வியாழன், 31 ஜூலை, 2014

சுவையான தேனீர்...{ கட்டுரை ]


*
இந்திய தேசம் பழம்பெரும் தேசம். இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையும் அரசர்களின் கீழ் தான் நடைபெற்று வந்துள்ளன. அக்காலத்திய அரசர்களின் அரண்மனைக் கட்டிடங்கள் மிகுந்த கலைநய வேலைப்பாடுடன், கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றி நீர் நிறைந்த அகழி, வலிமையான கற்களால் கட்டப்பட்ட மதில் சுவர்கள், நான்குப் புறமும் வாயில்கள், உள்ளே அகன்ற வீதிகள், அரசபை மண்டபம், அரசருக்காக ஆலோசனைக்கூடம், அரசர், ராணிகள் மற்றவர்க்கென்று தனித்தனி படுக்கையறைகள், தேரோடும் வீதிகள், குளிப்பதற்னெ நீராழிமண்டபங்கள், யானை குதிரை லாயங்கள், போர்பயிற்சிக் கூடங்கள், வழிப்பாட்டுக் கோயில்கள். காஜானா அறைகள்,ரகசியஆலோசனைக்கூடங்கள், சுரங்கப்பாதைகள் என சிறந்தமுறையில் கட்டப்பட்ட அரண்மனைகள், இந்து, முஸ்லிம் மன்னர்களின் நாடு பிடிக்கும் ஆசையினால் போர்கள் மூண்டுள்ளது. அதற்குப் பின்னர் வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவைத் துண்டாடி, மக்களிடையே பகைமை மூட்டி, மன்னர்களைச் சிறைப் பிடித்து, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். அப்போது, போர்களால் அரண்மனைகளை அழித்தும் சிதைத்தும் மிகுந்தச் சேதத்தை ஏற்படுத்தினர் அதன் எச்சங்களாகவே, இந்தியா முழுவதும் இன்றைக்கும் இருக்கின்ற கோட்டைகளை, தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிறிசில இடங்களில் அரண்மனைகளை நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்து அனுமதிக்கும் காட்சிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரண்மனைகள் சிதைவுற்று யாரும் உள்நுழைந்த காணமுடியாத அளவில் உள்ளன. அங்கே மக்கள் யாவரும் பயத்தோடு தான் சென்று பார்க்கின்றனர். மக்கள் பார்வையிட முடியாத அளவிலும் பல கோட்டைகள் இருக்கின்றன. அக் கோட்டைகளின்  உள்ளே முன் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது.யாருக்கும்அனுமதியுமில்லை.இருட்டும்,செடிகொடிகள் புதர்கள் நிறைந்த அவ்விடத்தை வௌவால்களும்,சிறுபறவைகளும்,எலிகளும்,
ஒணான்களும் இன்ன பிறவிலங்குகளும்,  குறிப்பாக,  வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே,
*
“ அரண்மனைக்குள் நுழைய
அனுமதியில்லை யாருக்கும்
வண்ணத்துப்பூச்சிகள் மட்டும். ” – [ நா.விச்வநாதன் – “ முள்ளில் அமரும்
*
பனித்துளிகள் ” நூல் பக்கம் 18 ]  என தொன்மத்தை நினைவுகூறும் வகையில் ஹைக்கூ கவிதையினைப் படைத்துள்ளார் கவிஞர். ஒரு ஹைக்கூ கவிதையின் அழகியல் என்பது படைப்பாளி தேர்வு செய்யும் கருப்பொருளில் தானிருக்கின்றன என்பது இந்த ஹைக்கூ கவிதையில் அறியமுடிக்கின்றது.
*






கொக்குகள் நடனம்...!! [ஹைக்கூ ].


*

தரிசு நிலங்களில்
புல்லைத் தேடுகின்றன
பொறுமையாய் எருமைகள்.
*
பாதையில்லா பாதையில்
மனம் போல் திரிகின்றன
காட்டில் கரடிகள்.
*
நதிக்கரை வயல்களில்
கொக்குகள் நடனம்
வேடிக்கைப் பார்க்கின்றன வாத்துகள்.

*

திங்கள், 28 ஜூலை, 2014

ஊருக்கு அழகு...!! [ ஹைக்கூ ]


*
ஊற்று நீர்ப் பாய்ந்து
ஊருக்கு அழகு சேர்க்கிறது
மலைச் சரிவின் கீழ்நீரோடை.
*
வரப்பில் நடக்கும் போது
வாய் நமநமக்கிறது
செண்டாய் கம்பங்கதிர்கள்.
*
மழைநீர் வெள்ளம்
ஒடையில் பாய்கிறது
துள்ளுகின்றன மீன்கள்.

*

ஞாயிறு, 27 ஜூலை, 2014

எதிர்திசையில்...!! ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
எந்நேரமும் விண்ணிலிருந்து
இறங்கி காற்றில் கலந்து
பூமிக்கு வருகிறது அணுத்துகள்கள்.
*
அத்துமீறும் மனம்
ஆசைகளைக் கட்டுப்படுத்தும்
வாழ்வின் அறநெறிகள்.
*
எனக்கு எதிர்திசையில்
பயணிக்கின்றன
இயற்கைக் காட்சிகள்.
*



கூழ்வார்ப்பு...!! [ சென்ரியு ]


*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
ஆடிமாதம் கூழ்வார்ப்பு திருவிழா
யாரும் குடிக்கவில்லை
கூழ் எல்லாம் பாழ் .
*
ஆடிக் காற்றில்
முறிந்து விழுந்தது
முருங்கை மரம்.
*
கல்யாணங்கள் செய்தால்
ஆகுமா ஆகாதா ?
ஆடி மாதம்

*

சனி, 26 ஜூலை, 2014

ஆறுகள் அழுகின்றன...!! [ சென்ரியு ].

NA.GA,THURAIVAN'S SENRYU.
*
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*

வெள்ளி, 25 ஜூலை, 2014

வலைவீச்சு...!! [ ஹைக்கூ ].

*
வலை வீசும் மீனவர்கள்
படகு நிறைய மீன்கள்
வட்டமிடும் கழுகுகள்.
*

வியாழன், 24 ஜூலை, 2014

பொதுச்சொத்து...!! [ கவிதை ].


*
எவருக்கும் சொந்தமில்லை
ஜீவநதிகளின் நீர்
பிரபஞ்சத்தின் பொதுச் சொத்து.
*
நரம்புகளில் ஒடும்
பூமியின் இரத்தமோ?
நதிகளின் நீர்.

*

புதன், 16 ஜூலை, 2014

குழந்தையின் மொழி...!!

*
NA.GA.THURAIVAN'S HAIKU.
*
சிரிப்பு, அழுகை
சைகை ஒலிகள்
குழந்தையின் மொழி.
*
எறும்புக் கடித்ததோ?
தூக்கம் கலைந்தது
அமர்க்களம் செய்யும் குழந்தை.
*
மீசையைத் தடவி
மகிழ்ந்துச் சிரிக்கிறது
தூக்கிக் கொஞ்சிய குழந்தை.
*
 


நதிக்கரைகளில்...!! [ ஹைக்கூகவிதைகள்.]

*
NA.GA.THURAIVAN'S HAIKU.
*
மரணித்தவர்கள் எல்லாம்
வாழ்கிறார்கள் என்றும்
நதிக் கரைகளில்…
*
பயிர்களுக்கு உயிர் தருகிறது
மனிதருக்கு உணவு தருகிறது
நதிக்கரை நிலங்கள்.
*


திங்கள், 14 ஜூலை, 2014

சிறகு விரித்து...!! [ சென்ரியு ].

*
NA.GA.THURAIVAN'S HAIKU.
*
இரக்கமில்லா இயற்கையே
ஏழைகளை ஏன் படைத்தாய்?
ஏழ்மை ஒழிக, ஏழைகள் வாழ்க.
*
பூவுலகின் சிறுவர்கள்
சிறகு விரித்துப் பறக்கும்
கள்ளமில்லாப் பறவைகள்.
- ந.க. துறைவன் சென்ரியு.

*

தொப்பைப் பையன்...!! [ சென்ரியு ].

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
*
எல்லோரும் சிரித்தார்கள்
டீச்சர் அதட்டினாள்
வகுப்பில் குண்டுப் பையன்.
*
சிரிக்கச் சிரிக்க
குலுங்கி ஆடியது
குண்டு பையன் தொப்பை.
*
குண்டு பையனைப் பார்த்துவிட்டு
தூர விலகிப் போனது
தெருவில் நாய்க் குட்டி.

*

சனி, 12 ஜூலை, 2014

பிம்ப இரயில்...[ ஹைக்கூ ].

*
NA. GA. THURAIVAN'S HAIKU.
நதியில் நீர் பெருக்கு
கரையை இணைக்கும் பாலம்
பாய்ந்து கடக்கும் இரயில்.
*
பாலத்தில் ஒடுகிறது
நதி நீரின் கீழ்
பிம்ப இரயில்.

*

வெள்ளி, 11 ஜூலை, 2014

உள்ளத்தின் ஒளி...!! [ ஹைக்கூ ] .


*
NA.GA. THURAIVAN'S HAIKU
*
அகலில் எண்ணெய்
எரியும் திரி, அலையும் புகை
உள்ளத்தின் உண்மை ஒளி.
*
வரங்கேட்டு சன்னதியில்
பிறவாமை, இறவாமை
நெஞ்சில் பொறாமை.
*
கட்டிய வீட்டில் நிம்மதியாய்
முதுமையில் சிந்தனை
மோட்ச வீடு.
*


கண் விழித்து..!! [ ஹைக்கூ ]

NA.GA.THURAIVAN'S HAIKU
*
*
தூர்வாரிய குளத்தில் கிடைத்தன
நூற்றாண்டு கால
ஐம்பொன் சிலைகள்.
*
வாழைத் தோப்பை அழித்தன
நீர்த் தேடி ஊருக்குள் புகுந்தக்
காட்டு யானைகள்.
*
மாந்தோப்புக்கு காவல்
இரவு கண்விழித்து
மௌனமாய் ஆந்தைகள்.

திங்கள், 7 ஜூலை, 2014

ஒற்றை மனிதன்...!! [ ஹைக்கூ }.


NA.GA THURAIVAN'S HAIKU.
*
ஒடு மீன் ஒட உறுமீன் காத்திருக்க
கரையில் தூண்டிலோடு
ஒற்றை மனிதன்
*.

உறவில் இணைந்து...!! [ ஹைக்கூ ]

*
உறக்கமின்றி இரவெல்லாம்
உறவில் இணைந்து
மணந்தது மல்லிகைப் பூ.
*

வெள்ளி, 4 ஜூலை, 2014

நொறுக்குத்தீனி...!! [ சென்ரியு }.

*
N.G.THURAIVAN'S SENRYU.
*
பசுமையான நிலங்கள்
செம்மண் பூமியெங்கும்
வலி நிவாரண தைல மரங்கள்.
*
அடிமையாகும் பல குழந்தைகள்
கவர்ச்சியானப் பாக்கெட்
நொறுக்குத் தீனியால் நோய்கள்.

புதன், 2 ஜூலை, 2014

அழகை ரசிக்கும் நதி....!! [ஹைக்கூ ]..


*
N.G.THURAIVAN'S Haiku
*

*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*