*
காற்றில்
சுமந்து வருகிறது வாசம்
இலைகள் மட்டும்
தெரிகிறது
மலர்ந்த
மனோரஞ்சிதப் பூக்கள்.
*
எல்லா நேரமும்
கவிதைக்குள்
இருப்பதில்லை
மனம்.
*
தகிக்கும்
வெயிலில் மூதாட்டி
புங்கம்
இலைப்போர்த்திய கூடை
உள்ளே குளிர்
நுங்குகள்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக