*
இருப்பது
எதுவும் எனதல்ல
இருக்கப்
போவதும் எனதல்ல
இருக்கின்றது
யாருக்குச் சொந்தம்.
*
மழையை எதிர்ப்பார்த்து
கணந்தோறும்
காத்திருக்கிறது
காட்டில்
வளரும் மரங்கள்.
*
கூர்மையான
அறிவு இருக்குமோ?
நியதி தவறாமல்
வாழும்
ஜீவராசிகளுக்கு…
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக