கவிஞர்.நா.விச்வநாதன் ஹைக்கூ
கவிதைகள்
1.
வரம்பெற்ற
மனிதர்களே
எவர்க்கும் வாய்க்கும்
பனிதடவியப் பறத்தல்
சுகம்.
2
காற்றில்
அலையும் வாழையிலை
பேசாதே
துயரம் பற்றி
பனி விழும் மனசு.
3.
செடிப்பூ கூந்தலில்
உதிர்ந்தே போகட்டும்
வாசமும் சிரிப்பும்
அசலாய்…
4.
பதினாறு
பேனாக்கள்
நிறையப்
பனித்துளி
முடிவதில்லை
ஏதும் கவிதை.
5.
.மழை
பார்க்கும் ஆவல்
தூண்டிலை
முத்தமிட
மரணத்தின்
சுவை.
ஆதாரம்:
முள்ளில் அமரும் பனித்துளி
என்ற
தொகுப்பிலிருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக