திங்கள், 30 மே, 2016

விழிப்புணர்வு..!! ( ஜென் )



“ ஆன்ம ஞானம் பெறுவது எப்படி? ”
“ மிக எளிது, சூரியன் தினமும் காலையில் கிழக்கே உதிக்க நீ என்ன முயற்சி செய்கிறாயோ அதுவே போதும். ”
“ அப்படியானால் நீங்கள் சொல்லித்தரும் ஆன்மீகப் பயிற்சிகளுக்கெல்லாம் என்ன அர்த்தம்? ”
“ சூரியன் உதிக்கும்பொழுது நீ தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காகத்தான். ”
ஆதாரம் ; நொடிப் பொழுதில் ஞானம் – அந்தோணி டி மெல்லொ – நூல் - பக்கம் – 19.  
தகவல் ; ந.க.துறைவன்

*

புதன், 25 மே, 2016

அறிவாளி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
சுழலில் சிக்கிய படகு
நீச்சல் தெரியாமல் தத்தளிப்பு
படகோட்டியை அவமதித்த அறிவாளி
*
The boat caught in a spiral
Swimming knowing thereof
Insulting the crew is awesome

*

செவ்வாய், 24 மே, 2016

மூக்குத்தி...!! ( சென்ரியு )

Senryu – Tamil / English.
*                                 
இருட்டறை எங்கும்
ஒளி வீசியது
மூக்குத்தி வெளிச்சம்.
*
Dark everywhere
Light shone
Illuminated nose.

*

வியாழன், 19 மே, 2016

சுமை...!! ( ஹைபுன் )


*
பலாமரத்திற்கு பலாப்பழம் சுமை. மாமரத்திற்கு மாங்கனிகள் சுமை. தென்னைக்கு இளநீர்க் காய்கள் சுமை. காய்க்கும் மரங்கள் எல்லாம் தாய்மைக் குணம் கொண்டவை என்பதால், அவைகள் மகரந்தச் சேர்க்கையால் சூல் கொண்டு பூவாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகிச் தொங்குகின்றன. பெண்ணே! நீ  இயற்கையின் படைப்பில் தாய்மையின் வசீகரமான அழகைப் பெற்று திகழ்கின்றாய். இயற்கைச் சுமப்பதை விட கூடுதாய், நீ வயிற்றிலே சுமக்கிறாய் இடுப்பிலே சுமக்கிறாய் தலையிலே சுமக்கிறாய் பூரணமாய் அனுபவிப்பவளுக்குத் தானே தெரியும்? அந்த சுமையின் அந்தரங்கம்.

கருவறையின்  சுமை
தாய்மையின் உச்ச சுகம்
பெண்ணிற்கு பெருமை

*

நினைவுகள்...! ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*  
இப்பொழுதும் எத்தனையோ நிகழ்வுகள்?
கடந்த கால நினைவில் மனம்
மலையை கடக்கிறது பறவை.
*
Many events now?
Remember the mind of the past
Bird mountain passes.

*

செவ்வாய், 17 மே, 2016

பால்வெளி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வெளியில் பறந்து  திரியும்
பறவைக்கு தெரியுமா?
பால்வெளி  ரகசியம்.
*
Who flew in space
Bird know?
The secret of the Milky Way.

*

காத்திருப்பு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
மழையை எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறது
காட்டில் வளரும் மரங்கள்.
*
Expectant rain
Waiting Growing
Trees in the forest.

*

திங்கள், 16 மே, 2016

குடை...!! ( ஹைபுன் )



இந்தப் பூமி அதிகம் வெப்பமடையாமல் பாதுகாப்பதற்காக மரம்செடி கொடிகள் எல்லாம்  குடை பிடித்து நிழல் கொடுக்கின்றன. உயிரினங்கள் கடுமையான வெப்பத்திலிருந்து, தற்காத்துக் கொள்கவதற்காக நிழல் தேடி ஒதுங்கி நின்று ஆசுவாசம் பெறுகின்றன. வயதானவர்கள் கையில் குடை வைத்துக் கொண்டே நடைபழகுகிறார்கள்.  வெயிலுக்கு நீ குடைப் பிடித்துப் போவதை நான் பார்க்கவில்லை மழைக்கு நீ குடைப் பிடித்துப் போவதை நான் பார்க்கவில்லை எப்பொழுதும் எடுத்து விரித்துப் போகாமல் எதற்காக வைத்திருக்கிறாய் கைப்பையின் உள்ளே வண்ணக்குடை? அது உன் பாதுகாப்பிற்காகத்தானே?

எடுத்துக் குடையை விரி
இருவரையும் இணைக்கும்
மழைக்கு நன்றி சொல்வோம்.

ந.க.துறைவன்

சனி, 14 மே, 2016

வரம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வாழ்க்கை ஒரு வரம்
மனிதருக்கு
வாழக் கிடைப்பது ஒரே தரம்.
*
Life is a gift
Humans
Only quality live availability.

*

திங்கள், 9 மே, 2016

தாமரைப்பூ...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
தன்  நிழலை  நீரில்
தானே  பார்க்கிகிறது
தாமரைப் பூ.
*
His shadow in the water
Sees Himself
Lotus flower.

*

புதன், 4 மே, 2016

நத்தைகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
ஆற்றில் வாழும்
நத்தைகளுக்கு தெரியும்?
மணலை பற்றிய அறிவு.
*
Live in river
Slugs knows?
Knowledge of sand.

*

திங்கள், 2 மே, 2016

நுங்கு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வெயிலில் மூதாட்டி
இலை போர்த்திய கூடை
உள்ளே குளிர் நுங்குகள்.
 *
Godmother in the sun
Leaf-covered basket
In cold jelly vettin.