செவ்வாய், 24 மார்ச், 2015

மனோரஞ்சிதம்....!! [ HAIKU / ஹைக்கூ ]


*
காற்றில் சுமந்து வருகிறது வாசம்
இலைகள் மட்டும் தெரிகிறது
மலர்ந்த மனோரஞ்சிதப் பூக்கள்.
*
எல்லா நேரமும்
கவிதைக்குள்
இருப்பதில்லை மனம்.
*
தகிக்கும் வெயிலில் மூதாட்டி
புங்கம் இலைப்போர்த்திய கூடை
உள்ளே குளிர் நுங்குகள்.
*

சனி, 21 மார்ச், 2015

தேடி...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
அழகாகத் தெரிந்தது அருகில்
தொலைவில் இருப்பதும்
அதே அழகோடு….
*
கோடைக் காலம் அறிந்து  
அலைகி்ன்றன பறவைகள்
நீர்நிலைகள் தேடி…!!
*
ஒரு நிலையில்லாமலிருக்கிறது
ஒரு நிலைப்படுகின்றது
தியான நிலையில் மனம்.

புதன், 18 மார்ச், 2015

ஆழம்...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
கண்டறிய முடியவில்லை?
வாழும் உயிரினங்களுக்கு
கடலின் ஆழம்.
*
கண்ணுக்குத் தெரியாமல் இயங்குகிறது
உடல் உறுப்புகளில் எல்லாம்
பிரபஞ்ச வெளியின் அணுக்கூறுகள்
*
தூக்கத்தின் இடைஇடையே
தொல்லைச் செய்தன கனவுகள்
விழித்திருந்தன விண்மீன்கள்.
*

சனி, 14 மார்ச், 2015

கை மேல் பலன்...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
எதையோ நினைத்தான்
நடக்கவேண்டுமென தவித்தான்
கை மேல் கிடைத்தது பலன்.
*
அயர்ந்து தூங்கும்
முயலை எழுப்பி விட்டது
படபடப்பாய் வந்த மழை.
*
உரக்கக் கத்தினான்
எதிரொலித்தது மலை

அவன் பெயரை…
*

செவ்வாய், 10 மார்ச், 2015

அறிவாள்...!! [ SENRYU / சென்ரியு [


*
வாசலில் வந்து நிற்கிறது பசு
பசி என்று கேட்பதில்லை என்றும்
தின்னக் கொடுத்தேன் அகத்தி்க்கீரை
*
இயற்கைச் சூழல் கேடு
மனிதன் இழக்கும் கொடுமை
பகிர்ந்துக் கொள்ளும் பறவைகள்.
*
கை வைத்தியம் அறிவாள்
பக்குவமாய் தயாரிக்கிறாள்
கற்றாழையில் கண்மை.

*

குளிர் நிழல்...!! [ HAIKU / ஹைக்கூ }


*
கடந்த காலம் மறந்தான்
எதிர்க்காலத்தை நினைத்தான்
தொலைத்து நிற்கிறான் நிகழ்காலம்
*.
தணியாத வெயில் தீராத தாகம்
இளைப்பாற்றுகிறது
புங்கமரக் குளிர் நிழல்.
*
யாரென்று தெரியவில்லை
குரல் கேட்கவில்லை
எதிரொலிக்கின்றது மலை.
* ஸ

வெள்ளி, 6 மார்ச், 2015

மனவெப்பம்...!! [ சென்ரியு / senryu. ]


*
கோடை வெப்பம் வெளியில்
மன வெப்பம் உள்ளுக்குள்
முகமெல்லாம் வியர்வைத் துளிகள்.
*
 எந்த காரியமும் நடக்கவில்லை
சலிப்போடு உள்நுழைந்தார்
எதிரே வந்தவளைச் சபித்தார்.
*
வாசலில் விழுந்திருந்தது தபால்கள்
எடுத்து வந்து தருகிறாள்
தாத்தாவிடம் செல்லப் பேத்தி.

*

செவ்வாய், 3 மார்ச், 2015

திங்கள், 2 மார்ச், 2015

துவக்கம்....!! [ Senryu / சென்ரியு ]


*
வெயிலுக்கு ஒதுங்கிட
மரநிழல் தேடுகிறது
மேயப் போகும் எருமைகள்
*
பட்ஜெட் கேட்டவர்கள் படித்தவர்கள்
பாராட்டினார்கள்
ஓட்டுப் போட்டவர்கள் ஏமாந்தார்கள்
*
சுட்டெரிக்கும் வெயில்
தாகமாய் நடக்கும் மனிதர்கள்
பாதையோரம் தர்பூசணி
*