வியாழன், 21 ஆகஸ்ட், 2014

சென்னை பிறந்த நாள்...!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU.
*
சின்னக் கிராமம்
பெரிய நகரமானது
தலைநகரம் சென்னை.
*
பழமையைப் பிரதிபலிக்கிறது
ஆங்கிலேயரின் ஆதிக்கம்
செயின்ட்ஜார்ஜ் கோட்டை.
*
மெரினா கடற்கரை நோக்கி
கூட்டத்தைப் பார்க்கக் கூட்டமாய்
வருகிறது கடல் அலைகள்.
*
பட்டினத்தார் துக்கத்தில்
கண்ணகி கோபத்தில்
மக்கள் நெருக்கத்தில் சென்னை.
*
ஊருக்கு அழகு நதி
திட்டுக்கனைச் சமாளிக்கிறது
கூவம்.. பாவம்… ?
*
பழமையான கடை வியாபாரம்
நடந்த இடம் காணவேயில்லை
நெரிசல் நிறைந்த மூர்மார்கெட்.
*
யானையுமில்லை பாரதியுமில்லை
இன்னுமிருக்கிறது அங்கேயே
பார்த்தசாதி கோயில்.
*
உயிரியல், விலங்கியல் அறிவியல்
அருங்காட்சியகங்கள்
முன்னேற்றச் சிகரங்கள்.
*
வள்ளுவர் வாழ்ந்த இடமா?
மயில்கள் வசித்த இடமா?
மைலாப்பூரில் எங்கே காண்பது?
*
சென்னை பிறந்த நாள்
வாழ்த்துக்கூற குவிந்துள்ளன
சரணாலயத்துப் பறவைகள்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக