வெள்ளி, 29 ஏப்ரல், 2016

மனஅமைதி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
உள்ளே வைத்துக் கொண்டு
வெளியில் அலைகிறார்கள்
மன அமைதி.
*
In keeping with
Frolic outdoors
Peace of mind.
*

புதன், 27 ஏப்ரல், 2016

தவளை...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English;
*
குளத்து நீரில் விளையாட்டு
தாமரை இலையின் கீழ்
கூட்டமாய் தவளைகள்.
*
Water tank in the game
Under the lotus leaf
Frogs mass.
*

புதன், 20 ஏப்ரல், 2016

பௌர்ணமி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
காலங் கடந்த நிலை
நிகழ்கால நினைவலைகள்
புத்தனின் பௌர்ணமி அழகு.  
*
Level of hindsight
Present Memories
Buddha beauty of the full moon.

*

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

நிழல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil /English;
*
நிழலுக்கு ஒதுங்கி நின்றான்
நிழல் கொடுத்தது
மரத்தின் நிழல்.
*
He stood aside for shadow
Shadow gave
The shadow of the tree.

*

திங்கள், 18 ஏப்ரல், 2016

கவிதை என்றால் என்ன?


*
புகழ்பெற்ற சீனக் கவிஞராகிய யங் வாங் லீ என்பவரிடம் யாரோ ஒருவர் கீழ்க்கண்டவாறு கேட்டார்.
“ இப்போது கவிதை என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு அந்தக் கவிஞர், “ அது வெறுமனே வார்த்தைகள் சம்பத்தப்பட்ட ஒரு விஷயம் என்று நீங்கள் கூறினால், ஒரு நல்ல கவிஞன் வார்த்தைகளை விட்டெழித்து விடுகிறான் என்று நான் கூறுவேன். கவிதை என்பது வெறுமனே அர்த்தம் சார்ந்த விஷயம் என்று நீங்கள் கூறினால். ஒரு நல்ல கவிஞன் அர்த்தங்களை விட்டொழித்து விட்டவன் என்று நான் கூறுவேன் ஆனால் வார்த்தைகளும் இல்லாமல், அர்த்தமும் இல்லாமல் கவிதை என்பது எங்கு உள்ளது. என்று நீங்கள் கேட்டால், அதற்கு வார்த்கைளை விட்டொழித்து விடுங்கள்.  மேலும் அர்த்தத்தை விட்டொழித்து விடுங்கள்  அப்போது கூட கவிதை இருக்கிறது. உண்மையில் அதன் பிறகு மட்டுமே கவிதை இருக்கிறது என்று நான் கூறுவேன்.  ” என்றார்.
வார்த்தைகள் ஒருபோதும் இல்லாத போது, அர்த்தங்கள் அங்கு ஒரு போதும் இல்லாத போது, அதன்பின்னர் திடீரென ஒரு கவிஞன் வெளிப்படுகிறான். வெடித்து வெளிவருகிறான். கவிதை என்பது உங்களது உயிர் உணர்வின் ஒரு மலர்ச்சியாக உள்ளது. மேலும் மதம் என்பது ஒரு தத்துவத்தை போன்றது என்பதை விடவும் ஒரு கவிதை போன்றதாகவே இருக்கிறது.
ஆதாரம் ;  ஓஷோவின் “ திடீர் இடியோசை ” என்று நூல் – பக்கம் – 18.
தகவல் : ந.க. துறைவன்.

*       

பருவமழை...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
எங்கும் ஒரே மாதிரியாய்
பொழிவதில்லை
பருவ மழை.
*
The same model everywhere
Showing
Monsoon.

*

புதன், 13 ஏப்ரல், 2016

வாசிப்பு...!! ( சென்ரியு )

Senryu – Tamil / English.
*
ஆழ்ந்த  புத்தக  வாசிப்பு
வரிகளின்  மீது வசீகரிப்பு
இடையிடையே  புன்சிரிப்பு.
*
Book reading deeper
Seduction on taxes
Interspersed with a smile.
*

வாழ்த்துக்கள்.

சித்திரை முதல் நாள் காலை வணக்கம் நண்பர்களே

ஸ்ரீ துர்முகி – தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன். ந.க.துறைவன்.

*

திங்கள், 11 ஏப்ரல், 2016

பக்குவம்...!! ( சென்ரியு )



கோவணமாய் காய்ந்து இருக்கிறது
நீர் வறண்டு போய்
பாலாறு.
*
சமைக்கும் சாமர்த்தியம்
கைப் பக்குவத்தில் தெரிந்தது
அம்மாவின் மனப்பக்குவம்.

*

சனி, 9 ஏப்ரல், 2016

மாம்பழம்...!! ( சென்ரியு )

Senryu – Tamil / English.

மாம்பழம் கையில் வைத்து
பால் குடிக்கிறது
அழுகிற குழந்தை.
Put the mango in hand
Milk drinks
Crying baby.

N.G.Thuraivan.

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

செய்திகள்...!! ( ஹைபுன் )


N E W S .-  இவ்வுலகம் ஊடகங்களால் சூழ்ந்திருக்கிறது. எத்திசை நோக்கினும் வான்வெளியில் காற்றின் ,ஈரப்பதத்தோடு செய்திகள் நிறைந்து ததும்புகிறது. நொடிக்கு நொடி ஒலி / ஒளிப் பரப்பாகும் செய்திகள் மக்களிடம் சென்று சேர்கின்றன.  அச்செய்திகள் எப்பொழுதும் மகிழ்ச்சியும் துக்கமும் அதிர்ச்சியும் தருகின்றன. ஆனால் அதற்காக மக்கள் யாரும் மனச்சோர்வு அடைவதில்லை. .அதனை  இயல்பாகவே எடுத்துக் கொண்டு தங்களின் வேலைகளைப் பார்க்கிறார்கள். சில மணிநேரத்திற்குள் மறந்தும் விடுகிறார்கள். அடுத்த நொடியே புதிய செய்திக்கு மனம் தாவிவிடுகிறது.
*
உலகமே உள்ளடங்கியுள்ளது
சுருக்கமான ஆங்கில எழுத்தின்
திசைகளுக்குள் செய்திகள்.

*

புதன், 6 ஏப்ரல், 2016

அத்திமரம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
கிளிகளும்  பார்த்ததில்லை
நானும்  பார்த்ததில்லை
அத்தி மரம் பூப்பதை இதுவரை.
*
Parrots seen
I've never seen
Fig tree flowering so far.
*


செவ்வாய், 5 ஏப்ரல், 2016

அணில்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
அமைதியாயிருக்கிறது
அணில் பசியாறும் வரை
பப்பாளி பழம்.
*
Is silent
Until you are hungry squirrel
Papaya fruit.

*

திங்கள், 4 ஏப்ரல், 2016

நினைவு...!1 ( சென்ரியு )

Senryu – Tamil / English.
*
இறப்புக் காலம் வரை
நினைவில் நிற்கின்றது             
பிறந்த ஊரின் நினைவு.
ந.க.துறைவன்.  
Until death
Remember stands
Recall of place.

*