாழ்ந்தால் தவிர, அது என்ன
என்று எதுவும் உனக்கு தெரியாது”.
                        --ஓஷோ.      
-ஆதாரம்:  “ரகசியமாய் ஒரு ரகசியம்” என்ற நூல்
*           பக்கம்-225.
  


வெள்ளி, 28 மார்ச், 2014

குழந்தைகள் பார்லிமெண்ட்...{சென்ரியு}

*
திறந்துப் பார்த்தார் ஊழியர்
காலியாக இருந்தது
தபால் பெட்டி.
*
உள்ளங்கை அரித்தது
பணம் எதிர்ப் பார்த்தேன்
வந்து நி்ன்றான் கடன்காரன்.
*
கலாட்டா வெளிநடப்பு கிடையாது
ஆரோக்கியமான விவாதம்
குழந்தைகள் பார்லிமெண்ட்.

மொட்டை மரங்களாய்
பாதை யெங்கும்
மெட்ரோ ரயில் தூண்கள்.

*

தேர்தல் கவிதைகள்

*
தலைவர் முகத்தில் சிரிப்பு்
தொண்டர்கள் முகத்தில் சோகம்
கோஷ்டிப் பூசலில் பிளவு.
*
நேர்மையானத் தொண்டர்
கட்சித் தாவினார்
கிடைத்ததுப் பொற்கிழி விருது.
*
அரசியல் தலைவர்கள்
ஆதரவுக் கேட்டு
மதுரையில் கிரிவலம்.
*
ஆதரவின்றித் தவிக்கிறது
ஆதரவாக இருக்க வேண்டிய
ஆதார் அடையாள அட்டை.  
*
கைக் கொடுத்தவர்கள்
கையை விலக்கிக் கொண்டு
நம்பிக்கையை இழந்தது கை.
*
வரவேற்கப் பட்டார்கள்
மணக்கிறது மாற்றான்
தோட்டத்து மல்லிகைகள்.




வியாழன், 27 மார்ச், 2014

வசைத்திட்டு...

ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்
*
உடம்பில் இனம் புரியாத அயற்சி
நீங்க கொஞ்ச நேரம்
கண்களுக்குக் கொடுத்தான் பயிற்சி
*
இரவுக் கொசுத்தொல்லை மின்வெட்டு
பகலில் வாகன நெரிசல் நச்சுப் புகை
அவ்வப்போது மனைவியின் வசைத் திட்டு. .
*

செவ்வாய், 25 மார்ச், 2014

மனம் உருக...!!

*
இலையுதிர் காலம்
பொன்னிற இலைகள் உதிர்த்து
சித்திரையை வரவேற்றன.
*
எதை அறிந்து மெய்யுணர்வு
அனுபவம் பெற்று ஞானியானார்
பலருக்கும் சந்தேகம்.
*
கண்ணாடிப் பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார் மனம் உருக

ஒதுவார் திருவாசகம்.

திங்கள், 24 மார்ச், 2014

மௌனக் கண்ணீர்

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
*
வேதனைத் தாங்க முடியாமல்
வெடித்து வெளியேறுகின்றன
அவளது மௌனக் கண்ணீர்
*
மாப்பிள்ளை பெண்ணுக்கும் போட்டி
விட்டுக் கொடுத்து யார் எடுப்பது?
குடத்திற் குள்ளிருக்கும் மோதிரம்.
*                              
வலியில் துடித்தான்
தடவினார்கள் சுண்ணாம்பு
தேள் கொட்டிய இடத்தில்.

*

கவிஞர். மு.முருகேஷ் ஹைக்கூ கவிதைகள்


*
நடுங்கும் விரல்கள்
குழந்தையின் கையில்
தீப்பந்தம்.
*
சிதறிய வண்ணக் கிண்ணம்
தரை வரைந்த
ஈர ஓவியம்.
*
யாரோ யாரையோ
திரும்பிப் பார்க்கிறார்கள்
எல்லோரும்.
*
விழுந்துக் கடக்கிறது
காலடிகளி லெல்லாம்
செத்த சுயமரியாதை.
*
மெதுவாய் வீசுகிற
காற்றிற்குக் கூட
வாலாட்டுகிறது சருகுகள்.



*
ஒரே நாளில் இரு விருது பெற்றுள்ள
நண்பர். மு.முருகேஷ் அவர்களுக்கு
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.






கவிஞர். மு.முருகேஷ் ஹைக்கூ கவிதைகள்


*
நடுங்கும் விரல்கள்
குழந்தையின் கையில்
தீப்பந்தம்.
*
சிதறிய வண்ணக் கிண்ணம்
தரை வரைந்த
ஈர ஓவியம்.
*
யாரோ யாரையோ
திரும்பிப் பார்க்கிறார்கள்
எல்லோரும்.
*
விழுந்துக் கடக்கிறது
காலடிகளி லெல்லாம்
செத்த சுயமரியாதை.
*
மெதுவாய் வீசுகிற
காற்றிற்குக் கூட
வாலாட்டுகிறது சருகுகள்
.
*  ஒரே நாளில் இரு விருது பெற்றுள்ள
நண்பர். மு.முருகேஷ் அவர்களுக்கு
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.


சனி, 22 மார்ச், 2014

தேர்{ஆறு}தல் சென்ரியு கவிதைகள்


*
இப்பொழுது எங்கே இருக்கிறது
தமிழ்,தமிழர் பண்பாடு,தமிழர் கொள்கை
வளர்த்தத் திராவிடம்.
*
பரபரப்பான பிரவேசம்
விரித்த வலையில் வீழ்கிறது
ஊழலை எதிர்த்தக் கட்சி.
*
பேசாமல் இருந்து சாதனைப் புரிந்தப்
பாராளமன்ற உறுப்பினருக்கு
பாராட்டுக் கேடயம் பரிசளிப்பு.
*
கட்சியிலிருந்து நீக்கப் பட்டவர்
பத்து நாளில் துவங்கினார்
புதிய கட்சி..
*
கூட்டணி விருந்தில்
பரிமாறப் பட்டது
சுவையான மாங்கனி.
*



வெள்ளி, 21 மார்ச், 2014

ந.க.துறைவன் {ஹைபுன்} கவிதை

*
கிராமத்தில் உறவினர் ஒருவரின் சாவிற்கு செல்ல
நேர்ந்தது. அங்குப் போய்ச் சேர்ந்தவுடன், அங்குள்ள
பெண் உறவினர்கள் எங்களைப் பார்த்தவுடன் எழுந்து
வந்துக் கட்டியணைத்து அழுதார்கள். வாங்கி வந்த
பூமாலையை கண்ணாடியின் மேல் வைத்து அஞ்சலி
செய்துக் கொஞ்ச நேரம் நின்றேன். அருகில் வந்து
நின்ற மற்றொரு உறவினர், என்னை அழைத்துச்
சென்று நாற்காலியில் உட்கார வைத்து விட்டு
நடந்துக் கொண்டிருந்தக் காரியங்களைப் பற்றி
விவரித்தார். பாடைக் கட்டும் வேலைகள் வேகமாக
நடந்தேறிக் கொண்டிருந்தன.
*
அழுதவர்கள் ஒய்வெடுத்தனர்
புதியதாக வந்தவர்கள் அழுதார்கள்
கண்ணீரில் குளித்தன கண்கள்.




வியாழன், 20 மார்ச், 2014

தேர்{ஆறு}தல் {சென்ரியு} கவிதைகள்


*
யாருக்கு ஓட்டளிப்ப தென்று
இலவசம் பெற்றுக் கொண்டவர்கள்
இருதலைக் கொள்ளியாய் தவிப்பு.
*
கூட்டணியிலிந்தவர்கள் விலகினார்கள்
விலகியவர்கள் கூட்டணியில் சேர்ந்தார்கள்
உருவானது கூட்டணித் தத்துவம்.
*
விவாதத்தில் பங்கு கொள்ளாத
பாராளமன்ற உறுப்பினர்
ரசித்துக் கொண்டிருந்தார் ஆபாசபடம்.

*
பரபரப்பாகப் போனார் காரில்
பிரியாணிச் சாப்பிட
மாணவி பலி.
*
தனித்துப் போட்டி என்று
அறிக்கை விட்டார்கள்
தவித்துப் போனார்கள் தொண்டர்கள்.
*
தேர்தல் பேச்சு
தேனாய் இனித்தது
கசக்கிறது பொய் வாக்குறுதிகள்.  




புதன், 19 மார்ச், 2014

தேர்{ஆறு}தல்


*
தகிக்கும் சூரியன்
மலரும் தாமரை
உதிரும் இலைகள்.
*
கண்ணீரில் மிதக்கிறது
தண்ணியில் மிதக்கும்
மனிதர்களின் குடும்பங்கள்.
*
கட்சிகளின் ஆக்ரமிப்பில்லை
சுத்தமாகவே இருக்கிறது
வீட்டுச் சுவர்கள்.
*
வாக்குறுதி
ஆட்சிக்கு வந்தால் அளிப்போம்
கட்டில், பீரோ இலவசம்.
*
பள்ளிக் கூடத்தில் தொடங்கி
சட்டசபையில் பெஞ்சுத் தட்டுகிறார்கள்
தொட்டில் பழக்கம்.


தேர்{ஆறு}தல் கவிதைகள்


*
நோட்டோ தெரியுமா?
தெரியாது,எது தெரியும்?
ரூபாய் நோட்டு.
*
பேருந்தில் பச்சை இலை
உட்கார இடமில்லை
பறந்து விட்டது குருவி.
*
குற்றவாளிகளே
குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்
கேட்டு ரசிக்கும் வாக்காளர்கள்.
*
வாக்காளர்களுக்கு
இலவசமாக அளிக்கப் பட்டது
துடப்பக் கட்டை.{தேர்தல் சின்னமல்லவா…}
*
பேசுவதைக் கேட்கிறார்கள்
செய்ததைக் கவனிக்கிறார்கள்

தீர்ப்பளிக்கும் வாக்காளர்கள்.

செவ்வாய், 18 மார்ச், 2014

புலன்பசி!

அமரன் கவிதாவெளி
*
புறமென்ன, அகமென்ன-
அவ்வப்போது தலை நீட்டும்
அவரவர் புலன்பசி!
*
மப்பும் மந்தாரமாய்
வானில் கண்ணாமூச்சி ஆட்டம்
பொய்யாச்சு மழை மட்டும்.                  
*
சுகந்த வைகைறையும்
மாமிசத் துண்டாடும் ஒரு சிலர்…
வரங்கள்-சாபங்கள்.
*
இருட்டும் நரகந்தான்
குருதி வாசம் வெருட்டி வர
இரட்சிப்பில் செங்கதிரோன்.
*
உதிர்ந்துப்போ. காற்றே
அன்னை மடியென்றமைதியிலே
கண்கள் துயிலட்டும்.
-நன்றி:-  மகாகவி-இதழ்-பிப்ரவரி-2014.


திங்கள், 17 மார்ச், 2014

கல் வீடு {ஹைபுன்}



வேப்பம் பூக்கள் எல்லாம் தரையில் உதிர்ந்துக் கிடந்தன.
பூக்களைச் சுற்றிச் சிற்றெறும்புகள் விளையாடிக்
கொண்டிருந்தன். கோயிலுக்குள் மூலவரைத் தரிசித்து
விட்டு வெளியில் வந்து, வேப்ப மரத்தை மூன்று முறை
சுற்றி வந்து, அதன் கீழே அமர்ந்தனர். குளிர்ச்சியானக்
காற்று உடம்பில் பட்டவுடன் இதமாக உணர முடிந்தது
மர.த்தைக் கும்பிட்டுக் கடந்துப் போகும் சிலர் எதையோ
வேடிக்கைப் பார்த்தவாறு சென்றனர்.
*
மரத்தின் கீழ் மேடையில்
பிரார்த்தனைச் செய்தவர்கள்
கட்டினார்கள் கல் வீடு.

*

ஞாயிறு, 16 மார்ச், 2014

தொந்திக் குலுங்கியது

*ந.க.துறைவன் {சென்ரியு} கவிதைகள்

கோழை என்று அவனை
கேலி செய்தார்கள்
செய்துக் காட்டினான் ஓரு சாதனை.
*
கிழவிகளி்ன் மனச் சுமையை
இறக்கி வைக்கிறது
அவர்கள் பாடும் ஒப்பாரி.
*
சிரிக்கச் சிரிக்கத்
தொந்திக் குலுங்கியது                     

குழந்தைக்குச் சிரிப்பு.

வியாழன், 13 மார்ச், 2014

அற்புதத் தருணம்.

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
இலைகளின் இடைவழியே
தெளிவாகத் தெரிந்தது
பௌர்ணமி நிலா.
*
எந்த நொடியில் இருக்கிறது
வாழ்வின்
அற்புதத் தருணம்.

*
இனம் புரியாதத் தோய்வும்
மனச் சலிப்புமாய்
கடுத்துக் காட்டுகிறது முகம்.


பலூன் சிரிப்பு {ஹைபுன்}


*
திருமண மண்டபத்திற்கு வெளியில் காற்றோட்டமாய் கூடி நின்று
 சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.,நகைச் சுவையாய், அவர்கள்
 பார்வையை வேறு வேறு திசையில் பாய விட்டுச் சிரித்துக்
கொண்டிருந்தார்கள். பலரும் பேசுபவர்களை வேடிக்கைப் பார்த்துக்
கொண்டே “ அப்படி என்ன தான் நகைச்சுவையாகப் பேசிக்
கொள்கிறார்கள்” என்று கேட்காமல், முகத்தை வேறொரு பக்கம்
திருப்பி வைத்துக் கொண்டுக் கடந்துப் போகிறார்கள்.
வேகவேகமாய் ஊள்ளிருந்து வெளியில் வந்தவர், அவர்களின்
சிரிப்பில் பங்குக் கொள்ள முயன்றார். அவரைப் பார்த்த போதே
பேசிக் கொண்டிருந்தவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டு.
கலர்கலராய் முகூர்த்தப் பட்டுப் புடவையில் சிரிப…சிரிப்….என்று
சத்தமிட்டுப் போகும் பெண்களின் மீதுப் பார்வைப் பதித்து,
அனைவரும் அமைதியானார்கள்.
      குழந்தைகளின் கைகளில் இருக்கும்
      பலூன்களின் பறக்கும் சிரிப்பை

      வேடிக்கைப் பார்க்கிறது குரங்குகள்.

புதன், 12 மார்ச், 2014

*உயிர் மூச்சு{ ஹைக்கூ}

*உயிர் மூச்சு{ ஹைக்கூ} .

*
கை வேலை செய்கிறது
வாய் பேசுகிறது, பூத்தொடுப்பவளைக்
கவனிக்கிறது பூக்கள்.                                      
*
கண்ணாடிச் சன்னலை எதற்கோ?
பட்பட் டென்று கொத்தி
அழைக்கின்றன சிட்டுக் குருவிகள்.

*
இதமாய் உணர்த்தியது
என் மேல் பட்டு
பூக்களின் உயிர் மூச்சு. 

திங்கள், 10 மார்ச், 2014

அரட்டைக் கச்சேரி

ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்
*
சுவைக்கிறார்கள் கடலைப் பொரி
ஆல மரத்தின் கீழ் அமர்ந்துப்
பெரிசுகளின் அரட்டைக் கச்சேரி
*
எல்லாமே இப்பொ.ழுது சரி
எதற்காக வெண்ணிறமாய்
நெற்றியில் ஒற்றை வரி்
*
தினமும் காலையில் பஸ்கி்
எடுத்து உடலை வளர்ப்பவன்
இரவில் அருந்துகிறான் விஸ்கி
*
அழுது அடக்கினால் விம்மல்
நிறுத்த முடி.யவில்லை அவளால்
திடீரென வந்து விட்டத் தும்மல்.
*
வாங்கிக் கொத்த வுடன் எக்காளம்
அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்து
தானும் உண்டான் மக்கா சோளம்.


ஆலமரங்கள்.

கவிஞர்.மித்ராவின் ஹைக்கூ கவிதைகள்
*
காற்றின் சிறகுகள்
முறிபடும் முட்களில்
வருந்தும் மேகம்.
*
மெல்ல நட குருவியே
உடைந்து விடப் போகிறது
புல்லில் பனித் துளி.
*
பழம் கோயில்களில்
நூற்றாண்டு கதை பேசும்
ஆலமரங்கள்.
*
இரவு முழுவதும்
தூங்க விடவில்லை
குயிலின் சோகம்.
*                     
பின்னிக் கிடக்கும்
சிலந்தி வலைச் சிக்கல்கள்
வாழ்க்கை.
*
பறி போனது
அணிலின் சுதந்திரம்
கிளைகளில் தேன் கூடு.



ஞாயிறு, 9 மார்ச், 2014

நீயே சொல்

ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்
*
காற்றில் மிதந்து வரும் மண் வாசனை
அணைத்த வுடன் வீசியது
குழந்தை மேல் பால் வாசனை.
*
சத்தியமாய் நீயே சொல்
உண்மைப் பேசாத
உன் மனமே பாராங்கல்
*
பேசியதையே பேசி
மீண்டும் பேசிப் பேசி

அறுக்கிறான் தொடர்ந்துப் பேசி.