ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
லேபிள்கள்
- அஞசலி... (5)
- அறிமுகம் (1)
- இரு வரி கவிதை (1)
- இருவரி கவிதை (1)
- இருவரி கவிதைகள் (2)
- கட்டுரை (5)
- கருத்து (4)
- கவிதை (38)
- கவிதை. (1)
- கவிதைகள் (5)
- குக்கூ (1)
- குறுங்கவிதை. (1)
- குறுங்கவிதைகள் (1)
- சென்ரியு (122)
- சென்ரியு. (40)
- துணுக்கு (3)
- நல்ல நாள் (1)
- நூல் அறிமுகம். (15)
- நூல் விமர்சனம் (1)
- படம் (14)
- பரேகு ஹைக்கூ (4)
- புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)
- புதுக் கவிதை (1)
- புதுக் கவிதைகள் (1)
- பொங்கல் நல்வாழ்த்துக்கள் (1)
- மினி கவிதை (5)
- மினி கவிதைகள் (5)
- லிமரைக்கூ (16)
- வாழ்த்து. (1)
- வாழ்த்துக்கள் (17)
- ஜென் (2)
- ஜென் கதை (1)
- ஜென்கதை (4)
- ஹைக்கூ (394)
- ஹைக்கூ கவிதை (16)
- ஹைக்கூ கவிதைகள் (18)
- ஹைக்கூ கவிதைகள். (2)
- ஹைக்கூ. (76)
- ஹைபுன் (42)
- ஹைபுன் கவிதைகள் (1)
- HaiKu (5)
- Haiku. (1)
- Quotes (2)
வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019
தாழம்பூக்கள்
தாழம்பூ
1.
ஏகாந்தவெளியில் கூர்பார்வை
உயரத்தில் சுற்றும் கழுகுகள்
மலைமீது இறங்கி ஓய்வு.
2.
கருமேகங்கள் நகர்கின்றன
நகரின் தலைக்கு மேலே
தாழப் பறக்கும் வண்ணத்திகள்.
3.
இருகை விரல்கள் பற்றி
சுவைத்து பால்குடிக்கும் குழந்தை
சிரிக்கிறது தாய்முகம் பார்த்து.
4.
பந்துகளாய் வெடித்தன
நீரின் மேல் நீரிக்குமிழ்கள்
மீன்கள் விட்டன உயிர்மூச்சு.
5.
நீர்குமிழ்கள் உடைந்தன
காற்று விடுதலையானது
ஏதுமற்ற சூன்யம்.
6.
அம்மையே வருக
தாயினும் சாலப் பரிந்து
பால் நினைந்தூட்டுவாய்.
7.
வாழைமரத்தின் கீழ்
வளர்கின்றன கன்று
மேலே செவ்வாழைக்குலைகள்.
8.
கோபத்தோடு வீசிய காற்று
பட்பட்டென்று அடித்து
கிழித்தது வாழையிலைகளை.
9.
அவன் யோசிக்கிறான்
சற்றுமுன் வரை
சிரிச்சா தவறாகுமோவென.
10.
சிரிக்கலாமா? வேண்டாமாவென
முக்கியமான பார்த்து நிற்கின்றனர்
உறவுகள் மத்தியில் சிலர்.
11.
உன் நிழலில் இளைப்பாற
எனக்கு கொஞ்சம்
பூரண ஓய்வு கிடைக்குமா?
12.
ஒரு மடியில கணனி
ஒரு மடியில் குழந்தை
பார்க்கிறாள் ஆபீஸ் பைல்கள்.
13.
உணர்வினைக் கிளர்த்தும்
உன்னதப் பூ
காமப்பூ... தாழம்பூ...
14.
விடுதலையானது
கூடையைத் திறந்ததும்
கோழிக்குஞ்சுகள்.
15.
விரும்பி சாப்பிட்டாள்
அவளுக்கு பிடித்த
ஆவிக் குழாய்ப் புட்டு.
16.
செல்போன் வேட்டையில்
சிக்கியது இன்று
அழகிய முயல்குட்டி.
17.
படுக்கை உதறினாள்
கசங்கிய பூக்கள் சில
அவள் இல்லாத இரவு.
18.
காலம் கடந்த பின்
ஞானம்
மோனம்.
ந க துறைவன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக