வியாழன், 30 ஏப்ரல், 2015

மே தினம்...!!

இன்று
உலகத் தொழிலாளர் தினம்.
உழைக்கும்
உலக மக்கள் அனைவருக்கும்
தோழமை
நல்வாழ்த்துக்கள்.
*

எலி...!!

*
அகப்பட்டது ஆந்தையிடம்
இருட்டில்
இரைதேட புறப்பட்ட எலி.
*

அம்மாக்கள்....!! [ சென்ரியு ]

*
விடுமுறை விட்டதிலிருந்து
குழந்தைகளின் அட்டகாசம்
தாங்க முடியாத அம்மாக்கள்.          
*

புதன், 29 ஏப்ரல், 2015

எறும்பு...!! =[ சென்ரியு ]

*
இரவு ஆழ்ந்தத் தூக்கம்
கெடுத்து விட்டது
காதிற்குள் புகுந்த எறும்பு.
*

திங்கள், 27 ஏப்ரல், 2015

சலனம்...!! [ ஹைக்கூ ]

*
மேலடுக்கு வெப்ப சலனமழை
பொழிந்தது
குளிர்ந்தது மனச்சலனம்.
*

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

மதினி...!! [ SENRYU / சென்ரியு ]


*
அடக்கியாள்கிறாள் அன்பால்
அதிகாரக் குவி மையம்
மதினியின் இடையில் சாவிக்கொத்து.
*
நேருக்கு நேர் பேசுவதில்லை
பேச்சிற்கும் மறுப்பேச்சில்லை
வீட்டுக்கு முதலமைச்சர் மதினி.
*
எள்ளும் கொள்ளும் வெடித்தாலும்
எப்பொழுதும்
மதினியின் சிரிப்பு மத்தாப்பூ.

*

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

மீசை...!! [ SENRYU / சென்ரியு ]

*
ஐஸ் கிரீம் சாப்பிட்டான்
உருகிக் கரைந்தது
உதட்டில் ஆரஞ்சுகலர் மீசை.
*

வியாழன், 23 ஏப்ரல், 2015

காவல்...!! [ HAIKU / ஹைக்கூ }

*
வேகமாய் வரும் அலைகள்
விளையாடும் குழந்தைகள்

காவலுக்கு கரையில் படகுகள்.
*

புதன், 22 ஏப்ரல், 2015

அ....நீதி...!! [ SENRYU / சென்ரியு ]

அ…நீதி….!!
*
காலங்களை வென்று நிற்கிறது
சத்திய வாக்குகள்.
*
நிதிபதிகளாகி விட்டார்கள்
நீதிபதிகள்.
*
உண்மைகள் வலுவிழந்து
திருத்தப்படுகின்றன தீர்ப்புகள்.

*

வாழ்த்துக்கள்...!!

இன்று உலகப் புத்தக தினம்.
நல்வாழ்த்துக்கள்.
ந.க. துறைவன்.           

வால் பையன்கள்...!! [ SENRYU / சென்ரியு ]


*
அருகில் யாருமில்லை
எடுத்துப் பூசிக்கொண்டான்
முகமெல்லாம் சாந்து.
*
ஊரிலிருந்து அக்கா வந்தாள்
எல்லோருக்கும் உதறல்
வன்பேச்சில் வம்புக்காரி.
*
தாங்கவும் முடியவில்லை
சமாளிக்கவும் முடியவில்லை
வால் பையன்களின் குறும்புகள்.
*

திங்கள், 13 ஏப்ரல், 2015

ரதியோடு வருகிறான்...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
“ மன்மத “ தமிழ்ப் புத்தாண்டு
வரவேற்று
பூத்துக் குலுங்குகின்றன மரங்கள்.
*
மகிழ்ச்சிக்குள் மறைந்திருக்கிறது
மனிதர்களின்
மன்மத வாழ்க்கை.
*
சித்திரைப் பெண்ணாக வருபவள்
இந்த ஆண்டு
மன்மத – ஆணாக வந்திருக்கிறாள்.
*

இன்றிரவு...!! [ ஹைக்கூ ]

*
மழை பெய்துக் கொண்டிருக்கிறது
இசைத்துக் கொண்டிருக்கிறது காற்று
குளுமையாக இருக்கும் இன்றிரவு.
*

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

சொற்கள்...!! [ சென்ரியு ]

*
ஆறாத ரணக் காயப்படும்
மன வல்லமைப் படைத்தது
ஆயுதங்களை விட சொற்கள்.
*

நிலா...!! [ ஹைக்கூ ]

*
எங்கே ஒளிந்திருக்கிறேன்
என்று தேடுகிறாளோ?
சவுக்குத் தோப்பில் நிலா.
*

அனுபவம்..!! [ சென்ரியு ]

*
ஆண்டுக்காண்டு வித்தியாசமாய்
அனுபவிப்பவர்க்குத் தெரியும்
வெயிலின் அருமை
*

ஒரே தரம்...!! [ HAIKU / ஹைக்கூ ]

*
வாழ்க்கை ஒரு வரம்
மனிதருக்கு
வாழக் கிடைப்பது ஒரே தரம்.

*

வியாழன், 9 ஏப்ரல், 2015

அஞ்சலி்...

*
தமிழகத்தின் முன்னோடி எழுத்தாளரான
திரு.ஜெயகாந்தன் அவர்களின் மறைவிற்கு
எனது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
*

புதன், 8 ஏப்ரல், 2015

தனி அழகு...!! [ சென்ரியு ]

*
மின்விளக்கின் ஒளியில்
உடையலங்காரம் தனி அழகு
ஜவுளிக் கடைப் பொம்மைகள்
*

இரங்கல்...!!

துப்பாக்கி வெடிச் சத்தம்
துடித்தன உயிர்கள்
வனமெங்கும் பறவைகள் அழுகை
*

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

கத்திரி வெயில்...!! [ HAIKU ஹைக்கூ ]


*
சித்திரையே வருக
தூறாத மழைத்துளிகள்
வறட்சியில் நதிகள்.
*
உக்கிரமான கத்திரி வெயில்
அவசரமாய் கடக்கிறது
மரக்கிளைத் தேடிக் காக்கைகள்.

புதன், 1 ஏப்ரல், 2015

நியதி...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
இருப்பது எதுவும் எனதல்ல
இருக்கப் போவதும் எனதல்ல
இருக்கின்றது யாருக்குச் சொந்தம்.
*
மழையை எதிர்ப்பார்த்து
கணந்தோறும் காத்திருக்கிறது
காட்டில் வளரும் மரங்கள்.
*
கூர்மையான அறிவு இருக்குமோ?
நியதி தவறாமல் வாழும்
ஜீவராசிகளுக்கு…