செவ்வாய், 31 ஜனவரி, 2017

காதல்...!! ( சென்ரியு )


டீ டைம்.

மூன்று டீ சொன்னார்
நின்றுக் கொண்டே பேசினார்கள்
காதல் தகராறு.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

செம்பருத்திப்பூ...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.
*
செம்பருத்தி பூவின்
வசீகர அழகில் மயங்குகிறது
வண்ணத்துப்பூச்சிகள்.
*                                 
Hibiscus flower
Enticements, beauty deceived
Butterflies.
*

செவ்வாய், 24 ஜனவரி, 2017

பாதுகாப்பு...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.
*
இருட்டில்
இலைகள் பாதுகாப்பில்
கிளிகள்.
*
In the dark
Leaves in custody
Parrots.

N.G.Thuraivan

சைனா டீ...!! ( சென்ரியு )



TEA  TIME  - டீ டைம்.

*
அப்பா சொல் கேட்கும் மகன்
எப்பொழுதும் விரும்பி குடிக்கிறான்
சைனா டீ.
 
Father asks son to tell
Always liked the drink
China tea.

N.G.Thuraivan.

வியாழன், 19 ஜனவரி, 2017

தவளை...!!



ஜென்   ஹைக்கூ.

ஒரு சிறு தவளை
வாழையில் பயணம் செய்கிறது
நடுங்கியபாடி.


ஜென் – நூல் – பக்கம் – 130.

செவ்வாய், 17 ஜனவரி, 2017

எங்கே போகிறாய்...!!

ஜென்
*
“ எங்கே போகிறாய்? ”

“ எங்கே மாற்றமில்லையோ எங்கே போகிறேன். ”

“ மாற்றமில்லைாத இடத்துக்கு எப்படி நீ போக முடியும்? ”

“ நான் போவது மாற்றம் இல்லாதது ”.

 ஆதாரம் ; ஜென் – நூல் பக்கம் – 106.

தகவல் ; ந.க.துறைவன்.

இரகசியப் பேச்சு...!! ( சென்ரியு )




TEA TIME  - டீ டைம்.

15.
இடையில் வந்து அமர்ந்தவரால்
சட்டென நிறுத்திக் கொண்டனர்
ரகசியப் பேச்சு.
*
Come and sit down
between the Dropped
Secret talks quickly.
N.G.Thuraivan.

திங்கள், 16 ஜனவரி, 2017

ஜென்கவிதை.




நான் தனியே வந்தேன்
தனியே இறப்பேன்;
பகலிலும் இரவிலும்
தனியே உள்ளேன்.


  - குரு சென்கை.

வெள்ளி, 13 ஜனவரி, 2017

பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!





தை  முதல்நாள் காலை வணக்கம் நண்பர்களே

அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்தக்கள்.

வாழ்க வளமுடன்.   -   ந.க. துறைவன்.

*

செவ்வாய், 10 ஜனவரி, 2017

புத்தகங்கள்...!!




1.
உணர்வுப் பூர்வமானது புத்தகங்களின் தொடு உணர்வு.

2.
புத்தகங்களை நான் பார்த்தேன்.
புத்தகங்கள் என்னைப் பார்த்தன
வாங்கியதைப் பார்த்துச் சிரித்தன.

3.
கூச்சப்படாமல் விரும்பித் தொட்டுப் பார்க்க அதிக
உரிமைக் கொடுப்பது புத்தகங்கள் மட்டுமே.

4.
குழந்தையைப் போல அவள் மார்பில் அணைத்துச் செல்கிறாள் புத்தகங்கள்.

5.

விரித்து வைத்து புத்தகங்களின் எழுத்தின் மீது ஆழ்ந்த விழிகள்  

6.

புத்தகங்கள் தருவது அறிவின் வழி ஆழ்ந்த மௌனம்.

ந.க.துறைவன்.

*

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

நீர்த்துளிகள் முத்தாட...!! ( ஹைபுன் )



பனிநீரில் இலையாட, குருவிகள் சிலிர்த்தாட. காற்றில் மலராட, நீர்த்துளிகள் முத்தாட, பசுக்கள் நடைபோட, கன்றுகள் பின் துள்ளாட, நடுங்கும் குளிரில் விடியற்காலை வெள்ளென வெளுக்கும் பொழுதில் விழித்தெழுந்தாயே மார்கழியே, உனை ஆண்டாள் துதிபாட, பக்தர்கள் பின்பாட, பனிசூழ்ந்த வெளியெங்கும் சூரியன் ஒளி பரப்ப, பறவைகள் படபடத்து எழுந்து பறக்க, பால்கறக்கும் பசுக்கள் நின்று புல்தின்று பால்சுரக்க, மாடுகள் வயலில் உழுது மணியசைக்க, உழவன் வயல் உழுது மனம்சலிக்க, பகல்போது துவங்கியது. கிராமம் தன்பணிகள் நிறைவேற்றிடவே விழிப்புற்று விழித்தெழுந்ததுவோ!!                            

குடிசைகளை நேசிக்கும்
கருணை உள்ளம் படைத்தவைகள்
மார்கழியில் மலரும் பூசணிகள்.

வெள்ளி, 6 ஜனவரி, 2017

உணர்வுகள்...!! ( சென்ரியு )


TEA TIME  -  டீ டைம்.
14.
ஒவ்வொரு மனிதனின்
ருசி உணர்வின்  வெளிப்பாடு
லைட்,  ஸ்ட்ராங் டீ
*
Each man Expression of
the sense of taste
Light, Strong Tea
*