வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

பகிர்வு...!! [ சென்ரியு ]

*
இலக்கியப் பேச்சு செவிக்குணவு
மனத் தெம்புிற்கு உணவு
நண்பருடன் தேனீர் பகிர்வு
*


வியாழன், 26 பிப்ரவரி, 2015

பிரபஞ்சம்...!! [ ஹைக்கூ ]


*
மறைப்பதற்கு ஏதுமில்லை
நிர்வாணமாய் இருக்கிறது
இயங்கும் பிரபஞ்சம்.
*

புதன், 25 பிப்ரவரி, 2015

துயரம்...!! [ சென்ரியு ]


*
பறவைகள் அறிகின்றன
வெட்டப்படும்
மரங்களின் துயரம்.
*
எங்கே போயின?
சத்தமிடும் தவளைகள்
நீரில்லாதக் குளம்.
*
பொழுதடைந்த நேரம்
கூடு திரும்பின பறவைகள்
மழையில் நனைந்து…!
*

திங்கள், 23 பிப்ரவரி, 2015

காதல்...!! [ சென்ரியு ]


*
உணர்வுகளை வெல்கிறது
மொழிகளைக் கடக்கிறது
உன்னதமான காதல்.
*
உயிர்மையத்தின் உண்மைத் தெளிய
இயற்கைக் கற்றுக் கொடுத்தப்
பேரின்ப விளையாட்டு காதல்.
*
இரத்தக்கறைப் படிந்திருக்கிறது
கல்லறையில் உறங்குகின்றது
வரலாறு படைத்தக் காதல்
*

சனி, 21 பிப்ரவரி, 2015

விருந்து...!! [ ஹைக்கூ ]


*
சுற்றுச் சூழல் மாசு
தோல்கழிவு நீரில் மூழ்கி
கூலித் தொழிலாளர்கள் பலி.
*
வாழையிலையில்
விருந்து சாப்பிட்டன
தெரு நாய்கள்.

*

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

வாழ்த்துக்கள்....!!

உலக மக்கள் அனைவருக்கும்
“ உலகத் தாய்மொழி நாள் ”
நல்வாழ்த்துக்கள்.
*                                  

வியாழன், 19 பிப்ரவரி, 2015

பூனை...!! [ சென்ரியு ]

*
காலடிச் சத்தம் கேட்டு
குறுக்கே பதறியோடியது
இருட்டில் இருந்தப் பூனை.
*

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

மலைகள்...!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU.
*
இயற்கைப் பெருஞ் செல்வங்கள்
வெட்டிக் கொலைச் செய்கிறார்கள்
ஆதரவற்ற மலைகள்.
*
சிரித்துப் பார்த்தே யில்லை
கூத்துக் கலைஞன்
கட்டியங்காரன் மனைவி.
*

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

காதலர் தினம்....!! [ ஹைக்கூ ]


*
பூக்களும் வண்டுகளும்
பூங்காவில் கொண்டாடின
காதலர் தினம்.
*
சந்தோஷமான நாள்
கிளிகளின் மன உற்சாகம்
வாழ்த்தின மரங்கள்.
*

வியாழன், 12 பிப்ரவரி, 2015

புரிதல்....!! [ ஹைபுன். ]

*
N.G. THURAIVAN'S HAIBUN,
*
இடுப்பில் இருக்கும் குழந்தை,  அம்மாவின் மாராப்புத் துணியை இழுத்து இழுத்து எதையோ சொல்ல விரும்புகிறது. அதைக் கவனிக்காமல், அப்படியென்ன தான் அடுத்த வீட்டம்மாளிடம் அவசரமானப் பேச்சோ? தெரியவில்லை. குழந்தையின் நச்சரிப்புத் தாங்காமல் “ என்னடா, சொல்லித் தொலையேன்? என்றாள் தாய். குழந்தைக் சுட்டிக் காட்டியப் பக்கம் பார்த்தாள்.
வீட்டுவாசற்படியில் எலியைப் பிடித்துக் குதறிக் கொண்டிருந்ததுப் பூனை. பதட்டமாய் பதறினாள் தாய்.
புரிய வைத்தது குழந்தை
பக்கத்து வீட்டார் உறவு                                               
எலியும் பூனையும் சண்டை.
*

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

குறும்புகள்...!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU.
*
பூமியில் மிஞ்சப் போவதென்ன?
ஆறு, குளம், ஏரி, மலைகள்
களவு போனால்….!!
*
பக்கத்து இருக்கைக்காரர் பேச்சு
மற்றவர்களைச் சிரிக்க வைத்தது
அவர் சொன்ன நகைச் சுவை.

*

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

பதற்றம்...!! [ iஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU.
*
பார்வை எதிலோ லயித்திருந்தது
எதையோ நினைக்கிறது மனம்
சுடர்விடும் சிந்தனையில் சூரியன்.
*
எதிர்ப் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்
ஏமாந்தவர்களுக்கு பதற்றம்
சலசலத்து ஒடுகிறது ஆற்றுநீர்.
*
இன்னும் எவரொருவராலும்
முழுமையாக எழுதப்படவில்லை
எந்தக் கேள்விக்குமான பதில்.

*

வியாழன், 5 பிப்ரவரி, 2015

மனஅலைகள்...!! [ ஹைபுன் ]

*
N.G. THURAIVAN;S HAIBUN.
*
அந்த மனிதனின் வாழ்வின் எந்தவொரு கூறுகளையும், நடைமுறைகளையும்,   அணுமுறைகளையும், அடையாளங்களையும், அறநெறிகளையும் அனுபவப் பூர்வமாகப் பழகிக் பார்க்காதவன், கேள்விப்படாதவன், வேறு எவரோ சொல்கின்ற வெற்று வார்த்தைகளின் பொய்மைகளைக் கேட்டு, அந்த மனிதனின் குணாதியங்களைப் பற்றி தவறாக பேசுவதும், அணுகுவதும், அவமானப்படுத்துவதும் எத்தனை அசிங்கமான மனஉணர்வின் வெளிப்பாடு.   
குளத்தில் கல் எரிந்தான்
அலைகள் விரிந்து அலைந்தது
நிமிர்ந்து நின்றன தாமரைப் பூக்கள்.

*

புதன், 4 பிப்ரவரி, 2015

விருட்சங்கள்...!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU.
*
தொலைவில் வருகின்றன
கூட்டமாய் ஒட்டகச்சிவிங்கிகள்
ஈச்சமரங்களுக்கு அச்சம்.
*
வெளியே முள் உள்ளே பழம்
ஆசையோடு வாங்குகிறார்கள்
அன்னாசிப் பழம்
*
வயோதிகம் பற்றி அறியுமோ?
ஆயிரங்காலமாய் வளர்ந்து நிற்கும்
கற்பக விருட்சங்கள்.

*

வண்ணத்துப் பூச்சிகள்...!! [ ஹைக்கூ ]


*
பூக்களை முத்தமிட்டு
பறக்கின்றன வெளியில்
வண்ணத்துப் பூச்சிகள்.
*
அகங்காரம் அடங்கியதோ?
சிறுவர் கையில் சிக்கியது
அழகிய வண்ணத்துப் பூச்சிகள்.
*
மலர்ந்தச் செம்பருத்திப் பூக்கள்
சிட்டுக் குருவி என்ன பேசுகிறது?

சிரிக்கிறது வண்ணத்துப் பூச்சிகள். 

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

துங்காமல் தூங்கி...‘!! [ ஹைக்கூ }

N.G. THURAIVAN'S HAIKU.
*
கிரிவலப் பாதை நெடுக
பக்தர்கள் பேச்சின் இரைச்சல்
அச்சத்தில் பறவைகள்.
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.

*