வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

பனி விழும் மனசு.

கவிஞர்.நா.விச்வநாதன் ஹைக்கூ கவிதைகள்
1.
வரம்பெற்ற மனிதர்களே                     
எவர்க்கும் வாய்க்கும்
பனிதடவியப் பறத்தல் சுகம்.
2
காற்றில் அலையும் வாழையிலை                
பேசாதே துயரம் பற்றி                           
பனி விழும் மனசு.
3.
செடிப்பூ கூந்தலில்
உதிர்ந்தே போகட்டும்
வாசமும் சிரிப்பும் அசலாய்…

4.
பதினாறு பேனாக்கள்
நிறையப் பனித்துளி
முடிவதில்லை ஏதும் கவிதை.
5.
.மழை பார்க்கும் ஆவல்
தூண்டிலை முத்தமிட
மரணத்தின் சுவை.
ஆதாரம்: முள்ளில் அமரும் பனித்துளி

என்ற தொகுப்பிலிருந்து.

பனை மரம்.

கவியருவி.ம.இரமேஷ் ஹைக்கூ கவிதைகள்
பூக்களைப் பார்த்ததும்
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப் பூச்சிகள்.

ஆடை
உடுத்தலில் இருக்கிறது
பூக்களின் அழகு.

கூடு திரும்ப வில்லை
கடைசி சுள்ளிக்காகப்
பறந்தப் பறவை.

நெருப்பில்லாமல்
புகைகிறது
தூரத்துப் பனை மரம்.

கனவின் பொருள்
என்றாவது அறிந்திருக்குமா?
தலையணை.

ஆதாரம்; ‘பனித் துளியில் பனை மரம்’

          என்ற தொகுப்பிலிருந்து.

பனை மரம்

கவியருவி.ம.இரமேஷ் ஹைக்கூ கவிதைகள்
1.    பூக்களைப் பார்த்ததும்
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப் பூச்சிகள்.
2.    ஆடை
உடுத்தலில் இருக்கிறது
பூக்களின் அழகு.
      3.    கூடு திரும்ப வில்லை
கடைசி சுள்ளிக்காகப்
பறந்தப் பறவை.
   .4.    நெருப்பில்லாமல் புகைகிறது
தூரத்துப் பனை மரம்.
     5.    கனவின் பொருள்
என்றாவது அறிந்திருக்குமா?
ஆதாரம்; ‘பனித் துளியில் பனை மரம்’
        என்ற தொகுப்பிலிருந்து.    










வியாழன், 27 பிப்ரவரி, 2014

ந.க.துறைவன் ஹைபுன்


இந்திய தேசத்தில் நீதி நெறிக் குறியீடாகவும்
காந்தீயத் தத்துவத்தின் சிறப்பு நிலை அறக்
கோட்பாடாகவும் விளங்கியது அந்த உருவப்
பொம்மைகள். அப்பொம்மைகளைக் குழந்தைகளாலும்
சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அனைத்து
தரப்பு மதவாதிகளாலும் விரும்பி ஏற்று
ரசிக்கபட்டது. அந்த உருவப் பொம்மைகள். இன்று
எங்கும் காண்பது அரிதாகி இருக்கிறது. அது என்ன
பொம்மைகள்?
.
      பார்க்காதே பேசாதே கேட்காதே
      என்று தத்துவம் போதித்தது
      மூன்று குரங்கு பொம்மைகள்.




.

புதன், 26 பிப்ரவரி, 2014

கவரிங் நகை

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

1.தாளம் போட்டு சிரித்தது
தாத்தாவின் தொந்தியைத் தட்டி
மடியில் உட்கார்ந்தக் குழந்தை
.
2.மருத்துவர் கொடுத்த மருந்தால்
அழிந்தது
குழந்தை வயிற்றில் பூச்சிகள்
.
3.தங்கச் சங்கலி பறித்தவன்
நம்பிக்கைத் தகர்ந்துப் போனது
கிடைத்ததோ கவரிங் நகை
.
4.வலது கைமணிக் கட்டில்
கலர் கலராய்

கோயிலில் வாங்கியக் கயிறுகள்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தேடல்

1.கேள்வி யொரு தேடல்
பதில்
தேடலின் தேடல்.
2.எப்பொழுது உதிரும்
மரத்தின்
கடைசி இலை.
3.ஆற்று நீரின்
அன்பானக் குழந்தைகள்
கூழாங் கற்கள்.

மயிலிறகு

மயிலிறகு காற்று
கிழக்கு நோக்கி வந்தது
ஹைக்கூ கவிதைகள்