*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
எதையோ தேடியபோது
கிடைத்தது
தட்டுமுட்டுச்
சாமான்கள் அறையில்
அக்கா விளையாடிய
பொம்மைகள்.
*
வாங்கியவர் கட்டியதோ?
அடையாளம் தெரியவில்லை
குடியிருந்தப்
பழையவீடு.
*
பாறை நிழலில்
வளரும் புல்லாய்
வயோதிகத் தனிமை.
*
அழவேண்டிய சமயம்
சிரிப்பு
சிரிக்க வேண்டிய
சமயம் அழுகை
சதா ‘ உம் ‘ என்ற
முகம்.
*
ஆழ்ந்த உறக்கம்
கூர்க்காவின் விசில்
சத்தங்கேட்டு
விழித்துக் கொண்டது
நாய்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக