சனி, 30 ஆகஸ்ட், 2014

புரியாமல்....!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
புரிந்துக் கொண்டிருப்பாய் என
நினைத்தேன் எப்படியின்னும்
புரிந்துக்கொள்ளாமல் அனிச்சப்பூவே…!!
*
புரிந்துக் கொள்வது கடினம்
புரியாமலிருப்பது எளிது
கவலைப்படாமல் போகிறது சிட்டு.
*
புரிந்தால் தலைக் கவிழும்
புன்னகைப் புரியும் உதடுகள்
உரசி எம்பிப் பறக்கிறது தும்பிகள்.
*   

குழப்பமாய்...!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU.
*
மனம் எங்கெங்கோ வெளியில்
உள்ளே கனன்றெரிகிறது
சொல்ல முடியாத குழப்பம்.
*
யாரோ விதைத்தக் குழப்பம்
குழம்பித் தவிக்கிறது மனம்
குழப்பம் விழுப்பம் தரலாம்
*
வலையில்லாமல் பிடிக்கிறார்கள்
குழம்பிய குட்டையில்
நிறைய நெளிகிறது மீன்கள்.

*

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

வரவேற்பு...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
ஒன்றை ஒன்று மோதாமல்
குறித்தப் பாதையில்
பயணிக்கின்றன பறவைகள்.
*
வாசல்கேட்டில் அமர்ந்து
கத்திக்கத்தி ஏதோவொரு
தகவலைச் சொல்கிறது காக்கை.
*
வெளிநாட்டிலிருந்து வருகிறான் மகன்
உறவினர்களோடு பயணித்தது
வரவேற்க செல்ல நாய்க்குட்டி.
- ந.க. துறைவன் சென்ரியு கவிதை.
*

  

புதன், 27 ஆகஸ்ட், 2014

ஜல்லிக்கட்டு...!! [ லிமரைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S LIMARAIKU.
*
எல்லோர் கையில் இருக்கணும் காசு
மனம் கலகலப்பாக்க வேண்டுமானால்
சிரிக்க சிரிக்க நீ பேசு.
*
கைகால் முறிந்தது காயம்பட்டு
தமிழரின் வீரவிளையாட்டு பார்க்கலாம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.
*
சமையலறையில் இருந்துக் கேட்டது ஓசை
சுகந்தமணமனமாய் நாசிக்குள் நுழைந்தது
அம்மா சுட்டுக் கொண்டிருந்தத் தோசை.
*
சின்னத்திரைத் தொடரில் பரபரப்பு
திடீரென மின்தடை
மாமியார் முகத்தில் புன்சிரிப்பு.
*
திருமணவிருந்தில் ருசித்துண்டான் பாயாசம்
உறவினர்கனளுடன் கலந்துப் பேசி மகிழ்ந்தவன்
கண்கள் சொருகியது தூக்கமாய் ஆயாசம்.
*


திங்கள், 25 ஆகஸ்ட், 2014

பசுமை தங்கம்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
ஏகாந்த வெளியில் பறந்துத் திரியும்
பறவைக்குத் தெரியுமா?
பால்வெளியின் ரகசியம்.
*
முதல் வாஸ்து விஞ்ஞானி
தென்னாட்டுக் கலைஞன்
சிற்பி மயன்.
*
வீட்டிற்கு அழகு செய்கிறது
காட்டின் பசுமைத் தங்கம்
தேவதாரு மரங்கள்.
*
வீட்டில் யாருமில்லை
விளையாடுகிறது ஏறிஇறங்கி
ஊஞ்சலில் எலிகள்.
*
வெளிநாட்டில் கணவன்
உள்நாட்டில் மனைவி
உறவை இணைக்கிறது செல்போன்.
*


வண்டுகள்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
பூமியின் இரகசியங்கள்
புலன்களால் உணர்ந்திடும்
மண்வளம் புரிந்த வண்டுகள்.
*
பொன் வண்டின் உலகப்
பொதுமொழி
இன்னிசை கீதம் “ ரீங்காரம் ”.
*
சைவமா? அசைவமா? சொல்
வீட்டிற்குள் வந்த என்
விருந்தாளி வண்டே…!!
*
உறங்கும் குழந்தையை
எதற்காகக் கடித்தாய்?
வண்டின் வன்குணம்.
*
பயிருக்கு உரம் போட
மலஉருண்டை
உருட்டி வரும் வண்டுகள்.
*


ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

இலை உதிர்காலம்....!! [ ஹைபுன் ]

*
NA.GA. THURAIVAN'S HAIBUN.
*
அவன் எதற்காகத் தற்கொலை செய்துக் கொண்டான் என்று பலரும் பலவிதமான கற்பனைக் கேள்விளைப் புனைந்துப் பேசிக் கொண்டனர். உண்மையான நிலவரம் அவனுக்கோ, அவனது நேசிப்பிற்குரியவர்களுக்கோ மட்டும் தெரிந்தோ, தெரியாமலோ கூட இருக்கலாம். உறுதியற்ற மனம், நம்பிக்கையற்றப் போக்கு, எப்பிரச்சினையிலும் தெளிவின்மை, வாழ்வின் சரியானப் புரிதலின்மை ஆகியன அவனின் பலவீனமோ? மட்டுமல்ல, அரை நொடிக்குள் எடுக்கின்ற அவசரமுடிவே அவனின் தற்கொலைக்கான முடிவாகி, எத்தனைப் பேரை சிக்கலுக்குள்ளாக்கி விடுகிறது?
நீ போய்விட்டாய்
நான் வாழ்கிறேன். இன்று
பிறந்தது இலைஉதிர்காலம்.
- ந.க. துறைவன் ஹைபுன் கவிதை.

சிரிப்பு...அழுகை...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
எதையோ தேடியபோது கிடைத்தது
தட்டுமுட்டுச் சாமான்கள் அறையில்
அக்கா விளையாடிய பொம்மைகள்.
*
வாங்கியவர் கட்டியதோ?
அடையாளம் தெரியவில்லை
குடியிருந்தப் பழையவீடு.
*
பாறை நிழலில்
வளரும் புல்லாய்
வயோதிகத் தனிமை.
*
அழவேண்டிய சமயம் சிரிப்பு
சிரிக்க வேண்டிய சமயம் அழுகை
சதா ‘ உம் ‘ என்ற முகம்.
*
ஆழ்ந்த உறக்கம்
கூர்க்காவின் விசில் சத்தங்கேட்டு
விழித்துக் கொண்டது நாய்.

*

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

சென்னை பிறந்த நாள்...!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU.
*
சின்னக் கிராமம்
பெரிய நகரமானது
தலைநகரம் சென்னை.
*
பழமையைப் பிரதிபலிக்கிறது
ஆங்கிலேயரின் ஆதிக்கம்
செயின்ட்ஜார்ஜ் கோட்டை.
*
மெரினா கடற்கரை நோக்கி
கூட்டத்தைப் பார்க்கக் கூட்டமாய்
வருகிறது கடல் அலைகள்.
*
பட்டினத்தார் துக்கத்தில்
கண்ணகி கோபத்தில்
மக்கள் நெருக்கத்தில் சென்னை.
*
ஊருக்கு அழகு நதி
திட்டுக்கனைச் சமாளிக்கிறது
கூவம்.. பாவம்… ?
*
பழமையான கடை வியாபாரம்
நடந்த இடம் காணவேயில்லை
நெரிசல் நிறைந்த மூர்மார்கெட்.
*
யானையுமில்லை பாரதியுமில்லை
இன்னுமிருக்கிறது அங்கேயே
பார்த்தசாதி கோயில்.
*
உயிரியல், விலங்கியல் அறிவியல்
அருங்காட்சியகங்கள்
முன்னேற்றச் சிகரங்கள்.
*
வள்ளுவர் வாழ்ந்த இடமா?
மயில்கள் வசித்த இடமா?
மைலாப்பூரில் எங்கே காண்பது?
*
சென்னை பிறந்த நாள்
வாழ்த்துக்கூற குவிந்துள்ளன
சரணாலயத்துப் பறவைகள்.

*

குண்டுமல்லிப்பூக்கள்...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
பளபளவென்று இருந்தது
கைப்பட்டவுடன் சுருங்கியது
பட்டுரோஸ் பூக்கள்
*

குண்டாகயிருந்தாலும்
அழகாகவே இருக்கிறது

குண்டுமல்லிப்பூக்கள்….!!

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

உறவுப் பாலங்கள்...!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU.
*
வெளியில் கேட்டது இனியகுரல்
வந்துப் பார்ப்பதற்குள்
பறந்துவிட்டது சிட்டுக்குருவிகள்
*
உயரமான செல்டவர்கள்
அதிர்வலைகளை உணர்ந்து
பாதுகாத்துக் கொண்டன பறவைகள்.
*
நீரில்லாத நதிகள், ஆறுகள்
கரைகளை இணைக்கின்றன
போக்குவரத்துப் பாலங்கள்.
*
,

.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

மணல்...!! [ ஹைக்கூ ]

NA.GA. THURAIVAN'S HAIKU.
*
ஆற்றில் வாழும்
நத்தைகளுக்குத் தெரியும்?
மணலைப் பற்றிய அறிவு.
*
எல்லோருக்கும் கைவருமா?
மணலைக் கயிறாகத் திரிக்கும்
வாக்குச் சாதுர்யம்.
*
மணல் மெத்தையில்
அமைதியாகப் படுத்துறங்குகிறது
நீரில் வாழும் மீன்கள்.
*
  



வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஆடிப் பொங்கல்..!! [ சென்ரியு ]


*
சாமிமருள் வந்து ஆடி
அருள்வாக்கு சொல்கிறாள்
பூசாரிக்குப் பூரிப்பு.
*
அம்மன் கேட்டாளா?
ஆடிப் பொங்கல் விழாவில்
கோழிகள் காவு.
*
அம்மன் கொடைவிழாவில்
ஆதிக்கப் போட்டி
ஊருக்குள் கலவரம்.
*
வாலிபர்கள் தூங்கவில்லை
துள்ளியாட வைத்தது
இரவுக் கரகாட்டம்.
*
கல்யாண வரங்கேட்டு
வேப்பிலை ஆடைக்கட்டி
பூஜித்தாள் கன்னிப் பெண்.
*


வியாழன், 14 ஆகஸ்ட், 2014

ஆலயம்...!! ஹைக்கூ]

*
NA.GA.THURAIVAN'S HAIKU.
*
ஆகம விதிகளாலானது
ஆன்ம லயம் நிறைந்தது
பக்தர்கள் தரசிக்கும் ஆலயம்.
*
அதிர்வலைகளின் சுழல் வட்டம்
எங்கும் பரவி, மேனியை
சிலிர்க்க வைக்கிறது பிராணசக்தி.
*
பஞ்ச பூதங்களுக்கு நடக்கும்
பூசையைத் தரிசிக்கிறார்கள்
பஞ்ச பூதங்களாலான மனிதர்கள்.
*
உள்ளே நுழைந்ததும்
மௌனமாக்கி விடுகிறது
மந்திரங்களின் ஒலி.
*
எங்கிருந்து வருகிறது?
பரபஞ்ச மந்திரம்
“ ஓம் ” கார ஓலி.
*
ஊன் உடம்பு ஆலயம்
நாதன் உள்ளிருக்கிறான்
நம்மை  நாமே தரிசிக்கலாம்.
*
சூன்யத்திலிருந்து இறங்கிய
பிகாசமான சூன்யம்
நிரம்பியதே மூலஸ்தானம்.

*

புதன், 13 ஆகஸ்ட், 2014

வரம்... !! [ ஹைக்கூ ]

அம்பாளின் பாசுரம்
நெஞ்சுருகப் பாடினால்
கொடுத்தாளா வரம்?
*.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

அடையாளம்....!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU.
*
நட்பு வளர்ந்தால் சிரிப்பு
நட்பு பிரிந்தால்
நாளும் மனவெறுப்பு.
*
பாரம்பர்ய கலாச்சாரம்
மனித வாழ்வின் அடையாளம்
ஒற்றுமையின் ஆணிவேர்.
*

என்னையே எனக்கு
பிரதிபலித்துக் காட்டும்
விஞ்ஞானக் கண்ணாடி.
*
வண்ண வண்ணமாய்
உறவு கொள்கின்றன
பூ மாலையில் பூக்கள்.

*

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

மழை ரசிகன்....!! [ கட்டுரை ]


*
தமிழ்நாட்டில் இலக்கியக் கூட்டங்கள் பெரும்பாலும் சனி, ஞாயிறு காலை அல்லது மாலை வேளைகளில் தான் நடைபெறுகின்றன.. ஏனென்றால் அவ்விரு நாட்களும் விடுமுறை திமழைனம் என்பதேயாகும். அன்று ஒய்வாக இலக்கியப் பேச்சாளர்கள், படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொள்வதற்கு வசதியாக அமைகின்றன. இலக்கியக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட சின்ன அரங்க அறைக்கு வந்து தேவையான அறை அலங்கரிப்புகள்,  மேசை நாற்காலிகள் வரிசைப்படுத்தி வைப்பது, குடிநீர் மற்றும் தேனீர்  டிரம் வைப்பதற்கான இடம் தேர்வு செய்து வைப்பது, மைக்செட் அமைப்பது, பேச்சாளர்கள் பேசுவதற்கான ஸ்டேண்ட் அமைப்பது, முன்வாசலில் உள்ளே வருபவர்களை வரவேற்று, போய் அமருங்கள் என முகமலர்ச்சியோடு பேசி மகிழ்வது, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் வரிசைப்படுத்தி வைப்பது, அதனருகில் வந்து நிற்கும் நண்பர்களிடத்தில் நலம் விசாரித்து புதியதாக வந்துள்ள புத்தகம் பற்றி பேசுவது என பல்வேறு காரியங்களை ஒருங்கிணைப்போடு கவனித்து வருவார்கள். வருகை தருபவர்கள் உள்ளே நுழைந்து காலியாக இருக்கும் இருக்கைளில் போய் அமர்ந்துக் கொள்வார்கள். கூட்டம் எப்போது தொடங்கும் என்ற ஆவல் பலரின் மனங்களில் ஓடும். கூட்ட ஏற்பட்டாளர்கள் கூட்டத்தைத் தொடங்கலாமென நினைக்கும் போது பார்த்து வெளியே மெல்ல சின்னச் சின்னத் தூறல்கள் விழத்தொடங்கும். “ அட, மழைத்தூறல் போட ஆரம்பித்து விட்டதே ” – என்று கவலைப்படுவார்கள். யாரேனும் ஒருவர் வந்து வெளியில் பார்த்துவிட்டு, பலமா வராது, லேசான தூறல்தான் கூட்டத்தை ஆரம்பியுங்க… ” என்பார். கூட்டம் ஆரம்பித்து பேசத் தொடங்குவார்கள். வருபவர்கள் வந்துக்கொண்டிருப்பார்கள். பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் மழையும் வந்துக் கலந்துக் கொள்ளும் என்று தன் ஹைக்கூ கவிதையில் இப்படிச் சொல்கின்றார்.
*
“ மாடி யறை
இலக்கியக் கூட்டம்
கலந்துக் கொள்ளும் மழை ” – [ “ ஐக்கூ அருவிகள் ” அமுதபாரதி – நூல் பக்கம் 35 ] ஆக, இலக்கிய கூட்டமென்றால் பலரும் கலந்துக்கொண்டு ரசிப்பது மட்டுமல்ல, எப்பொழுதேனும் திடீரென வரும் இயற்கைப் பொழிவான மழையும் வந்துக் கலந்துக் கொள்ளும் என்கிறார். பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் கலந்துக் கொண்டு அனுபவித்த நிகழ்வுகளின் நினைவுகளை முன்னிறுத்தி, அதனை ஹைக்கூ கவிதையில் மிகத் திறம்பட சொல்லிப் பதிவு செய்துள்ளார் ஓவியக் கவிஞர்.அமுதபாரதி.


வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

அருகம்புல் ..!! [ ஹைக்கூ ]


*
பிணங்களைப் பார்த்து
இரங்கல் தெரிவிக்கின்றன
உயிர்ப் பூதக் கணங்கள்.

விஷ முறிப்பு மருந்தென்று
கீரிக்கு எப்படித் தெரியும்?
அருகம்புல்.
*
குண்டுப் பையன் ஏறிநின்றான்
எடையைப் பார்க்க
நின்றுவிட்டது எடைமிஷன்.