*
பசுமை நிறைந்த
வெளி
பலத்த மழை
மகிழ்ச்சியில்
மரங்கள்.
*
படித்துறையில்
அமர்ந்து
விளையாட்டைப் பார்த்தேன்
அருகில் வரத் துடித்தன
மீன்கள்.
*
பிணத்தை புதைத்து
விட்டு
எல்லோரும் திரும்பினார்கள்
மழையில் கரைந்தது
மண்மேடு.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக