புதன், 31 ஆகஸ்ட், 2016

உணர்வுகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
சொல்லத் தெரியாத உணர்வுகள்
உள்ளே பதுங்கி இருக்கிறது
பாய்ந்தோடுகிறது முயல்குட்டி.
*
Feelings do not tell
Have sneaked in
Bunny and flows.

*

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

வனம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வனத்தில் சீதை, தேடலில் ராமன்
ஆட்சியில் பரதன்
அயோத்தியில் சோகம்.
*
Sita in the forest in search of Rama
Successive shots
In Ayodhya tragedy.

*

நீரோடை..!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
ஊருக்கு அழகு சேர்க்கிறது
ஊற்று நீர் பாய்ந்து
மலை சரிவின் கீழ் நீரோடை.
*
Adding to the beauty of the city,
Spring water flowing
Stream under the mountain slope.

*

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

பறத்தல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
மரங்களின் புன்சிரிப்பு
கீழே விழுந்த மலர்கள்
வண்ணத்துப்பூச்சிகள் பறத்தல்.
*
Tree's smile
Fall flowers
Butterflies fly.

*

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

கண்ணாடிப் பெட்டி...!! ( ஹைக்கூ )

 Haiku – Tamil / English.
*
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீர்க் காற்றில்
அசைவற்ற பூச்செடிகள்.
*
Mirror box
Water in the air
Flowers immobile.

*

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

இருள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
உடம்பைக் காணவில்லை
உணர்வு தெரியவில்லை
கரைத்து கொள்கிறது இருள்
*
Missing bodies
Sense of wonder
Darkness is dissolved

*

புதன், 17 ஆகஸ்ட், 2016

சலவை...!! ( சென்ரியு )

Senryu – Tamil / English;
*
அழுக்காகி விடுகிறது
புதுப்பிக்கின்றார்கள்
மூளை சலவை.
*
Is spoiled
Revives
Brain wash.
*

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

பதில்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
இன்னும் எவரொருவராலும்              
முழுமையாக எழுதப்படவில்லை
எந்தக் கேள்விக்குமான பதில்.
*
Anyone who still
Is not completely written
No question and answer.

*

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

தந்திரங்கள்...!! ( ஹைபுன் )



அசம்பாவிதமாக நடக்கின்ற செயல்கள் யாவும் அதிர்ச்சியைத் தருகி்ன்றது. அச்சம்பவங்கள் யாவும் எவருக்கும் அதிர்ச்சியாகத் தெரிவதில்லை. வேடிக்கையான சம்பவமாகவே பாவிக்கிறார்கள். அசட்டையான நடவடிக்கைகள் கண்டு கேலியாகப் பேசுகிறார்கள். இச்சமூக நிகழ்வுகள் யாவும் சர்க்கஸ் விளையாட்டு போன்று கண்டு களிக்கிறார்கள். அச்சம்பவங்கள் பற்றி கொஞ்ச நாள்கள் பேசுகிறார்கள். பிறகு, அதனை மறந்தே போகிறார்கள். மக்களின் இம்மனநிலையினை அறிந்துள்ள அரசியல்வாதிகள் சில இக்கட்டான சூழ்நிலையில், மக்களின் மனதை திசைதிருப்புவற்காக, இத்தந்திரங்களைப் பயன்படுத்தி வெற்றி காண்கிறார்கள்.
                                          
காலடி வைத்து திரும்புகின்றனர்
யார் என்றும் முகம் தெரியாது?
நிலாவிற்கு நினைவிருக்குமா?  

ந.க.துறைவன்.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

மௌனம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
நிர்மலமான பரந்த ஆகாயம்
எண்ணங்கள் கடந்த மனம்
வார்த்தைகளற்ற மௌனம்.
*
The vast sky clear
Thoughts mind over
Wordless silence.

*

சனி, 13 ஆகஸ்ட், 2016

இரவு...!! ( சென்ரியு )



உடம்பைக் காணவில்லை
உணர்வு தெரியவில்லை
கரைத்து கொள்கிறது இரவு.
*

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

புல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
கொதிக்கும் பாறையின் மேல்
தென்னையின் நிழல்
கீழே இளைப்பாறும் புல்.
*
Boiling Rock
Coconut's Shadow
Resting at the bottom of the grass.

*  

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

வாசம்

தெருவெங்கும் வீசியது
கோழிக்கறிக் குழம்பு வாசம்
இருட்டில் தெரியவில்லை வீடு.


சனி, 6 ஆகஸ்ட், 2016

பேனா...!! ( சென்ரியு )

Senryu – Tamil / English.
*
கர்வம் பிடித்தது பேனா
காகிதங்கள் பற்றாக்குறை
கணினியில் எழுதும் பேரன்.
*
Haughty pen
Lack of papers
Grandson writing on the computer.

*

நிலா

திருடர்கைளை அடையாளம் கண்டு
பதிவு செய்திருக்குமா?
உலா வரும் நிலா.


உணர்த்தல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
பகிர்ந்துக் கொள்வதற்கு
பக்குவமான மனம் வேண்டும்
உணர்த்துகின்றன  பறவைகள்.
*
To share
Mature to be depressed
Birds are meant to.

*

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சிகரங்கள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
பிரபஞ்ச செயல்களைக் கவனிக்கிறது
அசையாமல் நிற்கிறது உயர்ந்து
அமைதியான மலை சிகரங்கள்.
*
Listening to the Universe works
Stands Still Rising
Quiet mountain peaks.

*

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

உச்சநிலை...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வாழ்வின் உச்சநிலை
பரிபூரணமாய் அடைந்து விட்டது
பூக்கள் பூத்த செடிகள்.
*
The culmination of life
Has become abundantly
Plants started to flower.

அன.பு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
புத்தர் உள்மனதில் சிரித்தார்
ஒவ்வொரு நொடியும் அன்பு
நேசிக்கிறது உலகம்.
*
Buddha laughed at within
Love every moment
The world loves.

*