மலைப் பாதையில்
நடந்தான்
பெயர் சொல்லி
குரல் கொடுத்தான்
எதிரொலித்தது
அப் பெயர்.
*
நதியில் கால்
வைத்தான்
நனைந்தக்
கால்களில்
முத்தமிட்டுச்
சென்றன மீன்கள்.
*
வழி கேட்டு
நட்க்கிறான்
மீண்டும்
வழி கேட்டு நடக்கிறான்
வழி தெரியாமல்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக