*
தகிக்கும்
சூரியன்
மலரும்
தாமரை
உதிரும்
இலைகள்.
*
கண்ணீரில்
மிதக்கிறது
தண்ணியில்
மிதக்கும்
மனிதர்களின்
குடும்பங்கள்.
*
கட்சிகளின்
ஆக்ரமிப்பில்லை
சுத்தமாகவே
இருக்கிறது
வீட்டுச்
சுவர்கள்.
*
வாக்குறுதி
ஆட்சிக்கு
வந்தால் அளிப்போம்
கட்டில்,
பீரோ இலவசம்.
*
பள்ளிக்
கூடத்தில் தொடங்கி
சட்டசபையில்
பெஞ்சுத் தட்டுகிறார்கள்
தொட்டில்
பழக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக