திங்கள், 18 ஏப்ரல், 2016

கவிதை என்றால் என்ன?


*
புகழ்பெற்ற சீனக் கவிஞராகிய யங் வாங் லீ என்பவரிடம் யாரோ ஒருவர் கீழ்க்கண்டவாறு கேட்டார்.
“ இப்போது கவிதை என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு அந்தக் கவிஞர், “ அது வெறுமனே வார்த்தைகள் சம்பத்தப்பட்ட ஒரு விஷயம் என்று நீங்கள் கூறினால், ஒரு நல்ல கவிஞன் வார்த்தைகளை விட்டெழித்து விடுகிறான் என்று நான் கூறுவேன். கவிதை என்பது வெறுமனே அர்த்தம் சார்ந்த விஷயம் என்று நீங்கள் கூறினால். ஒரு நல்ல கவிஞன் அர்த்தங்களை விட்டொழித்து விட்டவன் என்று நான் கூறுவேன் ஆனால் வார்த்தைகளும் இல்லாமல், அர்த்தமும் இல்லாமல் கவிதை என்பது எங்கு உள்ளது. என்று நீங்கள் கேட்டால், அதற்கு வார்த்கைளை விட்டொழித்து விடுங்கள்.  மேலும் அர்த்தத்தை விட்டொழித்து விடுங்கள்  அப்போது கூட கவிதை இருக்கிறது. உண்மையில் அதன் பிறகு மட்டுமே கவிதை இருக்கிறது என்று நான் கூறுவேன்.  ” என்றார்.
வார்த்தைகள் ஒருபோதும் இல்லாத போது, அர்த்தங்கள் அங்கு ஒரு போதும் இல்லாத போது, அதன்பின்னர் திடீரென ஒரு கவிஞன் வெளிப்படுகிறான். வெடித்து வெளிவருகிறான். கவிதை என்பது உங்களது உயிர் உணர்வின் ஒரு மலர்ச்சியாக உள்ளது. மேலும் மதம் என்பது ஒரு தத்துவத்தை போன்றது என்பதை விடவும் ஒரு கவிதை போன்றதாகவே இருக்கிறது.
ஆதாரம் ;  ஓஷோவின் “ திடீர் இடியோசை ” என்று நூல் – பக்கம் – 18.
தகவல் : ந.க. துறைவன்.

*       

1 கருத்து: