செவ்வாய், 23 ஜூன், 2015

பிரார்த்தனை...!! [ HAIKU / ஹைக்கூ ]

*
பிரார்த்தனைக்கு உதவியது
காற்றில் அணையாமல்

மரத்தின் கீழ் அகல்விளக்கு.
*





















திங்கள், 22 ஜூன், 2015

வாழ்க்கை...!! [ HAIKU / ஹைக்கூ ]

*
வாழ்க்கைப் பற்றி
எப்பொழுதேனும் நினைக்குமா?
தினம் மலரும் பூக்கள்.
*

ஞாயிறு, 21 ஜூன், 2015

காதல்...!! [ SENRYU / சென்ரியு ]


*
அவனுக்கும் அவளுக்கும்
இடையே இடைவெளி விலகி
நெருங்க வைத்தது காதல்.

*

சனி, 20 ஜூன், 2015

இறுதி புள்ளி...!! [ HAIKU / ஹைக்கூ }


*
எந்த வொன்றுக்கும்
வைக்கின்றார்கள்
இறுதி புள்ளி.

*

இருட்டு...!! [ ஹைக்கூ ]

*
உள்உணர்வுகள்
உணர்ச்சிகள் சிலிர்ப்புகள்
உள்வாங்கிக் கொள்கின்றன இருட்டு.
*

இடைவெளி...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
மரத்திற்கும் எனக்கும் இடையே
சிறிய இடைவெளி                 
கண்ணுக்குத் தெரியவில்லை காற்று.
*


இடைவெளி...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
மரத்திற்கும் எனக்கும் இடையே
சிறிய இடைவெளி                 
கண்ணுக்குத் தெரியவில்லை காற்று.
*


வெள்ளி, 19 ஜூன், 2015

மீன்கள்...!! [ SENRYU / சென்ரியு [

*
மீன்கள் விளையாட்டை ரசித்தார்கள்
குடும்பத்தேடு
வறுவலை வாங்கி ருசித்தார்கள்.

ஹைக்கூ அழகியல் பூ...!!


*
.மரத்தில் ஆயிரம் பூக்கள் பூத்திருக்கலாம். அவையெல்லாமே அழகான பூக்களாகவே காட்சி தரும். இயற்கையின் சுற்றுச்சூழலினால் எத்தனையோ பூக்கள் பாதிக்கப்பட்டுள்ளது நமது கண்களுக்குக் கூடத் தெரியாது. ஆனாலும் அதில் சிலப் பூக்கள் மட்டுமே பாதிக்காமல் சாமளித்து தூய்மையானதாக இருக்க முடியும். அது போன்றது தான் ஹைக்கூ. ஆயிரமாயிரமாய் எழுதினாலும் ஏதோவொரு சில மட்டுமே ஹைக்கூவாக மிளிர்ந்து பளிச்சிடுகின்றது. அந்த ஒன்றே வாசகர் மனதைத் தொடும் தூண்டும். அந்த ஹைக்கூவை யாராலும் திரும்பச் சொல்ல முடியும். மறக்க முடியாது. அத்தகைய கவிதை எதுவோ அதுவே ஹைக்கூவாகும். ஹைக்கூ எழுதுங்கள். ஹைக்கூவாய் வாழுங்கள்.   
*

விளம்பரம்...!! [ LIMARAIKU / லிமரைக்கூ ]


*
பாதையோரம் விளம்பரங்கள் பலப்பல உண்டு
கடந்துப் போகும் மனிதர்கள் முகஞ்சுளித்துப்
போகிறார்கள் வெறுப்போடு கண்டு.
*
 ஊரெல்லாம் அன்று ஒரே புரளி
அந்தப் பெண் தற்கொலைக்கு விரும்பி
அரைத்துக் குடித்த விதை அரளி.
*
அரிசியில் பொறுக்கக் கிடைக்கிறது கல்
வாட்டி வதைக்கின்றது எந்நாளும்
மனதில் நெருடலாய் பல சிக்கல்.

வியாழன், 18 ஜூன், 2015

பருந்து...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
வானில் பறக்கின்றனவே
அதில் எது?
கிருஷ்ணப் பருந்து.
*

கரப்பான்...!! [ SENRYU / சென்ரியு ]

*
அவள் தைரியசாலி
பயமுறுத்தி விட்டுப் போகிறது
சமையலறையில் கரப்பான்.

*

புதன், 17 ஜூன், 2015

அரளி...!! [ SENRYU / சென்ரியு ]


*
ஊரெல்லாம் அன்று ஒரே புரளி
அந்தப் பெண் தற்கொலைக்கு விரும்பி
அரைத்துக் குடித்த விதை அரளி.

ந.க.துறைவன்

திங்கள், 15 ஜூன், 2015

சூன்யவெளி....!!


HAIKU / ஹைக்கூ
*
பரந்த சூன்யவெளி எதுவும
பாதுகாப்பான இடமோ?
எந்த அசம்பாவிதமும் காண்பதரிது.
*
மௌனத்தைக் கலைத்து விட்டது
எட்டிப் பார்த்தேன் மனம் கசிந்தது
பாதையில் நடந்த கார்விபத்து.
*
அண்ணாந்து பார்த்தேன் வானம்
திடீரென மின்னலாய்
கீழ் நோக்கி வந்ததொரு ஓளி.

*

வெள்ளி, 12 ஜூன், 2015

ஞானப்பூ....!!


*
அன்றும் இன்றும் என்றும்  ஹைக்கூ எழுதுவது எளியதாகி வி்ட்டது ஹைக்கூ என்றாலே எழுதுவதற்கு சிறியதான ஒரு வரிவடிவம் என்று தான் புரிந்துள்ளார்கள். எது ஹைக்கூ என்ற கேள்வி இங்கே தொடர்ந்துக் கேட்கப்பட்டு வருகின்றன? அதற்கான விடைகள் பலரும் பலவிதமாக அளித்துள்ளது ஆறுதலடைகின்ற வண்ணமாகவே இல்லை எனலாம். ஹைக்கூவை யாரும் எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை. எழுதுங்கள் என்று தான் சொல்கின்றார்கள். ஆனால் அதைக் கொஞ்சம் புரிந்து எழுதங்கள என்று தான் கூறுகின்றார்கள். அதற்காக கொஞ்சம் மெனக்கெட்டு ஹைக்கூ நூலகள்  கவிதை வாசிப்பு அவசியம் என்றே சொல்லலாம் அப்பபொழுது தான் அதைப் பூரணமாக உள்வாங்கிக் கொ்ண்டு எழுதப் பழக முடியும் என்பதே என்து கருத்தாகும். ஹைக்கூ என்பது மனம் சார்ந்த தத்துவம். உணர்வுப்பூ. உணர்ச்சிப்பூ. அதொரு மௌனப்பூ.
*

புதன், 10 ஜூன், 2015

மண்....!! [ HAIKU / ஹைக்கூ ]


*
பசுமை நிறைந்த வெளி
பலத்த மழை
மகிழ்ச்சியில் மரங்கள்.
*
படித்துறையில் அமர்ந்து
விளையாட்டைப் பார்த்தேன்
அருகில் வரத் துடித்தன மீன்கள்.
*
பிணத்தை புதைத்து விட்டு
எல்லோரும் திரும்பினார்கள்
மழையில் கரைந்தது மண்மேடு.
*

திங்கள், 8 ஜூன், 2015

மர [ ண ]ம் ....!! HAIBUN / ஹைபுன் ]

*
இடி பலத்தக் காற்று. மழையின்னும் ஆரம்பிக்கவில்லை. காற்றில் மரங்கள் பேயாட்டம் போட்டன. முருங்கைகள் பலமிழந்து முறிந்து விழுந்து விட்டன. அதில் உள்ள காய்களைக் கீரைகளைப் பறித்துக் கொள்ள, அருகில் வாழும் பெண்கள் ஓடிவந்து மடமடவென்று ஒடித்து எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் முகங்களில் ஓசியில் ஒருநாள் சமையலுக்கு காய்கள் கிடைத்ததென்று பெரும் மகிழ்ச்சி. மரத்தின் வீட்டுக்குச் சொந்தக்காரர் விரைந்து வந்து அவர்களை விரட்டியடித்தார். கிடைத்தவரை லாபமென்றுபெண்கள் ஒதுங்கிப் போய்விட்டார்கள். காற்று அடங்கி பலத்த மழைத் தொடங்கியது.
அருகில் யாருமில்லை.
அனாதைப் பிணமாய் கிடந்தது
முருங்கை மரம்.

*

ஞாயிறு, 7 ஜூன், 2015

இல்லை...!! [ டIMARAIKU / லிமரைக்கூ ]

*
கல்வி கற்பிப்பதைப் புறந்தள்ளி
தமிழகத்தில் இன்றுமிருக்கிறது
மாணவரே இல்லாத பள்ளி.

*

தேடல்...!! [ HAIBUN / ஹைபுன். ]


*
எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேடிக் கொண்டேயிருந்தான். எங்கு வைத்தோமென்று யோசித்துப் பார்த்தான். கவனத்திற்கு வரவில்லை ஞாபக மறதி வந்துவிட்டதோ என்று பயந்தான். பயம் பல நேரங்களில் மனிதர்களை பயமுறுத்திப் பார்க்கும். பயந்தவர்கள் யாரும் தைரியசாலிகள் இல்லையா என்ன?. முக்கியமான பொருள் என்பதால் மனதில் பதட்டம் அதிகரித்தது. எப்படியும் கிடைத்துவிடும் என்ற உறுதியோடு தேடினான். பளிச்சென்று ஞாபகம் வந்துவிட்டது. அங்கே போய் பார்த்தான். பொருள் வைத்த இடத்திலேயே பத்திரமாக இருந்தது. சிக்கலானப் பிரச்சினையிலிருந்து தப்பித்தோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.
தேடுவது்மில்லை தொலைப்பதுமில்லை
எந்தவொரு பொருளும் கைவசமில்லை
சேமித்து வாழத் தெரியாதப் பறவைகள்.

*

சனி, 6 ஜூன், 2015

கலப்பு...!! [ டIMARAIKU / லிமரைக்கூ ]


*
நதிகளில் கழிவுநீர் கலப்பு
கங்கை காவிரியில் மக்கள்
புனிதநீர் முக்குளிப்பு.

*

மதிப்பெண்...!! [ HAIBUN / ஹைபுன் ]


பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு, +2 வகுப்பு பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கின்றது. பாராட்டலாம். இந்த தேர்ச்சி எப்படிப்பட்து என்புது தான் கேள்வி. மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்து, அதை அப்படியே பரிட்சையில் பதிவு செய்ய வைப்பது ஒரு தேர்வா?  மனனம் செய்து எழுதியதை விடைத்தாள்கள் திருத்துபவர்கள் எப்படி முழுமையான சரியான விடையென்று மதிப்பெண் அளிக்கின்றார்கள்? அரசும் இதை எப்படி சரியானமுறையென்று அதிக மதிப்பெண் அள்ளிக் கொடுக்க அனுமதியளிக்கின்றது. இது தான் கல்விமுறையா?
அறிவிற்கு அளிக்கவில்லை
மனப்பாடத்திற்குத்தான்
அள்ளி வழங்கியது மதிப்பெண்.

*

நூடுல்ஸ்....!! [ SENRYU / சென்ரியு ]

*
நூடுல்ஸ் குர்க்கூரே மேகி
வியாபாரம் நொடிந்து விட்டதென
கடைக்காரர்கள் ஒப்பாரி.
*

வெள்ளி, 5 ஜூன், 2015

மயில்...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
ஆடிக் களித்தக் களைப்பு
நாகலிங்க மரத்தில்
உறங்குகிறது மயில்.
* 

சிறியதாய் உலகம்...!! [ SENRYU / சென்ரியு ]

*
தொழில்நுட்பம்
உலகைச் சுருக்கி விட்டது
ஹைக்கூகவிதையாய்…

*

வியாழன், 4 ஜூன், 2015

எங்கே...!! [ ஹைக்கூ ]

*
எங்கே தொடங்குகின்றது
அறிய முடிகின்றதா?
அறிவின் பிறப்பிடம்.
*