ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
லேபிள்கள்
- அஞசலி... (5)
- அறிமுகம் (1)
- இரு வரி கவிதை (1)
- இருவரி கவிதை (1)
- இருவரி கவிதைகள் (2)
- கட்டுரை (5)
- கருத்து (4)
- கவிதை (38)
- கவிதை. (1)
- கவிதைகள் (5)
- குக்கூ (1)
- குறுங்கவிதை. (1)
- குறுங்கவிதைகள் (1)
- சென்ரியு (122)
- சென்ரியு. (40)
- துணுக்கு (3)
- நல்ல நாள் (1)
- நூல் அறிமுகம். (15)
- நூல் விமர்சனம் (1)
- படம் (14)
- பரேகு ஹைக்கூ (4)
- புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)
- புதுக் கவிதை (1)
- புதுக் கவிதைகள் (1)
- பொங்கல் நல்வாழ்த்துக்கள் (1)
- மினி கவிதை (5)
- மினி கவிதைகள் (5)
- லிமரைக்கூ (16)
- வாழ்த்து. (1)
- வாழ்த்துக்கள் (17)
- ஜென் (2)
- ஜென் கதை (1)
- ஜென்கதை (4)
- ஹைக்கூ (394)
- ஹைக்கூ கவிதை (16)
- ஹைக்கூ கவிதைகள் (18)
- ஹைக்கூ கவிதைகள். (2)
- ஹைக்கூ. (76)
- ஹைபுன் (42)
- ஹைபுன் கவிதைகள் (1)
- HaiKu (5)
- Haiku. (1)
- Quotes (2)
திங்கள், 2 செப்டம்பர், 2019
வெண்டை பரல்கள்.
1.
வெளிச்சமற்ற அறைக்குள்
என்ன செய்கிறது மறைவாய்
வலியில் பிரசவமான பூனை.
2.
விரல்களென நீண்ட காய்கள்
வெடித்து உதிர்ந்தன தரையில்
முதிர்ந்த வெண்டை பரல்கள்.
3.
சந்தர்ப்பம் தேடி பின்தொடர்ந்து
பெண்குறி முகர்ந்து பார்க்கும்
கலவிக்கு முன் நாய்.
4.
நானும் அவளும்
துண்டிக்கப்பட்டுள்ள இணைப்பின்
தொடர்பு எல்லைக்கு அப்பால்.
5.
அழுகுரல் ஒலி கேட்டு
துக்கம் விசாரிக்கப் போகிறது
கூடவே அன்போடு நாய்.
6.
ஆத்தாளுக்குப் பிடிக்கும்
ஆரோக்கியத்திற்கு பிடிக்கும்
சுவையான ஆடிக் கூழ்.
7.
எதையோ பார்த்து மிரண்டு
கயிறறுத்து கோபமாய் ஓடுகிறது
மரத்தில் கட்டிய மாடு.
8.
அழகாய் சேர்த்து கட்டியது
பிச்சி பிச்சி எறிகிறது
குரங்கு கையில் பூமாலை.
9.
மடை திறந்ததும் சீராக
வயலுக்கு பாய்கிறது நீர்
அலகால் அருந்துகிறது குருவி.
10.
ஏதோ நடக்கப் போகிறதென்று
ஆழ்ந்த யோசனையில் தீவிரமாய்
இடம் பெயர்ந்தது பூனை.
11.
குவிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள் மீது
படுத்து ஓய்வெடுக்கிறது
அலைந்து ஓய்ந்த தெருநாய்.
12.
இரவு அமைதி
கிளிகள் மௌனம்
இலைகள் இசை.
13.
என்ன பிரச்சனையோ?
பிரார்த்தனை யோ? அம்பாளை
நெட் சுத்தி சுத்தி வலம் வருது.
14.
கொழுக்கட்டையில்
பதிந்திருக்கிறது அவள்
கைவிரல் ரேகைகள்.
15.
வெள்ள அபாய எச்சரிக்கை
கரையோரம் கிராமங்களுக்கு
அடித்து அறிவிக்கிறது தண்டோரா.
16.
தேரில் வலம் வந்தாள்
மக்கள் பார்த்து பரவசம்
வேப்பிலைக்காரிக்கு சந்தோஷம்.
17.
அம்பாள் பேசவில்லை
பூசாரி பேசினான் நிறைய
குறி கேட்ட பெண்கள் முகம் மாறின.
18.
குளிரான மழை நாள்
மனம் சூடேற விரும்பி
பாரில் குடித்தான் பீர்.
19.
மனவனத்தில் எவரும்
நுழைய அனுமதியில்லை
உள்ளே பூச்சிகள் இரைச்சல்.
20.
எத்தனை நாளாச்சு?
உடலுறவு காணாமல்
சுருட்டிய பாய் மூலையில்.
21.
கவ்வி பிடித்தது எலியை
வேகமாய் பாய்ந்து
சுவரேறி குதித்து பூனை.
22.
கூர் பார்வைப் பதித்து
ஏதோவொரு தேடலில் உன்
கருவண்டு விழிகள் நிலைத்து.
23.
மதில்சுவர் தாண்டி தாண்டி
பயிற்சி எடுக்கின்றன சிலநாளாய்
அழகான குட்டி அணில்கள்.
24.
உயரம் தாண்டுதல் போட்டியில்
முதல் பரிசு வென்றது
கறுப்பு பூனை.
ந க துறைவன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக