வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

தாழம்பூக்கள்

தாழம்பூ 1. ஏகாந்தவெளியில் கூர்பார்வை உயரத்தில் சுற்றும் கழுகுகள் மலைமீது இறங்கி ஓய்வு. 2. கருமேகங்கள் நகர்கின்றன நகரின் தலைக்கு மேலே தாழப் பறக்கும் வண்ணத்திகள். 3. இருகை விரல்கள் பற்றி சுவைத்து பால்குடிக்கும் குழந்தை சிரிக்கிறது தாய்முகம் பார்த்து. 4. பந்துகளாய் வெடித்தன நீரின் மேல் நீரிக்குமிழ்கள் மீன்கள் விட்டன உயிர்மூச்சு. 5. நீர்குமிழ்கள் உடைந்தன காற்று விடுதலையானது ஏதுமற்ற சூன்யம். 6. அம்மையே வருக தாயினும் சாலப் பரிந்து பால் நினைந்தூட்டுவாய். 7. வாழைமரத்தின் கீழ் வளர்கின்றன கன்று மேலே செவ்வாழைக்குலைகள். 8. கோபத்தோடு வீசிய காற்று பட்பட்டென்று அடித்து கிழித்தது வாழையிலைகளை. 9. அவன் யோசிக்கிறான் சற்றுமுன் வரை சிரிச்சா தவறாகுமோவென. 10. சிரிக்கலாமா? வேண்டாமாவென முக்கியமான பார்த்து நிற்கின்றனர் உறவுகள் மத்தியில் சிலர். 11. உன் நிழலில் இளைப்பாற எனக்கு கொஞ்சம் பூரண ஓய்வு கிடைக்குமா? 12. ஒரு மடியில கணனி ஒரு மடியில் குழந்தை பார்க்கிறாள் ஆபீஸ் பைல்கள். 13. உணர்வினைக் கிளர்த்தும் உன்னதப் பூ காமப்பூ... தாழம்பூ... 14. விடுதலையானது கூடையைத் திறந்ததும் கோழிக்குஞ்சுகள். 15. விரும்பி சாப்பிட்டாள் அவளுக்கு பிடித்த ஆவிக் குழாய்ப் புட்டு. 16. செல்போன் வேட்டையில் சிக்கியது இன்று அழகிய முயல்குட்டி. 17. படுக்கை உதறினாள் கசங்கிய பூக்கள் சில அவள் இல்லாத இரவு. 18. காலம் கடந்த பின் ஞானம் மோனம். ந க துறைவன்.