வெள்ளி, 26 ஜூன், 2020

வழித்துணை

வழித்துணை


1.
கொடுத்தவர் அப்பா
வாங்கியவள் அம்மா
பரிசாக வந்தவன் நான்.
2.
பால் முற்றிய சோளக்கதிர்கள்
காவல் பொம்மை ஏமாற்றி
இரைதேடும் குருவிகள்.
3.
காவியுடை கழுத்தில் ருத்திராட்சம் கையில் பிச்சைப்பாத்திரம்
வழித்துணைக்கு சன்யாசினி.
4.
எனக்கு இறைவனைத் தெரியாது
இறைவனுக்கு என்னைத் தெரியாது
ஆன்மாவே என் அப்பா.
5.
எழுதாதப் படைப்பு கலைமனம்
குறைந்த பேச்சு தெளிந்த ஞானம்
புத்தனின் மௌனமே கவிதை.
6.
நசுக்கி அழிப்பதற்குள்
தப்பியோடி விட்டது இன்னும்
எறும்பு கடித்த இடத்தில் வலி.
7.
உறவு நெருக்கம்
உறக்கம் கெடுத்தது
பூவும் அல்வாவும்.
8.
கீழே தாழ்ந்து நிற்கிறேன்
ஆணவத்தோடு மௌனமாய்
அழகு சிதைந்த மலைக்கோட்டை.
9.
நீண்ட நாள்களாக கதவு சாத்தபட்டது
பக்தர்களைக் காணாது தவிப்பு
ஓய்வெடுக்கும் மூலவர்.
10.
பேசாத கற்சிலை அருகில்
காதல்மொழி பேசும் காதலர்கள்
பாதுகாக்கும் கல்தூண் யாளிகள்.
11.
அரை இருட்டில் கோயில் மண்டபம்
காதலர்கள் சந்திப்பு மறைவிடம் மௌனமாய் பார்க்கும் சிலைகள்.
12.
இணைந்து நடந்து வருகிறேன் உன் கூந்தல் சூடிய
மல்லிகைப்பூ வாசம் நுகர்ந்து.

ந க துறைவன்.