வியாழன், 31 டிசம்பர், 2015

குளிர்ச்சி...!! ( ஹைக்கூ )

மார்கழி – 31.
*
தீமூட்டி அமர்ந்தனர்
வார்த்தைகளில் குளிர்ச்சி
பனிக் காலம்.
*
மார்கழி – 32.
*
நகரத்தில் கோழி கூவலில்லை
சங்கொலிப்பது கேட்டீரோ?
துயியெழுவீர் தோழியர்காள்.        

*

நல்வாழ்த்துக்கள்...!!

2016 - ,இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.
*
நிகழ்ந்தது, நிகழ்வது, நிகழப்பேவது அனைத்திற்கும் அதிபதியானவனே
இப் புத்தாண்டில் நிகழ்வன எல்லாம் நல்லதாகவே நிகழ்ந்திட அருள்புரிவாய்.

*.

புதன், 30 டிசம்பர், 2015

துளசிசெடி...!! ( ஹைக்கூ )

மார்கழி – 29.
*
பசுமையாய் துளசிசெடி
மாடத்தில் அகல்விளக்கு
உள்மனதில் பிரார்த்தனைகள்.
*
மார்கழி – 30.
*
பனிசூழ்ந்த நெடுஞ்சாலையில்
யாருக்கு பாதுகாப்பாய்?
வானுயர்ந்த அனுமன்சிலைகள்.
*

செவ்வாய், 29 டிசம்பர், 2015

தீர்த்தம்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 27.
*
கோயில்களில் கொடுப்பதுண்டு
நோய் தீர்க்கும் மருந்தாகும்
துளசி தீர்த்தம்.
*
மார்கழி – 28.
*
ஓடையின் கரையில் அமர்ந்து
பனியில் அலகைச் சிலிப்பிக்
கழுவிடும் சிட்டுக்குருவிகள்.
*

திங்கள், 28 டிசம்பர், 2015

நிலக்காட்சிகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 25.
*
காவல் பொம்மைகள்
தலையெலாம் எச்சங்கள்
கழுவி விடுகின்றன பனித்துளிகள்.
*
மார்கழி – 26.
*
ஏருழுதல் கமலை இறைத்தல்
நிலக்காட்சிகள் காணாமல் போனது
நவீன இயந்நதிரங்கள் ஆக்ரமிப்பு.

*

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

கவிதை எங்கிருந்து....!!

*.
கவிதையை
வெளியில் தேடாதீர்
அவரவர் வாழ்க்கைக்குள்
இருப்பதுதான் கவிதை.
2.
உங்களுக்குள் இருக்கும் கவிதையைத்தான்
தேடி அலைந்தும்
குழப்பி – குழம்பியும்
பிறர் கவிதையில் காண்கிறீர்கள்.
உங்களுக்குள் இதை
வசப்படுத்தாமல் என்னதான் பேசுகிறீர்.
தேடுங்கள்
உங்களுக்குள் கவிதை கிடைக்கும்.
ஆதாரம் : கள்ளும் முள்ளும் கவிதைகளும் – கோவை ஞானி – பக்கம் 96.
தகவல் :ந.க.துறைவன்.

*

மண் வணங்கும்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 23.
*
தூங்கும் பூக்களின்
உறக்கம் களைத்தெழுப்புவிறது
பொன்வண்டின் ரீங்காரம்..
*
மார்கழி – 24.
*
முற்றிய நெற்கதிர்கள்
பனிநீரின் பாரத்தால்
சிரம் தாழ்த்தி மண் வணங்கும்.

சனி, 26 டிசம்பர், 2015

ரசிகன்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 21..
*
கடலுக்குள் வெண்சங்குகள்
நீர்பரப்பில் அலையோசை
இசையை ரசிப்பானா சூரியன்.
*
மார்கழி – 22.
*
பற்றியெரிந்தனவாய்
குளத்தின் மேற்பரப்பில்
மார்கழி வெண்புகை.

*

மூடுபனி....!! ( ஹைக்கூ )

மார்கழி – 19
*.
சில்லென்று மென்காற்று
இலையும் பூவும் குளிரில்
நுனியில் சொட்டும் பனித்துளிகள்.
*
மார்கழி – 20.
*
வெளியெங்கும் மூடுபனி
வீதியில் பஜளைக் கூட்டம்
கடந்து போகின்றன பறவைகள்.
*

வெள்ளி...!! ( ஹைக்கூ )

மார்கழி – 17.                               
*
பனிமூட்டம் சூழ்ந்ததடி
எங்கோ காணாமல் போச்சுதடி      
வானில் முளைத்த வெள்ளி.
*
மார்கழி – 18.
*
குளிக்கும் படித்துறையில்
பெண்களின் சிரிப்பலைகள்
வெட்கத்தில் செந்தாமரைகள்.
*

வெள்ளி, 25 டிசம்பர், 2015

காதல்கனா...!! ( ஹைக்கூ )

மார்கழி – 15.
*
காதல் கனாக் கண்டவர்கள்
ஆண்டாள் கவிமீரா
கண்ணனின் உயிர்த்தோழிகள்.
*
மார்கழி – 16.
*
பனியில் நிர்வாணச் சிலைகள்
நிழல் கொடுக்கும் மரங்கள்         
பூஉதிர்த்து வணங்கும் கருவிகள்.
*

சூடிக் கொடுத்த சுடர்கொடி...!! ( ஹைக்கூ )

மார்கழி – 13
*
காதலனுக்கு சூடிக் கொடுத்தாய்
பாமரர்க்குப் பாடக் கொடுத்தாய்
கன்னியரை வீதிக்கு அழைத்தாய் தோழி.
*
மார்கழி – 14.
*
கீழ்வானம் வெளுத்து வாசல்தெளித்து
வீடுகள் திறந்தன காண். உள்ளே
உடல் சலிக்கும் பெண்குலங்கள்.
*

வியாழன், 24 டிசம்பர், 2015

நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
*
இகழ்பவனைக் கண்டிக்கிறவன் அவமானத்தைப் பெறுகிறான்.
தீயவனைக் கண்டிக்கிறவன் அவன் திட்டுக்களைப் பெற்றுக் கொள்கிறான்.
*
இகழ்பவனைக் கடிந்துக் கொள்ளாதே. அவன் உன்னை வெறுப்பான். ஞானமுள்ளவனைக் கடிந்துக்கொள் அவன் உன்னை நேசிப்பான்.   
*
ஞானமுள்ளவனக்கு அறிவுரை கொடு. அவன் ஞானத்தில் தேறுவான். நீதிமானுக்குப் போதனைசெய், அவன் அறிவில் விருத்தியடைவான்.
பைபிள் நீதிமொழிகள்.

*

தும்பிகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 11.
*
கோபுரத்தில் புறாக்களின் குரல்
பூசைமணிச் சத்தம் மேட்டு
துதித்துப் பறந்தன தும்பிகள்.
*
மார்கழி – 12.
*
வைகறை நீராடி கூந்தல்முடித்து
ஆண்டாளின் தோழி
பாடிக் களித்தாள் திருப்பாவை.

*

புதன், 23 டிசம்பர், 2015

உரையாடல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil [ English.}
*
உணவு மேசையில்
கரண்டிகள் பேசின
நின்றது உரையாடல்.
*
Food on the table
Talked with spoon
Conversation stopped.

*

சிறுவண்டுகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 9.
*
பசுக்கள் பால் கறக்கும்
எருமைகள் மேயப் போகும்
வயல்களை மறைத்தது பனிப்புகை.
*
மார்கழி – 10.
*
பூக்களின் மேல் சிறுவண்டுகள்
விரட்ட மனம் வரவில்லை தோழி
பறிக்கத் துணிவு கொடு கண்ணா!.
*

பார்வை...!! ( ஹைக்கூ )

மார்கழி – 7.
*
சாணிக்குக் குளிராமோ?
பூசணிப்பூ போர்த்தி விட்டாள்
மார்கழி கோலம்பேட்டப் பெண்.
*                                 
மார்கழி – 8.
*
பாம்பணையில் பள்ளிகொண்டு
பார்வையிட்டாயா பரந்தமா?

சென்னையின் சோக வெள்ளம்.
*

திங்கள், 21 டிசம்பர், 2015

வலம்புரிசங்கு...!! ( ஹைக்கூ )


*
ஆழ்கடலில் மூச்சடக்கி
ஆயுட்காலமெலாம் எவர்க்காக?
உயிர் வாழ்கிறது வலம்புரிசங்கு.
*
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க, நாளும்
சித்திக்குமாம் சிவனருள்.

*

சனி, 19 டிசம்பர், 2015

மார்கழி...!! ( ஹைக்கூ )


*
விடியல் பனிப் பொழிவு
நீராடும் குருவிகள்
வீதியில் திருப்பாவை ஓசை.
*
ஈர்க் குளிரில் பூக்கள்
நோன்பு பாவையர்கள் வலம்
கைகளில் கற்பூரத் தீபம்.
*
பனிக்காற்றின் இசைக் கேட்டு
குடம் நிறைக்கும் பசுக்கள்.
கழுத்து மணியசைக்கும்.
*
விஞ்ஞானம் பறித்துக் கொண்டது
அழகிய மங்கையர்கள்
தயிர்கடையும் மத்தோசை.
ந.க.துறைவன்.
*

புதன், 16 டிசம்பர், 2015

மார்கழி - உலக சர்வமத மாதம்...!!

ஹைபுன்
*
பருவகாலங்களில் மார்கழி பனிக்காலம் இயற்கை மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடை.எனலாம். ‘ மாதங்களில் மார்கழி நான் ‘ என்கிறான் பகவத்கீதையில் கண்ணன்.. மார்கழி மாதத்தை எல்லா ஆன்மீக இலக்கியங்களும்  மிகப் போற்றி விதந்தோதுகின்றன. ஆண்டாள் மார்கழியில் மாதவனை துயில் எழுப்புகிறாள். சோம்பித் துயிலும் பெண்தோழிகளை எழுப்பி, விழி்ப்புணர்வையூட்டித் துணைக்கு அழைக்கிறாள். ஏசுவின் பிறப்பு, இஸ்லாமின் மிலாடி நபி என விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மார்கழி மாதம் உலகெங்கும் உள்ள ஆன்மீகவாதிகளின் புனித மாதமாகவும் திகழ்கின்றன.என்பதை வரலாற்றில் என்றும் காணலாம்.
*
1.                              
அமைதி மௌனம் சக்தி தரும் ` 
ஆன்மீக உலகம் போற்றும்      
மாதம் மார்கழி. 
*
2.
ஆண்டாள் போற்றும்
ஆன்மீக மாதம். 
மார்கழி்   
ந.க.துறைவன்.

சனி, 12 டிசம்பர், 2015

குரல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
கேட்ட குரல் இல்லை
பழகிய குரல் இல்லை
அந்நியன் குரல்“
*
No voice is heard
Not Familiar Voice
Stranger voice
*

வியாழன், 10 டிசம்பர், 2015

அழகு...!! ( ஹைக்கூ )


*
குளத்திற்குள் எத்தனை நாளிருந்தாலும்
தவளை அறிவதில்லை
தாமரையின் அழகு.
நா.முத்துநிலவன் – ‘ முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே..! “ – நூல் – பக்கம் 65.
தகவல் ந.க.துறைவன்.

*

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

அதிர்ச்சி

புயல்மழையின் மிரட்டல்
புரியாமல் தவிக்கின்றனர்
மனஅதிர்ச்சியில் மக்கள்.
ந.க.துறைவன்.