ஞாயிறு, 8 ஜூன், 2014

வாழ்வை அனுபவி...!! [ ஹைக்கூ ].

*
Na.Ga. Thuraivan's Hiku.
*
இயற்கையின் பரிந்துணர்வை
என்றுமே சலிப்பதில்லை
வாழ்வை அனுபவிக்கும் மரங்கள்.
*
யாரும் கவனிப்பதில்லை என்று
எப்பொழுதும் வருந்துவதில்லை
தும்பைப் பூக்கள்.
*
கிளிகளும் பார்த்ததில்லை
நானும் பார்த்ததில்லை
அத்தி மரம் பூப்பதை….
*
பெண்கள் அனைவரும்
அரவணைக்கிறார்கள்
கள்ளிச் செடிகளை….
*
அமைதியாயிருக்கிறது
அணில் பசியாறும் வரை
பப்பாளி பழம்.

*

சனி, 7 ஜூன், 2014

குபேரன் பொம்மை...!! [ ஹைக்கூ ].

*
Na.Ga. Thuraivan's Haiku.
*
உடலைச் சிலிர்த்துத்
துவட்டிக் கொள்கின்றன
மழையில் நனைந்தப் பறவைகள்.
*
குழந்தைக்குப் பால்
கொண்டு வரச் சொல்லி
கொக்கை அழைக்கிறாள் தாய்.
*
முகத்தைச் சுளித்து
வாயிலிருந்ததைத் துப்பினான்
புளிப்புத் திராட்சை.
*
பணம் சேரும் என்ற நப்பாசை
குபேரன் பொம்மை வாங்கி வைத்தான்
உடைத்துவிட்டுச் சிரித்தது குழந்தை.
* .



வெள்ளி, 6 ஜூன், 2014

வளம் நிறைந்த கடல்...!! [ சென்ரியு ].

*
Na.Ga. Thuraivan's Senryu.
*
இயற்கையின் கொடை
மீனவர்க்கு வாழ்வளிக்கும்
வளம் நிறைந்தக் கடல்.
*
இரக்கமில்லா இயற்கையே
ஏழைகளை ஏன் படைத்தாய்?
ஏழ்மை ஒழிக, ஏழைகள் வாழ்க.
*
பூவுலகின் சிறுவர்கள்
சிறகு விரித்துப் பறக்கும்
கள்ளமில்லாப் பறவைகள்.
*
கவிiதைகள், பாடல்கள் அழிவதில்லை
தினந்தினம் காற்றினில் மிதந்து வரும்
இசையில் வாழ்கிறாய் முத்தைய்யா.

வளம் நிறைந்த கடல்...!! [ சென்ரியு ]

*
Na.Ga. Thuraivan's Senryu.
*
இயற்கையின் கொடை
மீனவர்க்கு வாழ்வளிக்கும்
வளம் நிறைந்தக் கடல்.
*
இரக்கமில்லா இயற்கையே
ஏழைகளை ஏன் படைத்தாய்?
ஏழ்மை ஒழிக, ஏழைகள் வாழ்க.
*
பூவுலகின் சிறுவர்கள்
சிறகு விரித்துப் பறக்கும்
கள்ளமில்லாப் பறவைகள்.
*
கவிiதைகள், பாடல்கள் அழிவதில்லை
தினந்தினம் காற்றினில் மிதந்து வரும்
இசையில் வாழ்கிறாய் முத்தைய்யா.

இலைகளை அசைத்து...!! [ ஹைக்கூ ].


Na. Ga. Thuraivan's Haiku.

*

எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்
பருவமழை தொடங்கி வி்ட்டதா?
மேகமூட்டமாயிருக்கிறது வானம்.
*
கருத்து வருகிறது மேகம்
குளிர்க் காற்றில்
பறந்து திரிகின்றன ஈசல்கள
*
பருவமழையை
மரங்கள் வரவேற்கின்றன
இலைகளை அசைத்து…
*
உயர்ந்தும் தாழ்ந்தும் மிக
வேகமாய வருகின்றன
ஆர்பாட்ட அலைகள்.
*
சேமித்துக் கொள்கிறது
மழை நீரை
வளமான பூமி.
*


வியாழன், 5 ஜூன், 2014

காற்றும் அல்ல, கொடியும் அல்ல. *


ஜென் கதை….!!
*
ஒரு கொடியைப்பற்றி, இரண்டு சந்நியாசிகள் வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவன் “ இந்த கொடி அசைகிறது ”.
அடுத்தவன், “ இல்லை காற்றுதான் நகருகிறது. ”
ஆறாவது ஜென் மடாலயத்துத் தலைவர், அந்த வழியே போக நேர்ந்தது. அவர்களது வாக்கு வாதத்தைக் கேட்ட அவர், காற்றும் அல்ல, கொடியும் அல்ல, மனம்தான் நகருகிறது ”. என்றார்.
*
-    ஆதாரம் :- “ 100 ஜென் கதைகள் ”  - நூலிலிருந்து.
-        

புதன், 4 ஜூன், 2014

நிகழும் தருணம் எதுவோ? [ சென்ரியு ]

*
Na.Ga. Thuraivan's Senryu. 
*
எப்பொழுது நிகழ வேண்டுமோ?
அப்பொழுது தான் நிகழுமா!
நினைத்தக் காரியங்கள் எதுவும்…
*
அளவுக்கு மீறி நம்பிக்கை வைப்பது
ஆபத்தாக முடியு மென்பது உண்மையா?
பிரிந்த நண்பன் அறிவான் வேதனை.
*
ஏதோவொரு தோல்வியால்
தற்கொலைக்கு தேடி வந்தவனை
தடுக்க இயலவில்லை கடலால்…

*

திங்கள், 2 ஜூன், 2014

பூக்காரியின் கிண்டல்..!! [ சென்ரியு ].

*
Na.Ga.Thuraivan's Senryu.
*
அழுகின்ற குழந்தையை
அடித்தால் அழுகை நிறுத்துமா?
அடிப்பது தாயின் வன்முறை.
*
தாழ்ந்துக் கிடப்பது தெரியாமல்
கண்கள் மூடிப் பிடித்திருக்கிறாள்
சமநீதி தராசு.
*
மல்லிகைப் பூவைக் கேட்டார்
முதியவரைத் தினுசாய் பார்த்து
கிண்டலடித்தாள் பூக்காரி.

*