வியாழன், 29 டிசம்பர், 2016

கடன்...!! ( சென்ரியு )



TEA TIME  -  டீ டைம்.
13.
டீ  குடித்த  கடன்
கேட்டதால் தகராறு
கெடு விதித்து குடித்தார் டீ.
*
Tea swallowed credit
Asked dispute
Imposed deadline and drank tea.

*

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

நாய்...!! ( சென்ரியு )



TEA TIME  -  டீ டைம்.
12.
டீக் கடை வாசலில்
காத்திருக்கிறது நாளெல்லாம்
பொறைக்காக நாய்.
*
Tea shop threshold
All the days of waiting
Suffer for the dog.

*

வெள்ளி, 23 டிசம்பர், 2016

இலவசம்...!! ( சென்ரியு )




TEA TIME  - டீ டைம்.
11.
நாலு டீ வாங்கினாள்
கட்டிக் கொடுத்தார் மாஸ்டர்
இலவசமாக சர்க்கரை.
TEA got four
Master gave up

Sugar free.
*

ஓற்றுமை...!! ( சென்ரியு )




TEA TIME  - டீ  டைம்.
10.
தேனீர் கடைகளில் வாழ்கின்றன
மக்களின் ஓற்றுமையின் வலிமை
இந்தியாவின் ஆன்மா.
*
Found in tea shops
The strength of the people unite,
India's soul.

*

வியாழன், 22 டிசம்பர், 2016

நேரம்...!! ( சென்ரியு )



TEA TIME  - டீ டைம்
9.
பஸ் வரும்நேரம் கேட்டறிந்தான்
ஊர்போய் சேர்வதற்கு
தேனீர் குடித்த வெளியூர்க்காரன்.

புதன், 21 டிசம்பர், 2016

வாசகர்கள்....!! ( சென்ரியு )

TEA TIME  -  டீ டைம்.
7.
பரபரப்பான செய்திகள் வாசிக்க
டீக் கடையில் காத்திருக்கிறார்கள்
கிராமத்து வாசகர்கள்.
*
Read the exciting news
Tea in the store waiting
Readers village.

*

செவ்வாய், 20 டிசம்பர், 2016

புத்துணர்ச்சி...!! ( சென்ரியு )


TEA TIME  -  டீ டைம்.
1.
அதிகாலை பனிப் பொழிவு
பாய்லர் எழுப்பிய புகை
தயாராகிறது புத்தம் தேனீர்
2.
அமைதியான விடியல் தருணம்
கொதிக்கிறது நுரைத்து
தேனீர்த் தூள் மணம்.

3.
கறந்த பால் கொண்டு வந்தான்
தேனீர் பருகி சென்றான்
பரபரப்பாய் பால்காரன்.
4.
உதட்டில் இனிப்பு
சூடான தேனீர் பருகுவோர்
மனதில் புத்துணர்ச்சி சிலிர்ப்பு.
5.
ஓட்டுநரும் நடத்துநரும் இறங்கி
தேனீர் பருகிய பின் புறப்படுகிறது
ஊரைக் கடந்து முதல் பஸ்..

புதன், 14 டிசம்பர், 2016

புற்கள்...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.
*
புயல்மழை காற்றுக்கு அஞ்சாமல்
துணிவாய் என்றும் வாழ்கின்றன
வெளி எங்கும் புற்கள்.
*                     
Defying wind and rainstorm
Who is willing to live
Nowhere outside grasses.
*


செவ்வாய், 13 டிசம்பர், 2016

கால அளவு...!! ( ஜென் கதை )





ஜென் குரு ஒருவர், தனது சீடர்களிடம் “ நமது வாழ்க்கையின் கால அளவு என்ன? ” என்று ஒரு முறை கேட்டார்.
அதற்கு சீடர்களிடமிருந்து “ ஐம்பது வருடங்கள், எழுபது வருடங்கள், நூறு வருடங்கள் “ என பல்வேறு பதில்கள் கிடைத்தன. ஒவ்வொன்றிற்கும்
 “ இல்லை, தவறு ” என்பதையே பதிலாக கூறினார் குரு.
இறுதியாக, “ இரண்டு சுவாசங்களுக்கு இடைப்பட்ட காலமே, நமது வாழ்க்கையின் கால அளவு என்றார் குரு.
ஆதாரம்  தி இந்து – வணிகநூலகம்  பகுதி – 02-11-2016.
தகவல் . ந.க.துறைவன்.

*

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

கார்த்திகை தீபம் ( ஹைபுன் )




கார்த்திகை தீபம்.

கார்த்திகை மாதத்தில்தான் நாம் மலைகள் பற்றி நினைவுப்படுத்திக் கொள்கிறோம். நாம் எப்பொழுதும் மலைகளின் நேரடிப் பார்வையில் வாழ்கின்றோம். நாம் இல்லையென்றாலும், மலைகள், பிரபஞ்சம் இருக்கும் வரை உயிர்வாழும் தன்மைப் படைத்தவைகள். இயற்கை உபாதைகளால் அவைகளுக்கு ஊறுநேரும் போதுதான் வெடித்துச் சிதறி உயிரிழக்க நேரிடலாம்.  மக்கள் வளமாக வாழ்வதற்கு அவைகள் மழை தருவதற்கும் இன்னும் பிற வளங்கள் தருவதற்கும் உதவிகரமாக விளங்குகின்றன.
இன்னும் எவ்வளவோ வழிகளில்
வளம்தரும் கருப்பு சுரங்கம்
மக்கள் நேசிக்கும் மலைகள்.

*

வியாழன், 8 டிசம்பர், 2016

சேமிப்பு...!! ( சென்ரியு )




எல்லா ஆசைக் கனவுகளை
எப்பொழுதும் வங்கி சேமிப்பில்
நிரப்பி கொண்டேயிருக்கிறது மனம்.

*

சனி, 3 டிசம்பர், 2016

கோரிக்கை..!! ( சென்ரியு )

Senryu – Tamil / English.

செல்லக் குழந்தையின்
சிரிப்பில் இருக்கிறது
தேவையான கோரிக்கை.
*
The baby's
There's smile
The request.

N.G.Thuraivan.

வியாழன், 1 டிசம்பர், 2016

வயல்...!! ( சென்ரியு )

வயல் நாற்றாங்காலோடு
ஒட்டியிருக்கிறது

விவசாயியின் வாழ்க்கை

ந.க.துறைவன்..