திங்கள், 31 ஆகஸ்ட், 2015

வெளி...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
யாருமற்ற வெளியில்
காற்று மட்டும் இருந்தது           
திசை நோக்கி பறவைகள்.
*
Unattended outdoors
It was only the wind
Orientation towards the birds.

*

சனி, 29 ஆகஸ்ட், 2015

தனிமை...!! [ Iஹைக்கூ ]


*
தனிமையின் இன்பம்
உணர்ந்து அறிய அறிய
அனுபவ விழிப்பு நிலை.
*

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

பசுமை...!!

Haiku – Tamil / English.
*
பூமியை அழகு படுத்தி
பாதுகாக்கின்றன
பசுமையான செடிகள்.
*
The beauty of the earth
and justified Sheltering
Evergreen plants..

*

விசாரிப்பு....!! [ Haibun / iஹைபுன் ]

.
*
வீடு, பூட்டியிருந்தது. “ எங்கே போயிருக்கிறார்கள்என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தார்.தெரியலேயே சார், எங்கே போறேன்னு யாரிடம் சொல்லிட்டுப் போறாங்கஎன்று கொஞ்சம் கடுப்பாகவே பதில் சொன்னார். அவருக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ‘ நன்றி சார்என்று சொல்லிவிட்டு நகர்ந்தவர், பக்கத்திலிருந்த மரத்தடியின் அடியில் ஒதுங்கி நின்றார்.
*
பக்கத்து வீட்டுக்காரன் பகை
எதிர் வீட்டுக்காரன் நண்பன்
உறவுக்கு கைகொடுக்கிறது மரங்கள்.
*

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

புத்தன்...!! [ ஹைக்கூ ]


*
மனமெல்லாம் கடந்து
தனிமையில் புத்தன்
உதட்டில் புன்னகை.

*

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

மொட்டை

மொட்டை அடித்தப் பிறகும்
அழகாகாவே இருக்கிறாள்
கூந்தல் இழந்தப் பெண்.


தீபம்

இராகுகாலம் துர்க்கைமுன்
பிரார்த்தனையாகப் பிரகாசித்தது
எலுமிச்சம் பழத் தீபம்.


குடை

ஒரு குடையில்
நாமிருவர்
மழையின் சிரிப்பு.


திங்கள், 17 ஆகஸ்ட், 2015

சிற்பி...!! [

Haiku – Tamil / English.
*
அழகான சிலையின்
உதட்டில் புன்சிரிப்பு
சிற்பி மனவலி..
*
The beautiful statue
A smile on your lips        
Sculptor mental pain.
*

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

தூங்கு

நிம்மதியா தூங்கு
இல்லேனா
நினைச்சி ஏங்கு.


புதன், 5 ஆகஸ்ட், 2015

ஸ்பரிசம்...!! [ ஹைக்கூ ]


*
ஆணின் ஸ்பரிசம் பட்டு
மெல்லிய அதிர்வை
உணரும் பூ.
*