திங்கள், 29 பிப்ரவரி, 2016

இறகு...!! 9 ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
இறகு உதிர்ந்தது
எதற்கு அடையாளமாய்
இணைத் தேடிய பறவை.
*
Feather falls
Pictured
Twitter co-scouring.

*

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

முத்துச்சிப்பி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;.
*
விழுந்தது  மழைத்துளி
மூடிக்கொண்டது
உள்ளே முத்துச்சிப்பி,
*
The rains fell
Covered
Inside the Pearl,

கவிஞன்...!!

போலந்து கவிஞரான டேட்யூஸ் ரோஸ்விக்ஸின் ஒரு கவிதை.
*
கவிஞன் என்பவன் யார்?
கவிஞன் என்பவன் கவிதை எழுதுகிறவன்
கவிஞன் என்பவன் கவிதை எழுதாமல் இருக்கிறவன்.
கவிஞன் என்பவன் தளைகளைத் தகர்ப்பவன்
கவிஞன் என்பவன் தளைகளைப் பூணுகிறவன்
கவிஞன் என்பவன் நம்புகிறவன்
கவிஞன் என்பவன் நம்ப முடியாமல் போகிறவன்
கவிஞன் என்பவன் பொய் சொன்னவன்
கவிஞன் என்பவன் பொய்களைப் பெற்றுக் கொண்டவன்.
வீழ முனைபவன்
தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறவன்
கவிஞன் என்பவன் விலகிப்போக முயல்பவன்
கவிஞன் என்பவன் விலகவே இயலாதவனும் கூட.
*
ஆதாரம் ; காலச்சுவடு – பிப்ரவரி – 2016 – பக்கம் 69.
தகவல் : ந.க.துறைவன்.

*

சனி, 6 பிப்ரவரி, 2016

ஞானம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
அவமானங்கள்
இலவசமாய்  கற்று தரும்
அனுபவ ஞானம்.
ந.க.துறைவன்.
*
Insults
Enjoy learning free
Empirical knowledge.
*

வியாழன், 4 பிப்ரவரி, 2016

முதல் மலர்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
இனிய காலைப்பொழுது குளிரில்
விழித்த முதல் மலர் எதுவென்றுர
நம்மால் காண முடியுமா?
*
Cool off in the morning
What woke up the first flower
Can you see?

N.G.Thuraivan.

புதன், 3 பிப்ரவரி, 2016

சூழல்...!! ( சென்ரியு )

Haiku – Tamil / English.
*
சுற்றுச் சூழல் மாசு
மாநாட்டில் விவாதித்தன
சிட்டுக் குருவிகள்.
*
Environmental pollution
The conference discussed
Sparrows.

*

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ஞானம்...!!


*
மூங்கில் காட்டை அழித்து
ஒரு புல்லாங்குழல் செய்தேன்
அப்பொழுதுதான் தெரிந்தது
அது ஊமையென…
ஆதாரம் : ஓஷோ டைம்ஸ் - தமிழ் இதழ் – செப்டம்பர் – 2001.- பக்கம் 11
தகவல் : ந.க.துறைவன்.

*