வியாழன், 31 டிசம்பர், 2020

வாழ்த்துக்கள்

      2021

அனைவருக்கும்

எனது மனமார்ந்த

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

ந க துறைவன்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

மரணம் ( ஹைக்கூ )

உலகை அலங்கரித்து மகிழ்ச்சி
நாளும் மரண அச்சமற்று
பூக்கள் பரிபூரண வாழ்க்கை.

The perfect life adorning
The world and the day of joy
The fearless flowers of death.

Thuraivan NG

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

திருப்பம் ( ஹைக்கூ )

பொன்னிற அழகு
உதிர்ந்த சருகு இலைகள்
என் வாழ்வின் திருப்பம்.

Blonde beauty
Fallen coniferous leaves
The turning point in my life.

Thuraivan NG

புதன், 19 ஆகஸ்ட், 2020

மீன்கள் ( ஹைக்கூ )

குளத்தில் கால் வைத்தேன்
மீன்கள் தின்றன
எனது புண் சதைகள்.

I put my legs in the pond
The fishes ate
My sore flesh..

Thuraivan NG

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

ஓவியம் ( ஹைக்கூ )

அப்பா மரணம்
இரவு நிலவொளி
அந்த ஓவியம் என்னருகில்.

Dad died
Night moonlight
That painting is near me.

Thuraivan NG

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

வனம் ( ஹைக்கூ)

மூங்கில் வனம்
காற்று நிரம்பிய வெளி
எங்கும் இசை பிரவாகம்.

ந க துறைவன்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

மரம் ( கவிதை )

எப்பொழுதும் என் வீட்டுப் பின்னழகு
வாழைமரம் குலைத்தள்ளி பாரம்
கீழே இரு குருத்துவப் பிள்ளைகள் நோன்சானாய்
பெருங்காற்று மழையில் கோடாய் கிழிந்து
வேரோடு தலைசாய்ந்து சேதாரம்.

ந க துறைவன்.

சனி, 8 ஆகஸ்ட், 2020

விழுதுகள் ( ஹைக்கூ )

அது என் தொப்புள் கொடி
ஆதிகாலத் தொடர்ச்சி
ஆலமரம் விழுதுகள்.

It's my naval flag
Primitive continuum
Tree tentacles.

Thuraivan NG

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

குடில் ( கவிதை )

தொலைதூரத்தில் தெரிந்தது மலை
பார்க்கும்போது என் மிக அருகில்
நடக்க நடக்க வெகுதூரம் யாருமற்ற வெளி
விளைச்சலற்ற காட்டுச் செடிகள் புதர்
ஒற்றையடி பாதையில் துறவியின் குடில்.

ந க துறைவன்.

புதன், 5 ஆகஸ்ட், 2020

தவளைகள் ( ஹைக்கூ )

நீரில்லாத குட்டை
தவளைகள் உரையாடல்
மழை குறித்து விமர்சனம்.

Waterless puddle
Frogs conversation
Review of the rain.

Thuraivan NG

வியாழன், 30 ஜூலை, 2020

கைத்தட்டல் ( சென்ரியு )

கைத்தட்டல் பாட்டு சிரிப்பு திரும்பி பார்த்தனர் பலரும்
டீக்கடை வாசலில் திருநங்கைகள்.
#
கைத்தட்டி காசு கேட்டாள்
கன்னத்தில் கிள்ளி திருநங்கை வெட்கத்தில் குறுந்தாடி பயணி.

ந க துறைவன்.

வியாழன், 23 ஜூலை, 2020

ரூபம் ( ஹைக்கூ )

எழுத்து ரூபம் 
சொற்கள் அரூபம்
பேச்சினிடையே மௌனம்.

ந க துறைவன்.

வியாழன், 2 ஜூலை, 2020

சாத்தான் குளம் ( சென்ரியு )

தந்தை மகன் ரத்தம்
நிரம்பி வழிகிறது
சாத்தான் குளம்.

ந க துறைவன்.


வெள்ளி, 26 ஜூன், 2020

வழித்துணை

வழித்துணை


1.
கொடுத்தவர் அப்பா
வாங்கியவள் அம்மா
பரிசாக வந்தவன் நான்.
2.
பால் முற்றிய சோளக்கதிர்கள்
காவல் பொம்மை ஏமாற்றி
இரைதேடும் குருவிகள்.
3.
காவியுடை கழுத்தில் ருத்திராட்சம் கையில் பிச்சைப்பாத்திரம்
வழித்துணைக்கு சன்யாசினி.
4.
எனக்கு இறைவனைத் தெரியாது
இறைவனுக்கு என்னைத் தெரியாது
ஆன்மாவே என் அப்பா.
5.
எழுதாதப் படைப்பு கலைமனம்
குறைந்த பேச்சு தெளிந்த ஞானம்
புத்தனின் மௌனமே கவிதை.
6.
நசுக்கி அழிப்பதற்குள்
தப்பியோடி விட்டது இன்னும்
எறும்பு கடித்த இடத்தில் வலி.
7.
உறவு நெருக்கம்
உறக்கம் கெடுத்தது
பூவும் அல்வாவும்.
8.
கீழே தாழ்ந்து நிற்கிறேன்
ஆணவத்தோடு மௌனமாய்
அழகு சிதைந்த மலைக்கோட்டை.
9.
நீண்ட நாள்களாக கதவு சாத்தபட்டது
பக்தர்களைக் காணாது தவிப்பு
ஓய்வெடுக்கும் மூலவர்.
10.
பேசாத கற்சிலை அருகில்
காதல்மொழி பேசும் காதலர்கள்
பாதுகாக்கும் கல்தூண் யாளிகள்.
11.
அரை இருட்டில் கோயில் மண்டபம்
காதலர்கள் சந்திப்பு மறைவிடம் மௌனமாய் பார்க்கும் சிலைகள்.
12.
இணைந்து நடந்து வருகிறேன் உன் கூந்தல் சூடிய
மல்லிகைப்பூ வாசம் நுகர்ந்து.

ந க துறைவன்.


வெள்ளி, 29 மே, 2020

சும்மா இரு

சும்மாயிரு என்று சொன்னார்
சும்மா இருந்தான் சில நொடிகள்
மனசுக்குள் சிரித்தது மரம்.

ந க துறைவன்.


செவ்வாய், 19 மே, 2020

அனுபவம் ( ஹைக்கூ )

ஊரடங்கு உத்தரவு அமுலில்
வீடடங்கி உள்குமுறும் குடும்பங்கள்
புதிய சிறைவாசம் அனுபவம்

ந க துறைவன்.


புதன், 13 மே, 2020

உரையாடல் ( ஹைக்கூ )

செழிப்பான இயற்கை அழகு
மௌன மொழி உரையாடல்
தியான நிலை புத்தன்.

ந க துறைவன்.


திங்கள், 11 மே, 2020

பூச்செடிகள் ( ஹைக்கூ )

தூசு தும்பு நிறைந்து உடல்
நீரின்றி தவிக்கும் வேர்கள்
பாதையோரப் பூச்செடிகள் சோகம்.


வியாழன், 7 மே, 2020

மாம்பழம் ( ஹைக்கூ )

அப்பழுக்கற்ற மனம்
உள்ளே நெளியும் புழுக்கள்
சுவையான மாம்பழம்.

ந க துறைவன்.

சனி, 2 மே, 2020

நெருக்கம் ( ஹைக்கூ )

நெருக்கம் தவிர்த்து மௌனமாய்
இடைவெளி விட்டு அமர்ந்தன 
மரத்தில் பறவைகள்.

ந க துறைவன்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

சிரிப்பு ( ஹைக்கூ )

குழந்தைகள் சிரிப்பு ஒலி
வீடே அதிர்ந்ததுக் கேட்டு
பாட்டி சொன்ன குசும்பு கதை.

ந க துறைவன்

புதன், 22 ஏப்ரல், 2020

மலர்கள் ( ஹைக்கூ )

தனித்திருக்கும் பூக்கள்
இடைவெளி விட்டு அமைதியாய்
சிட்டுக்குருவிகள் காணோம்.

ந க துறைவன்.

செவ்வாய், 31 மார்ச், 2020

அணு ( ஹைக்கூ )

காற்றில் மிதக்கும் துகள்கள்
பௌதிக உடலில் இணைந்து
உறங்கும் உயிர் அணு.

The particles floating
In the air coexist
In the physical body.

Thuraivan NG

திங்கள், 30 மார்ச், 2020

பயம் ( கவிதை )

பயத்தில் உறக்கம் இல்லை
நல்ல பாம்பு மிரட்டல்
கனவு தொல்லை விழிப்பு.

No sleep in fear
Good snake intimidation
Dreams troublesome awakening.

Thurai van NG

வியாழன், 26 மார்ச், 2020

தரிசனம் ( ஹைக்கூ)

பூக்கள் தரிசனம்
அன்னை நினைவுநாள்
வாழ்க்கையோடு சிலநிமிடங்கள்.

Flowers darshan
Enjoy with
Mother's day.

Thuraivan NG

செவ்வாய், 17 மார்ச், 2020

பயணம் ( ஹைக்கூ )

மேகங்கள் பயணம்
ஏதோவொன்றை தேடி அலையும்
ஒற்றை பறவை.

In the cloud
Looking for something
A single bird wandering.

Thuraivan NG

சனி, 15 பிப்ரவரி, 2020

மழை ( ஹைக்கூ )

திரண்ட கருமேகங்கள்

பலத்த மழை சத்தம்

உள்ளறையில் முடங்கிய பூனை.

ந க துறைவன்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

ஈரம் ( ஹைக்கூ )

மரணம் வரை
நினைவில் வரும்
உதட்டின் முத்தம் ஈரம்

ந க துறைவன்.

திங்கள், 10 பிப்ரவரி, 2020

எரிமணம் ( ஹைக்கூ)

நேற்றொரு சடலம்
இன்றொரு புதிய சடலம்
சுடலையில் எரிமணம்.
ந க துறைவன்.

சனி, 8 பிப்ரவரி, 2020

சிரிப்பொலி ( ஹைக்கூ )

கோயில் மதில்சுவர் அருகில்
பயந்து நடக்கும் சிறுமி
அரூப சிரிப்பொலி கேட்டு...

ந க துறைவன்.

புதன், 29 ஜனவரி, 2020

பயணம் ( ஹைக்கூ )

முன்னே பறையோசை

மரண ஊர்தி பயணம்

பின்னால் இறைந்த பூக்கள்.

ந க துறைவன்.

திங்கள், 27 ஜனவரி, 2020

மழை ( ஹைக்கூ கவிதைகள் )

1.
கொட்டிய மழையில்
நனைந்து வந்தார் பால்காரர்
பாலில் நீர் இறங்கவில்லை.
2.
இலைகள் மட்டும் தெரிகின்றன
ஈக்கள் சில பறந்து அலைகிறது
கிளையில் தொங்கும் தேன்கூடு.
3.
எங்கோ அலைகின்றன
கட்டுப்பாடு இல்லாத மனம்
மௌனமாய் மலைமேல் கழுகு.

ந க துறைவன்.

வியாழன், 9 ஜனவரி, 2020

பயணம்

குருவே
இந்த எறும்புகள்
எங்கே பயணம் தொடங்கி
எங்கே போகின்றன?
 உன் கண்கள் பார்க்கும்
தூரம் வரைதான்
அதன் பயணம். 

ந க துறைவன்.

திங்கள், 6 ஜனவரி, 2020

இரவு

1.
தனிமை தனியாக தனிமை
பொட்டு தூக்கமில்லை
துணையில்லாத இரவு.
2.
கனவுப் பேச்சின் சுவாரஸ்யம்
செல்போன் மறந்துவிட்டாள்
காதலனோடு நீண்டநேரம் சந்திப்பு.

ந க துறைவன்.