வியாழன், 12 செப்டம்பர், 2019

புத்தன்

1. காற்றின் தழுவல் உணர்வு உதிர்ந்த இலைகள் சத்தம் தியானம் கலையாத புத்தன். 2. அரை இருட்டு உள்ளே விழித்திருக்கும் அகல்விளக்கு புத்தன் அருகில் ஒளி. 3. புத்தனா? அத்திவரதனா? குழப்பத்தில் பக்தர்கள் நெரிசலில் சர்வதரிசனம். 4. உடல் ஓய்வெடுக்கிறதா? அசைவின்றி சாய்ந்து உறக்கம் விழிப்புணர்வில் புத்தன். 5. பூமிக்கு இறங்கி வந்து கிரிவலம் வேடிக்கைப் பார்க்கிறது மலை உச்சியில் நிலா. 6. பிச்சை பாத்திரம் கையில் பசிக்கு உணவு கிடைக்குமாவென துறவியைத் தொடரும் நாய். 7. குகையில் ஆழ்ந்த அமைதி தியான அதிர்வலைகள் வெளியே பௌர்ணமி ஓளி. 8. மறைந்தது நிலவு சிலநொடிகள் இருள் முழு சந்திர கிரகணம். 9. புத்தனை ஏற்றாள் மனைவி புத்தனை ஏற்றான் மகன் சித்தார்த்தனைத் துறந்தார்கள். 10. பதிந்த காலடிச் சுவடுகள் பின்தொடரும் ஆனந்தன் புத்தனின் பின்நிழல். 11. பாதையெங்கும் இருட்டு அரூபம் கடந்து போகிறது அருகில் மர இலைகள் சலசலப்பு. 12. விழிகளுக்குள் உலகம் விரல்நுனியில் வெளி சும்மா இருக்கும் மௌனம். ந க துறைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக