வியாழன், 31 டிசம்பர், 2015

குளிர்ச்சி...!! ( ஹைக்கூ )

மார்கழி – 31.
*
தீமூட்டி அமர்ந்தனர்
வார்த்தைகளில் குளிர்ச்சி
பனிக் காலம்.
*
மார்கழி – 32.
*
நகரத்தில் கோழி கூவலில்லை
சங்கொலிப்பது கேட்டீரோ?
துயியெழுவீர் தோழியர்காள்.        

*

நல்வாழ்த்துக்கள்...!!

2016 - ,இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.
*
நிகழ்ந்தது, நிகழ்வது, நிகழப்பேவது அனைத்திற்கும் அதிபதியானவனே
இப் புத்தாண்டில் நிகழ்வன எல்லாம் நல்லதாகவே நிகழ்ந்திட அருள்புரிவாய்.

*.

புதன், 30 டிசம்பர், 2015

துளசிசெடி...!! ( ஹைக்கூ )

மார்கழி – 29.
*
பசுமையாய் துளசிசெடி
மாடத்தில் அகல்விளக்கு
உள்மனதில் பிரார்த்தனைகள்.
*
மார்கழி – 30.
*
பனிசூழ்ந்த நெடுஞ்சாலையில்
யாருக்கு பாதுகாப்பாய்?
வானுயர்ந்த அனுமன்சிலைகள்.
*

செவ்வாய், 29 டிசம்பர், 2015

தீர்த்தம்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 27.
*
கோயில்களில் கொடுப்பதுண்டு
நோய் தீர்க்கும் மருந்தாகும்
துளசி தீர்த்தம்.
*
மார்கழி – 28.
*
ஓடையின் கரையில் அமர்ந்து
பனியில் அலகைச் சிலிப்பிக்
கழுவிடும் சிட்டுக்குருவிகள்.
*

திங்கள், 28 டிசம்பர், 2015

நிலக்காட்சிகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 25.
*
காவல் பொம்மைகள்
தலையெலாம் எச்சங்கள்
கழுவி விடுகின்றன பனித்துளிகள்.
*
மார்கழி – 26.
*
ஏருழுதல் கமலை இறைத்தல்
நிலக்காட்சிகள் காணாமல் போனது
நவீன இயந்நதிரங்கள் ஆக்ரமிப்பு.

*

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

கவிதை எங்கிருந்து....!!

*.
கவிதையை
வெளியில் தேடாதீர்
அவரவர் வாழ்க்கைக்குள்
இருப்பதுதான் கவிதை.
2.
உங்களுக்குள் இருக்கும் கவிதையைத்தான்
தேடி அலைந்தும்
குழப்பி – குழம்பியும்
பிறர் கவிதையில் காண்கிறீர்கள்.
உங்களுக்குள் இதை
வசப்படுத்தாமல் என்னதான் பேசுகிறீர்.
தேடுங்கள்
உங்களுக்குள் கவிதை கிடைக்கும்.
ஆதாரம் : கள்ளும் முள்ளும் கவிதைகளும் – கோவை ஞானி – பக்கம் 96.
தகவல் :ந.க.துறைவன்.

*

மண் வணங்கும்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 23.
*
தூங்கும் பூக்களின்
உறக்கம் களைத்தெழுப்புவிறது
பொன்வண்டின் ரீங்காரம்..
*
மார்கழி – 24.
*
முற்றிய நெற்கதிர்கள்
பனிநீரின் பாரத்தால்
சிரம் தாழ்த்தி மண் வணங்கும்.

சனி, 26 டிசம்பர், 2015

ரசிகன்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 21..
*
கடலுக்குள் வெண்சங்குகள்
நீர்பரப்பில் அலையோசை
இசையை ரசிப்பானா சூரியன்.
*
மார்கழி – 22.
*
பற்றியெரிந்தனவாய்
குளத்தின் மேற்பரப்பில்
மார்கழி வெண்புகை.

*

மூடுபனி....!! ( ஹைக்கூ )

மார்கழி – 19
*.
சில்லென்று மென்காற்று
இலையும் பூவும் குளிரில்
நுனியில் சொட்டும் பனித்துளிகள்.
*
மார்கழி – 20.
*
வெளியெங்கும் மூடுபனி
வீதியில் பஜளைக் கூட்டம்
கடந்து போகின்றன பறவைகள்.
*

வெள்ளி...!! ( ஹைக்கூ )

மார்கழி – 17.                               
*
பனிமூட்டம் சூழ்ந்ததடி
எங்கோ காணாமல் போச்சுதடி      
வானில் முளைத்த வெள்ளி.
*
மார்கழி – 18.
*
குளிக்கும் படித்துறையில்
பெண்களின் சிரிப்பலைகள்
வெட்கத்தில் செந்தாமரைகள்.
*

வெள்ளி, 25 டிசம்பர், 2015

காதல்கனா...!! ( ஹைக்கூ )

மார்கழி – 15.
*
காதல் கனாக் கண்டவர்கள்
ஆண்டாள் கவிமீரா
கண்ணனின் உயிர்த்தோழிகள்.
*
மார்கழி – 16.
*
பனியில் நிர்வாணச் சிலைகள்
நிழல் கொடுக்கும் மரங்கள்         
பூஉதிர்த்து வணங்கும் கருவிகள்.
*

சூடிக் கொடுத்த சுடர்கொடி...!! ( ஹைக்கூ )

மார்கழி – 13
*
காதலனுக்கு சூடிக் கொடுத்தாய்
பாமரர்க்குப் பாடக் கொடுத்தாய்
கன்னியரை வீதிக்கு அழைத்தாய் தோழி.
*
மார்கழி – 14.
*
கீழ்வானம் வெளுத்து வாசல்தெளித்து
வீடுகள் திறந்தன காண். உள்ளே
உடல் சலிக்கும் பெண்குலங்கள்.
*

வியாழன், 24 டிசம்பர், 2015

நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
*
இகழ்பவனைக் கண்டிக்கிறவன் அவமானத்தைப் பெறுகிறான்.
தீயவனைக் கண்டிக்கிறவன் அவன் திட்டுக்களைப் பெற்றுக் கொள்கிறான்.
*
இகழ்பவனைக் கடிந்துக் கொள்ளாதே. அவன் உன்னை வெறுப்பான். ஞானமுள்ளவனைக் கடிந்துக்கொள் அவன் உன்னை நேசிப்பான்.   
*
ஞானமுள்ளவனக்கு அறிவுரை கொடு. அவன் ஞானத்தில் தேறுவான். நீதிமானுக்குப் போதனைசெய், அவன் அறிவில் விருத்தியடைவான்.
பைபிள் நீதிமொழிகள்.

*

தும்பிகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 11.
*
கோபுரத்தில் புறாக்களின் குரல்
பூசைமணிச் சத்தம் மேட்டு
துதித்துப் பறந்தன தும்பிகள்.
*
மார்கழி – 12.
*
வைகறை நீராடி கூந்தல்முடித்து
ஆண்டாளின் தோழி
பாடிக் களித்தாள் திருப்பாவை.

*

புதன், 23 டிசம்பர், 2015

உரையாடல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil [ English.}
*
உணவு மேசையில்
கரண்டிகள் பேசின
நின்றது உரையாடல்.
*
Food on the table
Talked with spoon
Conversation stopped.

*

சிறுவண்டுகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 9.
*
பசுக்கள் பால் கறக்கும்
எருமைகள் மேயப் போகும்
வயல்களை மறைத்தது பனிப்புகை.
*
மார்கழி – 10.
*
பூக்களின் மேல் சிறுவண்டுகள்
விரட்ட மனம் வரவில்லை தோழி
பறிக்கத் துணிவு கொடு கண்ணா!.
*

பார்வை...!! ( ஹைக்கூ )

மார்கழி – 7.
*
சாணிக்குக் குளிராமோ?
பூசணிப்பூ போர்த்தி விட்டாள்
மார்கழி கோலம்பேட்டப் பெண்.
*                                 
மார்கழி – 8.
*
பாம்பணையில் பள்ளிகொண்டு
பார்வையிட்டாயா பரந்தமா?

சென்னையின் சோக வெள்ளம்.
*

திங்கள், 21 டிசம்பர், 2015

வலம்புரிசங்கு...!! ( ஹைக்கூ )


*
ஆழ்கடலில் மூச்சடக்கி
ஆயுட்காலமெலாம் எவர்க்காக?
உயிர் வாழ்கிறது வலம்புரிசங்கு.
*
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க, நாளும்
சித்திக்குமாம் சிவனருள்.

*

சனி, 19 டிசம்பர், 2015

மார்கழி...!! ( ஹைக்கூ )


*
விடியல் பனிப் பொழிவு
நீராடும் குருவிகள்
வீதியில் திருப்பாவை ஓசை.
*
ஈர்க் குளிரில் பூக்கள்
நோன்பு பாவையர்கள் வலம்
கைகளில் கற்பூரத் தீபம்.
*
பனிக்காற்றின் இசைக் கேட்டு
குடம் நிறைக்கும் பசுக்கள்.
கழுத்து மணியசைக்கும்.
*
விஞ்ஞானம் பறித்துக் கொண்டது
அழகிய மங்கையர்கள்
தயிர்கடையும் மத்தோசை.
ந.க.துறைவன்.
*

புதன், 16 டிசம்பர், 2015

மார்கழி - உலக சர்வமத மாதம்...!!

ஹைபுன்
*
பருவகாலங்களில் மார்கழி பனிக்காலம் இயற்கை மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடை.எனலாம். ‘ மாதங்களில் மார்கழி நான் ‘ என்கிறான் பகவத்கீதையில் கண்ணன்.. மார்கழி மாதத்தை எல்லா ஆன்மீக இலக்கியங்களும்  மிகப் போற்றி விதந்தோதுகின்றன. ஆண்டாள் மார்கழியில் மாதவனை துயில் எழுப்புகிறாள். சோம்பித் துயிலும் பெண்தோழிகளை எழுப்பி, விழி்ப்புணர்வையூட்டித் துணைக்கு அழைக்கிறாள். ஏசுவின் பிறப்பு, இஸ்லாமின் மிலாடி நபி என விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மார்கழி மாதம் உலகெங்கும் உள்ள ஆன்மீகவாதிகளின் புனித மாதமாகவும் திகழ்கின்றன.என்பதை வரலாற்றில் என்றும் காணலாம்.
*
1.                              
அமைதி மௌனம் சக்தி தரும் ` 
ஆன்மீக உலகம் போற்றும்      
மாதம் மார்கழி. 
*
2.
ஆண்டாள் போற்றும்
ஆன்மீக மாதம். 
மார்கழி்   
ந.க.துறைவன்.

சனி, 12 டிசம்பர், 2015

குரல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
கேட்ட குரல் இல்லை
பழகிய குரல் இல்லை
அந்நியன் குரல்“
*
No voice is heard
Not Familiar Voice
Stranger voice
*

வியாழன், 10 டிசம்பர், 2015

அழகு...!! ( ஹைக்கூ )


*
குளத்திற்குள் எத்தனை நாளிருந்தாலும்
தவளை அறிவதில்லை
தாமரையின் அழகு.
நா.முத்துநிலவன் – ‘ முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே..! “ – நூல் – பக்கம் 65.
தகவல் ந.க.துறைவன்.

*

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

அதிர்ச்சி

புயல்மழையின் மிரட்டல்
புரியாமல் தவிக்கின்றனர்
மனஅதிர்ச்சியில் மக்கள்.
ந.க.துறைவன்.


வியாழன், 26 நவம்பர், 2015

நிஜம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
எது நிஜம் எது பொய்?
எவருக்கும் தெரியாது?
எல்லாமே நிஜம்..
*
What is true and what is false?
Who knows?
Everything is real ..

*

செவ்வாய், 24 நவம்பர், 2015

இசை - மழை...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English
The rainy season
மழைக் காலம்
*
அவ்வப்பொழுது பொழிந்து
மனம் மகிழ்கின்றன
இசை – மழை.
*
Occasional rain
Mind enjoy
Music - rain.

*

மழைக் காலம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;.
*
மழைக் காலம்
The rainy season
*
வெளியில் போகமுடியவில்லை
புயல் மழையில் சேதமாகி விட்டது
எறும்புகள் சேகரித்த தானியங்கள்.

*
Unable to go outside
The storm has been deteriorating in the rain
Grains collected by the ants.

*

சனி, 21 நவம்பர், 2015

குன்றுகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
அமைதியான ஓய்வு
மரங்களின் நிழலில்
சின்ன குன்றுகள்.
*
Peaceful Rest
In the shade of trees
Small dunes.
*

விமர்சனம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English
*
பத்தாண்டுகளுக்கு பிறகு
மழை குறித்த சுயமான
மக்கள் விமர்சனம்.
*
Decades later
Originality of Rain
People Review.

*

வெள்ளி, 20 நவம்பர், 2015

மழை...!! ( ஹைக்கூ 0

Haiku – Tamil / English.
*
காக்கை நடந்த கால்தடம்
அழித்து விட்டது
மழை.
*
Crow's feet
Erased
Rain.

*

வியாழன், 19 நவம்பர், 2015

விமர்சனம்

பத்தாண்டுகளுக்கு பிறகு
மழை குறித்து ஆதங்கமான
மக்கள் விமர்சனம்.


ஞாயிறு, 15 நவம்பர், 2015

ஆய்வு...!!

புயல் மழை சேதங்கள்
பார்வையிட்டன
ஆய்வுக் குழு பறவைகள்.
ந.க.துறைவன்.


வியாழன், 12 நவம்பர், 2015

புயல்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;
*
வாழ்க்கையைச் சூழ்ந்து
மையம் கொண்டிருக்கிறது
புயல் சின்னம்.
*
Life surrounded
Contains Center
Storm logo.
*

செவ்வாய், 10 நவம்பர், 2015

லட்சுமி...!!

மனம் பதறி துடித்தது
உடல்சிதறியதைப் பார்க்கையில்
லட்சுமி வெடி.


ஞாயிறு, 8 நவம்பர், 2015

வாழ்த்துக்கள்...!!

உங்களுக்கு நீங்களே தீபங்களாக இருங்கள்.
புத்தர்.
*
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நண்பர்களே.ழ்்ழ்
ந.க.துறைவன்

வியாழன், 5 நவம்பர், 2015

மோட்சம்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;.
*
தருமராசா கோயில்
வெளி கல்மண்டபத்தில்
வேலையற்றோர் சூதாட்டம்.
*
துரியோதனன் மாண்டான்
திரௌபதி கூந்தல் முடித்தாள்
தீமிதித்து பக்தர்கள் கொண்டாட்டம்.
*
விடியற்காலை மோட்சம் அடைந்தாள்
கர்ணமோட்சம் தெருக்கூத்து
இரவெல்லாம் பார்த்தக் கிழவி.

*

புதன், 4 நவம்பர், 2015

செயல்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;.
*
எல்லாம் அவன் செயல்
எல்லாம் அவள் செயல்
எல்லாமே செயலற்ற செயல்.
*
All is by almighty
She is everything
Everything is inactive.
*

செயல்...!! [ ஹைக்கூ]

Haiku – Tamil / English;.
*
எல்லாம் அவன் செயல்
எல்லாம் அவள் செயல்
எல்லாமே செயலற்ற செயல்.
*
All is by almighty
She is everything
Everything is inactive.
*

திங்கள், 2 நவம்பர், 2015

கவிதை ...!!

Haiku – Tamil / English.
*
அழகிய ஹைக்கூ கவிதை
எந்நேரமும் எழுதுகிறது
வண்ணத்துப்பூச்சி.
*
Haikku beautiful poetry
Anytime writes
Butterfly. 

*    

புதன், 28 அக்டோபர், 2015

வாழ்க்கை...!! [ சென்ரியு }

Haiku – Tamil / English;.
*
பிரிவில் முடிகிறது காதல்
மோகத்தில் முடிகிறது முதுமை
மரணத்தில் முடிகிறது வாழ்க்கை.
*
Love is in the category
Aging in courtship ends
Life ends in death.
*

நூல் விமர்சனம்ஃ


சோட்டா பீம்  - சென்ரியு நூல்.
*
சமீப காலமாக ஹைக்கூ, சென்ரியு என்ற வகைமைகளை இனம்பிரித்து தனித்தனியாக எழுதும் போக்கு தென்படுவது ஆரோக்கியம் அளிக்கின்றது. சென்ரியு கவிதைகள் முன்வைத்து இதுவரை 13 நூல்கள் வெளிவந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வகையில் “ சோட்டா பீம் ” – நீலநிலா செண்பகராசன் அவர்களின் நூல் பதிமூன்றாவது ஆகும். இதில் ‘ சென்ரியு கவிதைகள் ஒரு பார்வை ‘ சிறுகட்டுரை இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல, ஆய்வாளர். செ.ஜோதிலட்சுமியின் ஆய்வேட்டிலிருந்து சென்ரியு குறித்த சுருக்கமான பகுதி இடம்பெற்றுள்ளது சிறப்பான பணி.
சமூக அரசியல் பண்பாட்டு செயல்பாடுகளைக் கவிதையில் எள்ளி நகைக்கிறார். மக்களின் அவலநிலையினைச் சுட்டுகிறார்.  அத்துடன்,
குழந்தைகள் ரசித்தனர்
“ சோட்டா பீம் “
வரையப்பட்டஅமரர் ஊர்தி.
*
சோட்டா பீம் “
மதுவில் மிதக்கும் குழந்தைகள்
காவு வாங்கும் கார்டூன் கதாநாயகன் -  என்று தலைப்பிற்குரிய இரு சென்ரியு கவிதைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இன்னும் முழுமையாக சோட்டா பீம் –மில் குழந்தைகள் சார்ந்த சென்ரியு கவிதைகளைப் படைத்திருந்தால் சிறப்பானத் தொகுப்பாக அமைந்திருக்கும் என்பது எனது கருத்தாகும். சென்ரியுக்கே உரிய தன்மையில் 69 கவிதைகளைப் படைத்தளித்துள்ள நீலநிலா சண்பகராசன் .முயற்சி வரவேற்கத்தக்கதும் பாராட்டுக்குரியதுமாகும்  
விமர்சனம் : ந.க.துறைவன் வேலூர் – 532 009.
செல் ; 9442234822.

*

செவ்வாய், 27 அக்டோபர், 2015

மொழி...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
எழுத்து வடிவமற்றது
சர்வதேச மொழி
அழுகை.
*
Shapeless character
International Language
Cries.

*

சனி, 24 அக்டோபர், 2015

சிலைகள்

காந்தமாய் கவர்கின்றன
கல்தூணின் அழகான
காமரூபச் சிலைகள்.
ந.க.துறைவன்.


வியாழன், 22 அக்டோபர், 2015

ஏமாற்றம்...? [ சென்ரியு ]

*
உள்ளே யாரும் குளிக்கவில்லை
ஏமாந்து விட்டது
ஓலைதடுப்பில் உட்கார்ந்த காகம்.

*

வியாழன், 15 அக்டோபர், 2015

காணவில்லை...? [ ஹைக்கூ ]



*
ஊருக்கு வெளியே இருந்தது
காணாமல் போய்விட்டது
தாமரை குளம்.

*

செவ்வாய், 13 அக்டோபர், 2015

யோசனை...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;
*
எந்தப் பூவின் நறுமணம்
நுகர்ந்து பார்க்க விருப்பமோ?
வண்டுகளின் யோசனை.
*
Any flower's fragrance
Sniffing want to see?
The idea of beetles.

*

திங்கள், 12 அக்டோபர், 2015

சினம்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
சினம் சினம் சினம்
சினம் சினம் சினம்
ஆறுவது சினம்.
*
Angry angry angry
Angry angry angry
reduce your anger.
*

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

உயில்கள்....!! [ ஹைக்கூ }

Haiku – Tamil / English.
*
பிறக்கின்றன இறக்கின்றன
மீண்டும் எடுக்கின்றன
மறுபிறவி உயில்கள்.
*
Born die
Back-up
Wills reincarnation.
N.G.Thuraivan.

*

புதன், 7 அக்டோபர், 2015

எச்சரிக்கை...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;.
*
இன்னும் புரியவில்லை
இலையின் அசைவுகள்.
பறவைகளுக்கு எச்சரிக்கையோ?
*
Still do not understand
Leaf's movements.
Warning to birds?

*

செவ்வாய், 6 அக்டோபர், 2015

அதிர்ச்சி...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;.
*
நடுங்கியது உடல்
ஓடு பாதையில் பிணம்
அதிர்ச்சி தாங்காத மனம்
*
Body trembled
Corpse track
Mind the unbearable trauma

*

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வாடல்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
அழகாய் பூத்திருக்கும்
சந்தோஷ சிரிப்பிருக்கும்
எதற்கு வாடியது தாயின் முகம்?
*
The impressive Booth
The happy grin
Force was what the mother's face?
*

சனி, 3 அக்டோபர், 2015

சிந்தனை...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
எதற்காக புறப்பட்டதோ?
திசை அறிந்து பறக்கிறது
செயலாகும் சிந்தனை.
*
Came from and for what?
Knowing the direction of the Flies
The thought process.

*

வியாழன், 1 அக்டோபர், 2015

நாதம்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;
*
மௌனமாய் என்னுள்
கரைந்தது
இசையின் நாதம்.
*
Silence me
Dissolved
Tone of the music  
N.G.Thuraivan.

*

காந்திய சிந்தனை...!!


*
தமிழ்ச் சிறுவர்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள் ஆகையால், அவர்களுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் எழுத்துக்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாது. ஆகவே, அவர்களுக்கு நான் தமிழ் எழுத்துக்களையும் ஆரம்ப இலக்கண விதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இது மிகவும் எளிதானதே. தமிழில் பேசுவதில் என்னை எப்பொழுதும் தாங்கள் தோற்கடித்துவிட முடியும் என்பதை என் மாணவர்கள் அறிவார்கள். ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் என்னைப் பார்க்க வந்தபோது அம்மாணவர்கள்  என் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர். எனக்கிருந்த அறியாமையை என் மாணவர்களுக்குத் தெரியாமல் மறைக்க நான் என்றுமே முயன்றதில்லையாகையால், நான் சந்தோஷமாகவே சமாளித்து வந்தேன். உண்மையாகவே எல்லா விஷயங்களிலும் நான் எவ்விதம் இருக்கிறேன் என்பதை அவர்களுக்குக் காட்டி வந்தேன். ஆகையிளால், அம்மொழியில் எனக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்நதபோதிலும் அவர்களுடைய அன்பையும் மரியாதையையும் மாத்திரம் நான் என்றுமே இழந்ததில்லை. முஸ்லிம் சிறுவர்களுக்கு உருது சொல்லிக் கொடுப்பது இதைவிட எளிதாக இருந்தது அம்மொழியின் எழுத்துக்கள் அவர்களுக்குத் தெரியும். படிக்கும்படியும், கையெழுத்தை விருத்தி செய்து கொள்ளுமாறும் அவர்களை உற்சாகப்படுத்துவதே நான் செய்ய வேண்டியிருந்ததெல்லாம்.
இச்சிறுவர்களில் பெரும்பாலானவர்கள், எழுத்து வாசனையையே இதற்கு முன்னால் அறியாதவர்கள், பள்ளிக்கூடங்களுக்குச் சென்றும் அறியாதவர்கள். ஆனால், அவர்களுக்கு இருந்த சோம்பலைப் போக்கி, அவர்கள் படிக்கும்படி மேற்பார்வைப் பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்க வேண்டியது அதிகமில்லை என்பதை அனுபவத்தில் கண்டேன். இவ்வளவோடு நான் திருப்தியடைந்து விட்டதால், பல வயதையுடையவர்களையும்,  சமாளிப்பது சாத்தியமாயிற்று.
ஆதாரம் ; - மகாத்மா காந்தியின் சுய சரிதை – “ சத்திய சோதனை ”– பக்கம் 404-405.
தகவல் ; ந.க.துறைவன்

புதன், 30 செப்டம்பர், 2015

நினைவுகள்....!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
இப்பொழுதும் எத்தனையோ நிகழ்வுகள்?
கடந்த கால நினைவில் மனம்
மலையை கடக்கிறது பறவை.
*
Many events now?
Remember the last time in the mind
Bird mountain passes. 

N.G.Thuraivan.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

துளிகள்....!! [ ஹைக்கூ ]

*
கருநிற மேகங்கள்
துளி துளியாக  பெய்தது
விந்து மழைத்துளிகள்.
*
Dark clouds
Season, drop by drop
Raindrops sperm.

*

கொன்றை...!! [ ஹைககூ ]


*
நடைபாதையில்
மஞ்சள் கம்பளம்
கொன்றைப் பூக்கள்.
*
நள்ளிரவு நேரம்
வேப்பம்பூ வாசத்தைக்
கடத்தும் காற்று்.
*
துக்க வீட்டில்
மலர்ந்த முகங்கள்
ஒடிவிளையாடும் குழந்தைகள்.
நூல் : விசும்பில் சிறுபுள் – கவிஞர். பா. சேதுமாதன். திருச்சி.

*